CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (17.09.2025-18.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (17.09.2025-18.09.2025)


மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார்:

  • இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவரில் 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசி அசத்தினார். அவர் 77 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 91 பந்தில் 14 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மந்தனாவின் 3-வது ஒருநாள் சதமாகும். 
  •  இது இந்த ஆண்டு மந்தனாவின் 3-வது சதம் ஆகும். மேலும் இரண்டு வெவ்வேறு காலண்டர் ஆண்டுகளில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த உலகின் முதல் வீராங்கை என்ற சாதனையை மந்தனா படைத்துள்ளார். 2024-ம் ஆண்டில் அவர் நான்கு சதங்களையும் அடித்திருந்தார். 
  • அடுத்ததாக மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்துள்ளார். ஸ்மிரிதி மந்தனா 15 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். 8 சதங்களுடன் மிதாலி ராஜ் ஹர்மன்ப்ரீத் கவுர் 2-வது இடத்தில் உள்ளனர். 
  • மேலும் ஆசிய நாடுகளில் அதிக சதங்கள் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 
  • ஸ்மிரிதி மந்தனா, ஒருநாள் போட்டியில் 12 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களையும், டி20 போட்டிகளில் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் மந்தனா உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் உள்ளார்.


ஆபரேஷன் வீட் அவுட் :

  • இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் "ஆபரேஷன் வீட் அவுட்" நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 13-14, 2025 அன்று 39.2 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் நீரில் வளரக்கூடிய போதை தரும் தாவர வகைகளைப் பறிமுதல் செய்தது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட 7.8 கிலோ எடையுள்ள போதைப்பொருளை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,  இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டார்கள். 
  • 2025 ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 12 வரையிலான காலகட்டத்தில், தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கடத்தப்பட்ட 61.67 கிலோ போதைப்பொருட்களை டிஆர்ஐ அதிகாரிகள் தனித்தனியாக பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் கடந்த 20 நாட்களில் நாடு முழுவதும் சுமார் 108.67 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன


7-வது சர்வதேச கடல் பொறியியல் மாநாடு (ICOE 2025) :

  • சென்னை ஐஐடியின்  கடல்சார் பொறியியல் துறை, 7வது சர்வதேச கடல் பொறியியல் மாநாட்டை (ICOE 2025) செப்டம்பர் 14, 2025 முதல் செப்டம்பர் 18, 2025 வரை நடத்தியது.
  • 7-வது சர்வதேச கடல் பொறியியல் மாநாடு (ICOE 2025) , உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு முகவர் அமைப்புகளை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, கடல் பொறியியல், கடல் தொழில்நுட்பம், கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பெட்ரோலியப் பொறியியல் மற்றும் நீலப் பொருளாதார முயற்சிகள் ஆகியவற்றில் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டுறவுகளை வளர்ப்பதற்கான வழிவகை செய்தது.
  • மாநாட்டின் முக்கிய விளைவுகளாக, இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கான வரைபடத்தை வடிவமைக்கும் கொள்கை, தொழில் பரிந்துரைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துணைக்கடல் அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட கடல் கட்டமைப்புகள் குறித்த தொழில்நுட்ப விளக்கங்கள், வலுவான சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஈடுபாடுகள், அத்துடன் கடல் தொழில்நுட்பம் மற்றும் நிலையான கடல் மேம்பாட்டிற்கான ஒரு மையமாக இந்தியாவின் உலகளாவிய பார்வை மேம்படுத்தப்படுதல் ஆகியவை அடங்கும்.


உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 -  புதிய உலக சாதனை:

  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. 
  • உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) இறுதிச் சுற்றில் ஸ்வீடன் நாட்டு வீரர் அர்மாண்ட் டுப்லாண்டிஸ் 6.30 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலக சாதனையை படைத்தார் . இதன்மூலம் தனது உலக சாதனையை 14வது முறையாக அர்மாண்ட் டுப்லாண்டிஸ் முறியடித்துள்ளார். 
  • 2020 ஆம் ஆண்டு 6.17 மீட்டர் உயரம் தாண்டி அர்மாண்ட் டுப்லாண்டிஸ் உலக சாதனை படைத்தார். இதனையடுத்து கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ந்து அவரது சாதனையை 14 ஆவது முறையாக அவரே முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் தடியூன்றித் தாண்டுதல் (Pole Vault) போட்டியின் முடிசூடா மன்னனாக அவர் திகழ்ந்து வருகிறார்.

டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது:

  • இதில் பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார். 
  • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார். 
  • ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.

20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025: 

  • 20-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி 18.09.2025 நடைபெற்றது.
  • இறுதிப்போட்டி 6 த்ரோ முறையில் நடைபெற்றது. இதில் முதல் 3 த்ரோ முடிவில் இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருந்தார். இதுவே இவரது சிறப்பான த்ரோ ஆகும். மற்றொரு இந்திய வீரரான நீரஜ் சோப்ரா யாரும் எதிர்பார்க்காத வகையில் 8-வது இடத்தில் இருந்தார். 
  • முதல் 3 இடங்களில் வால்காட் 87.83, பீட்டர்ஸ் 87.38, தாம்சன் 86.6 ஆகியோர் இருந்தார். இதனை தொடர்ந்து நடந்து மீதமுள்ள 3 த்ரோ வீசப்பட்டது. 
  • இதன் முடிவில் வால்காட் (டிரினிடாடியன்) 88.16 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இந்த த்ரோ இந்த சீசனின் சிறந்த த்ரோ ஆகும். 
  • பீட்டர்ஸ் (கிரேனடா) 87.38 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். தாம்சன் (அமெரிக்கா) 86.67 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். 
  • இந்தியாவின் சச்சின் யாதவ் 86.27 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும் நீரஜ் சோப்ரா 84.03 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தை பிடித்தனர்.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-17th-18th-september-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)