செப்டம்பர் மாதம் 2025 (21.09.2025-23.09.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் / CHIEF MINISTER M.K. STALIN LAUNCHED THE CHENNAI ONE MOBILE APP :
- இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப், ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துத்திலும், ஒரே QR பயணச்சீட்டு மூலம் பயணம் செய்யும் வகையில் சென்னை ஒன் மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- TNPSC GK NOTES : CHENNAI ONE APP / சென்னை ஒன்' செல்போன் செயலி
கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் 12 புதிய இனங்கள் கண்டுபிடிப்பு / 12 NEW SPECIES DISCOVERED IN PERIYAR TIGER RESERVE IN KERALA:
- கேரளாவில் புகழ்பெற்ற பெரியார் புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு 207 பட்டாம் பூச்சிகள், 71 தட்டாம் பூச்சிகள் மற்றும் கேரளத்தின் அதிகாரப்பூர்வ பறவையான கிரேட் ஹார்ன்பில் உள்பட ஏராளமான பறவை இனங்கள் உள்ளன. இங்குள்ள பறவை இனங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு செய்யப்படுவது வழக்கம்.
- அதன்படி தற்போது பெரியார் புலிகள் சரணாலயம், கேரள வனத்துறை மற்றும் பெரியார் புலிகள் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியவை இணைந்து திருவனந்தபுரத்தை தளமாக கொண்ட ஒரு அமைப்பான திருவிதாங்கூர் இயற்கை வரலாற்று சங்கத்தின் ஒத்துழைப்புடன் கடந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை விரிவான கணக்கெடுப்பு பணியை நடத்தின.
- இந்த ஆய்வுக்குழு 40-க்கும் மேற்பட்ட எறும்புகள், 15 ஊர்வன, புலி, சிறுத்தை காட்டு நாய், காட்டெருமை மற்றும் யானை, பழுப்பு நிற கீரி, கோடிட்ட நிர்வாண கீரி, சிறிய இந்திய புணுகுபூனை, நீர்நாய், இந்திய காட்டுப் பூனை போன்றவற்றை கவனித்து ஆய்வு செய்தது. இதனை வெளியிட்டுள்ள பெரியார் கள இயக்குநர் பிரமோத், துணை இயக்குநர் சஜூ, உதவி கள இயக்குநர் லட்சுமி ஆகியோர் இந்த ஆய்வின் போது 12 புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- அதன்படி புதிய பட்டாம் பூச்சிகள் சயாத்ரி புல் மஞ்சள் (வேம்படா பாப்பாத்தி), வெற்று ஆரஞ்சு முனை (உள்ளூர் பெயர்: மஞ்சத்துஞ்சன்), சஹ்யாத்ரி மஞ்சள் பலா மாலுமி (மஞ்ச பொந்த சுட்டான்) , இலங்கை பிளம் ஜூடி (சிலிகான் அட்டக்கா ரன்), வெற்று பட்டாம்பூச்சி, சிறிய ஹெட்ஜ்பெர்யான்னே ஓல், பாம் பாப் மற்றும் இந்திய டார்ட். புதிய தட்டாம்பூச்சிகள், சஹ்யாத்ரி நீரோட்டப் பருந்து மற்றும் கூர்க் நீரோட்டப் பருந்து. பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்ட பறவைகள் கருப்புப் பறவை மற்றும் வெள்ளைத் தொண்டை தரைத் த்ரஷ் ஆகும்
‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காக சர்வதேச விருது / INTERNATIONAL AWARD FOR THE FILM 'BLUE STAR :
- கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் 'ப்ளூ ஸ்டார்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றுள்ளார்.
- இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் இயக்கி 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “புளூ ஸ்டார்”. இந்த திரைப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் என பலர் நடித்தனர்.கிரிக்கெட் தொடர்பான பொழுதுபோக்கு அம்சங்களையும் விளையாட்டைச் சுற்றி இயங்கும் தீவிரமான அரசியல் பிரச்சனைகளையும் இணைத்து உருவாக்கப்பட்ட ‘இப்படம் அமைந்தது.
பாலஸ்தீனத்தை தனிநாடாக அறிவித்துள்ள நாடுகள் / COUNTRIES THAT HAVE RECOGNIZED PALESTINE AS A SEPARATE STATE :
- பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
- இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
- இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.
73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் 2025 / 73RD SPEED SKATING WORLD CHAMPIONSHIPS 2025 :
- 73-வது ஸ்பீட் ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் தொடர் செப்டம்பர் 13 முதல் 21 வரை சீனாவின் பெய்டைஹேயில் நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் டிராக் மற்றும் ரோடு போட்டிகளை உள்ளடக்கியது. இதில் கொலம்பியா, சீன தைபே, ஸ்பெயின், இந்தியா, பிரான்ஸ், இத்தாலி, சிலி, எக்குவடார், ஜெர்மனி, பராகுவே, சீனா, தென் கொரியா, பெல்ஜியம் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனை பங்கேற்றனர்.
- இந்த தொடரின் முடிவில் ஒட்டுமொத்தமாக 5 பதக்கங்களை இந்தியா வென்றது. அதில் 3 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் (வெள்ளிப் பதக்கங்கள் இல்லை) ஆகும். இதனால் பதக்கப் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பிடித்தது.
- இதன்மூலம் உலக வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பதக்கப்பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
- ஆனந்த்குமார் வேல்குமார் 22 வயதில், சீனியர் ஆண்கள் 1000 மீட்டர் ஸ்பிரிண்டில் 1:24.924 நேரத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். அவர் 500 மீட்டர் ஓட்டத்தில் 43.072 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்றார், சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் இந்திய சீனியர் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார்
சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி 2025 / CHINA MASTERS BADMINTON TOURNAMENT 2025:
- சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது.
- சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி, தென் கொரிய ஜோடியும், உலக சாம்பியனுமான கிம் வான் ஹோ, சியோ செங் ஜே ஜோடியுடன் மோதியது.
- இதில் தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து இந்திய ஜோடிக்கு 2-வது இடம் மட்டுமே கிடைத்தது.
கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி 2025 / KOREA OPEN TENNIS TOURNAMENT 2025 :
- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- சியோல் நகரில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இகா ஸ்வியாடெக்கும், ரஷ்யாவின் இகாடெரினா அலெக்சாண்ட்ரோவாவும் மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 7-6 (7/3), 7-5 என்ற செட் கணக்கில் இகாடெரினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2025 / WORLD ATHLETICS CHAMPIONSHIPS 2025 :
- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4x400மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்பிரிக்க நாடானா போட்ஸ்வானா தங்கப்பதக்கம் வென்றது. 4x400மீ பந்தயத்தில் முதன்முறையாக தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி ஆப்பிரிக்க நாடு தங்கப்பதக்கம் வெல்லுவதும் இதுவே முதன்முறை.
- இந்த வரலாற்று வெற்றியை கொண்டா அந்நாட்டு அதபர் டுமா போகா செப்டம்பர் 29ஆம் தேதி பொதுவிடுமுறை என அறிவித்துள்ளார்.
- போட்ஸ்வானாவின் லீக் பெகெம்பிலோ எப்பி, லெட்சில் டெபோகோ, பயபோ என்டோரி, புசாங் கொலன் கெபிநாட்ஷிபி ஆகியோர் சாதனைப் படைத்தார். கடந்த 10 முறை சாம்பியன்ஷின் வென்ற அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது. தென்ஆப்பிரிக்கா அணி 3ஆவது இடம் பிடித்தது.
தேசிய ஆயுர்வேத தினம் / NATIONAL AYURVEDA DAY :
- உலகளவில் "தேசிய ஆயுர்வேத தினம்" செப்டம்பர் 23-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
- இது ஆயுர்வேதத்தின் பழமையான மருத்துவ முறைகளை உலகளவில் மேம்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடைபிடிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு முதல், தன்வந்திரி ஜெயந்தியைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- இருப்பினும் மத்திய அரசு 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ந்தேதி ''தேசிய ஆயுர்வேத தினம்" கடைபிடிக்கப்படுகிறது என்று அறிவித்தது.
- ஆயுர்வேத நாளன்று ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு பங்களித்தவர்களை அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருது' வழங்கி கவுரவிக்கிறது. தேசிய தன்வந்திரி ஆயுர்வேத விருதுகள், ஒரு பாராட்டு சான்றிதழ் (தன்வந்திரி சிலை) மற்றும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-21st-23rd-september-2025