பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் :
- பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.பிரதமர் மோடி இந்த திட்டத்தை ( 26 செப்டம்பர் 2025 ) தொடங்கி வைத்துள்ளார்.
- இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
- இந்த புதிய திட்டத்தின்படி பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு 75 லட்சம் பெண்களும் தாங்கள் விரும்பும் சுயதொழிலை தொடங்கிக் கொள்ளலாம்.
- குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த திட்டத்தின் நிதி உதவி வழங்கப்படுகிறது.
- பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற ஒரே இலக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெண்களுக்கு வழங்கப்படும் தலா ரூ.10 ஆயிரத்தை அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த பணத்தை அவர்கள் திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
- சுய தொழில் தொடங்க ஆர்வம் இல்லாத பெண்கள் அந்த 10 ஆயிரம் ரூபாயை தங்களது பிற வாழ்வாதார செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
SOURCE : Maalaimalar News