செப்டம்பர் மாதம் 2025 (24.09.2025-26.09.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட ‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி / DRDO CARRIES OUT THE SUCCESSFUL LAUNCH OF INTERMEDIATE RANGE AGNI-PRIME MISSILE FROM A RAIL BASED MOBILE LAUNCHER SYSTEM:
- நாட்டில் முதல்முறையாக ரயிலில் இருந்து ‘அக்னி பிரைம்’ ஏவுகணையை, இலக்கை நோக்கிசெலுத்தி இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இதன்மூலம், ரயில் ஏவுதளம் வைத்துள்ள ஒருசில நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
- பாதுகாப்பு படைகளுக்கு தேவையான பல வகை ஏவுகணைகளை ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரிக்கிறது. தரையில் இருந்து மட்டுமின்றி, ராணுவ வாகனங்கள்,போர்க்கப்பல்களில் அமைக்கப்படும் ஏவுதளம் என பல வகையான ஏவுதளங்களில் இருந்து இந்த ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
- அந்த வகையில், முதல்முறையாக ரயில் மூலம் தேவையான இடங்களுக்கு ஏவுகணைகளை கொண்டு சென்று, ரயிலில் உள்ள லாஞ்சர்கள் மூலம் ஏவும் விதமாக, ரயில் ஏவுதளப் பெட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பெட்டியை, ரயில் பாதை உள்ள எந்த இடத்துக்கும் கொண்டு சென்று, எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். இந்நிலையில், ரயில் ஏவுதளம் மூலமாக ‘அக்னி பிரைம்’ ரக ஏவுகணை நேற்று முன்தினம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை சென்ற பாதை,தரைக் கட்டுப்பாட்டு மையங்கள்மூலம் துல்லியமாக கண்காணிக்கப்பட்டதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
- எல்லை அருகே உள்ள ரயில் பாதைகளில் ரயில் ஏவுதளத்தை எளிதில் கொண்டு சென்று எதிரி நாட்டின் மீது தாக்குதல் நடத்த முடியும். மேம்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ள அக்னிபிரைம் ஏவுகணை 2,000 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும்.
இந்திய விமானப்படையில் பெரும்பங்காற்றிய MiG-21 போர் விமானங்கள் விடைபெற்றன / MIG-21 FIGHTER JETS, WHICH PLAYED A MAJOR ROLE IN THE INDIAN AIR FORCE, BID FAREWELL :
- விமானப்படையில் இரண்டு படைப்பிரிவுகளில் 36 MiG-21 விமானங்கள் சேவையில் இருந்து வந்தன.
- இந்நிலையில் (செப்டம்பர் 26) சண்டிகரில் நடைபெற்ற பிரியாவிடை விழாவில் இந்த விமானம் அதிகாரப்பூர்வமாக சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
- விமான படைத் தளத்தில் நடந்த விழாவில் புதிய தேஜஸ் போர் விமானங்கள் உடன் MiG-21 விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. MiG-21 இடத்தை தேஜஸ் விமானம் நிரப்பும் என்பதை குறிக்கும் வகையில் இது அமைந்தது.
- சோவியத் யூனியன் காலத்தில் வடிவமைக்கப்பட்ட MiG-21 விமானம் வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட சூப்பர்சோனிக் போர் விமானங்களில் ஒன்றாகும்.
- இது 1963 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. MiG-21 விமானங்கள் வினாடிக்கு 250 மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டவை.
- 1965 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்கள், 1999 ஆம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019 ஆம் ஆண்டு பாலகோட் தாக்குதல் ஆகியவற்றில் MiG-21 விமானம் முக்கிய பங்காற்றியது.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி 2025 / KALVIYIL SIRANTHA TAMILNADU 2025 :
- சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி தொடங்கியது.
- நிகழச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா 25 செப்டம்பர் 2025 மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுளளது.
- 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைத்தனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
- கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
- முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறுகிறது.
நாட்டிலேயே முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள கடற்பசு காப்பகத்துக்கு, சர்வதேச அங்கீகாரம் / INDIA'S FIRST DUGONG RESERVE IN PALK BAY GAINS GLOBAL RECOGNITION AT IUCN CONGRESS :
- பாக் வளைகுடா பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள கடற்பசு காப்பகத்துக்கு, ஐ.யு.சி.என்., எனப்படும் சர்வேதேச இயற்கை பாதுகாப்பு யூனியன் அங்கீ காரம் அளித்துள்ளதாக, வனம் மற்றும் சுற்றுச் சூழல் து றை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.
- வங்காள விரிகுடாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே, கடற்பசு காணப்படுகிறது. தமிழகத்தை ஒட்டிய, பாக் வளைகுடா பகுதியில், 448 சதுர கி.மீ., பரப்பை கடற்பசு காப்பகமாக, தமிழக அரசு, 2022ல் அறிவித்தது.
- இதையடுத்து, இங்கு கடற்பசுக்கள் வாழ்க்கை, நடமாட்டம், அவை சந்திக்கும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடற்பசு இருப்பு நிலவரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப் பட்டுள்ளது.
- அதன்படி, தமிழக கடலோரப் பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட கடற்பசுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இந்நிலையில், நாட்டிலேயே முதல்முறையாக அறிவிக்கப்பட்டுள்ள கடற்பசு காப்பகத்துக்கு, சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின், தமிழக வனத்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
- இது குறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
- ஐ.யு.சி.என்., எனப்படும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு யூனியன், தமிழகத்தின் கடற்பசு காப்பகத்தை அங்கீகரித்து, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தெற்கு ஆசியாவில் இத்தகைய அங்கீகாரம் முதல் முறையாக, கடற்பசு காப்பகத்துக்கு கிடைத்துள்ளது.
- இதனால், கடற்பசு காப்பகம் குறித்த விபரங்கள், உலக அளவில் முக்கியத்துவம் பெறும்.இவ்வாறு கூறியுள்ளார்.
பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் / BIHAR'S MUKHYAMANTRI MAHILA ROJGAR YOJANA SCHEME :
- பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.பிரதமர் மோடி இந்த திட்டத்தை ( 26 செப்டம்பர் 2025 ) தொடங்கி வைத்துள்ளார்.
- இந்த திட்டத்தின்படி பீகார் மாநில பெண்களுக்கு சுயதொழில் செய்து வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள சூழ்நிலை உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது.
- TNPSC GK NOTES : பீகாரில் முதல்வரின் மகளிர் வேலை வாய்ப்பு திட்டம்
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-24th-26th-september-2025