CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (27.09.2025-28.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (27.09.2025-28.09.2025)


செப்டம்பர் மாதம் 2025  (27.09.2025-28.09.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :



நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்த அறிக்கை / INDIA TOURISM STATISTICS REPORT :

  • உலக சுற்றுலா தினத்தையொட்டி (செப்.27) நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் குறித்த அறிக்கையை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்  வெளியிட்டது.

  • அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 99.5 லட்சமாகும். இது 2023-ஐவிட 4.52 சதவீதம் அதிகம். 
  • மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலா தலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட தலமாக தாஜ் மஹால் உள்ளது.உள்நாட்டுப் பயணிகள் 62.6 லட்சம், வெளிநாட்டுப் பயணிகள்6.4 லட்சம் போ் தாஜ் மஹாலை பாா்வையிட்டுள்ளனா். 

  • தாஜ் மஹாலுக்கு அடுத்தபடியாக ஒடிஸாவில் உள்ள கோனாா்க் சூரிய கோயிலை 35.7 லட்சம், குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.அதேபோல் ஆக்ரா மற்றும் குதுப் மினாரை தலா 2.2 லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா்.
  • வெளிநாடுவாழ் இந்தியா்கள்: 2024-இல் இந்தியாவுக்கு வந்த வெளிநாடுவாழ் இந்தியா்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. 2023-ஐ ஒப்பிடுகையில் இது 13.22 சதவீதம் அதிகமாகும். கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் 52.19 சதவீதம் அதிகமாகும்.
  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்: 2024-இல் இந்தியா வந்த வெளிநாடு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 8.89 சதவீதம் அதிகமாகும். இதில் 35-44 வயது பிரிவினா் 20.67 சதவீதமாகவும் 45-54 வயது பிரிவினா் 20.24 சதவீதமாகவும் உள்ளனா்.
  • பாலினத்தின் அடிப்படையில் ஆண்கள் 57.7 சதவீதமாகவும் பெண்கள் 42.3 சதவீதமாகவும் உள்ளனா்.
  • வெளிநாட்டு சுற்றுலாப் பயணம்: 2024-இல் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அதிக இந்தியா்கள் பயணித்துள்ளனா். 


உலக சுற்றுலா தினம் / WORLD TOURISM DAY :

  • 1980 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பு  ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது . 
  • இது 1970 ஆம் ஆண்டு UNWTO சட்டங்களை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது.. 
  • 2025 ஆம் ஆண்டு உலக சுற்றுலா தினத்திற்கான கருப்பொருள் " சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் (“Tourism and Sustainable Transformation,” )
  • மலேசியா செப்டம்பர் 27 முதல் 29 வரை மலாக்காவில் உலக சுற்றுலா தினம் மற்றும் உலக சுற்றுலா மாநாடு (WTC) 2025 ஐ நடத்தும் .


இந்திய அட்டா்னி ஜெனரல் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது / ATTORNEY GENERAL OF INDIA'S TERM EXTENDED:

  • இந்திய அட்டா்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா்) ஆா்.வெங்கடரமணியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2022-ஆம் ஆண்டு அட்டா்னி ஜெனரலாக 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்ட அவரின் பதவிக்காலம் வரும் செப்.30-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்தது.
  • கடந்த 1950-ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த ஆா்.வெங்கடரமணி, 1977-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞா் சங்கத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்தாா். உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகள் வழக்குரைஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவா், உச்சநீதிமன்றம், பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் சாா்பாக ஆஜராகியுள்ளாா். 2010-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்தாா்.
  • அட்டா்னி ஜெனரல் என்பது அரசியல் சாசன பதவியாகும். மத்திய அரசு பரிந்துரையின்படி, அட்டா்னி ஜெனரலை குடியரசுத் தலைவா் நியமிப்பாா். நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்குரைஞராக ஆஜராகும் உரிமை அட்டா்னி ஜெனரலுக்கு உள்ளது. இந்தப் பதவியில் உள்ளவா் அரசு வழக்குகளை கையாள்வதுடன், சிக்கலான சட்ட பிரச்னைகளில் அரசுக்கு ஆலோசனையும் வழங்குவாா்.


மாதா அமிர்தானந்தமயியைப் பெருமைப்படுத்தும் வகையில் கேரள மாநில அரசின் சார்பில் பாராட்டுப் பத்திரம் / CERTIFICATE OF APPRECIATION FROM THE KERALA STATE GOVERNMENT IN HONOUR OF MATA AMRITANANDAMAYI :

  • ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில், கேரள மொழியான மலையாளத்தில் மாதா அமிர்தானந்தமயி உரையாற்றியதன் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கேரள அரசு அவருக்கு நினைவுப் பரிசினை அளித்தது.
  • அம்மா என மக்களால் அன்புடன் அழைக்கப்படும் மாதா அமிர்தானந்த மயியின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அமிர்தவர்ஷம் 72 என்ற பெயரில் வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக, கேரளத்திலுள்ள அமிர்தபுரியில் அமிர்த விஸ்வ வித்யாபீடம் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • விழாவில் மாதா அமிர்தானந்தமயியைப் பெருமைப்படுத்தும் வகையில் கேரள மாநில அரசின் சார்பில் பாராட்டுப் பத்திரத்தை கலாசார விவகாரத் துறை அமைச்சர் சஜி செரியன் வழங்கினார்.


போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே மூன்றாவது மோசமான நகரமாக பெங்களூரு மதிப்பிடப்பட்டுள்ளது / BENGALURU IS RATED AS THE THIRD WORST CITY IN THE WORLD FOR TRAFFIC CONGESTION :

  • நாட்டின் தொழில்நுட்பத் துறையின் இதயத் துடிப்பாக, நீண்ட காலமாக இருந்து வரும் பெங்களூரு, ஒரு காலத்தில் பல குடியிருப்பாளர்களின் கனவு இலக்காக இருந்தது. ஆனால், தற்போது போக்குவரத்து நெரிசல், நீர்த் தட்டுப்பாடு, சொத்துகள் உள்ளிட்ட காரணங்களால் பெங்களூரு வாழ்க்கை மோசமாகியுள்ளது.
  • பெங்களூரின் இந்த நிலைமையைக் குறிப்பிட்டு, சமூக ஊடகங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு மக்கள், ஒரு வருடத்தில் சராசரியாக 134 மணிநேர அளவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதாகக் கூறப்படுகிறது.


சுதேசி 4ஜி சேவை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்  / PRIME MINISTER MODI LAUNCHES INDIGENOUS 4G SERVICE :

  • இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.
  • இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும்  காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.
  • இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.


ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் 2025:

  • ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
  • ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 9-வது முறையாகும். இதற்கு முன்னர் 1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023 ஆகிய ஆண்டுகளிலும் இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது.

பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் 2025: 

  • தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. 
  • இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 18 வயதான இந்தியாவின் ஷீத்தல் தேவி 146-143 என்ற கணக்கில் உலகின் முதல் நிலை வீராங்கனையான துருக்கியின் ஓஸ்னூர் க்யூர் கிர்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
  • மேலும் கலப்பு அணிகள் பிரிவில் தோமன் குமாருடன் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றார். 
  • இந்த ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோடை கிரின்ஹாம், நேதன் மாக்குயின் ஜோடியை 152-149 என்ற கணக்கில் தோற்கடித்தது. மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் சரிதாவுடன் இணைந்து ஷீத்தல் தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-27th-28th-september-2025




Post a Comment

0Comments

Post a Comment (0)