CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (29.09.2025-30.09.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL SEPTEMBER 2025 - (29.09.2025-30.09.2025)


உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்நது முதலிடம் வகிக்கிறது / INDIA CONTINUES TO LEAD THE WORLD IN MILK PRODUCTION:

  • உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து, உலகளாவிய விநியோகத்தில் சுமார் கால் பங்கு பங்களிப்பை அளிக்கிறது. தற்போது இந்தியாவில் பால் உற்பத்தி மிகப்பெரிய வேளாண் உற்பத்தியாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 5 சதவீத பங்களிப்பையும் அளிக்கிறது. 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது.
  • பால் உற்பத்தி 10 ஆண்டுகளில் 63.56 சதவீதம் அதிகரித்து, 146.3 மில்லியன் டன்னில் இருந்து 239.30 மில்லியன் டன்னாக அதிகரித்து உள்ளது. ஒரு நபருக்கான பால் விநியோகம் 48 சதவீதம் அதிகரித்து, 2023 – 24-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 471 கிராமிற்கு அதிகமாக இருந்தது. இது உலக சராசரியில் நாள் ஒன்றுக்கு 322 கிராமாகும்.  2024 – 25-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 565.55 லட்சம் செயற்கை கருவூட்டல் நடைபெற்றது.
  • இந்தியாவில் கூட்டுறவு பால்வளத்துறை விரிவானதாகவும், சிறந்த அமைப்பை உடையதாகவும் உள்ளது. 2025-ம் ஆண்டில் 22 பால்வள கூட்டமைப்புகளும், 241 மாவட்ட கூட்டுறவு யூனியன்களும், 28 பால்வள சந்தைகளும், 25 பால் உற்பத்தியாளர் சங்கங்களும் உள்ளன.
  • 2.35 லட்சம் கிராமங்களில், 1.72 கோடி பால் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். பால் பண்ணை ஊழியர்களில் சுமார் 70 சதவீதம் பேரும், பால் கூட்டுறவுகளில் 35 சதவீதம் பேரும் பெண்களாகவும் உள்ளனர். நாடு முழுவதும் கிராம அளவில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்களை தலைமையாக கொண்ட பால் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன.

உலக உணவு இந்தியா 2025 மாநாடு / THE WORLD FOOD INDIA 2025 CONFERENCE:

  • இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையின் பயணத்தில் சிறந்த தருணத்தை குறிக்கும் 4 நாள் உலக உணவு இந்தியா 2025 மாநாடு  பாரத் மண்டபத்தில் நிறைவடைந்தது. 
  • இக்கண்காட்சியை ரஷ்ய துணைப் பிரதமர் திரு டிமித்ரி பத்ருஷேவ், மத்திய அமைச்சர்கள் திரு சிராக் பஸ்வான், திரு பிரதாப்ராவ் ஜாதவ், உணவு பதப்படுத்துதல் மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் திரு ரவ்னித் சிங் ஆகியோர் முன்னிலையில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலகளாவிய தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோர் உணவு மற்றும் வேளாண் துறையின் எதிர்காலம் குறித்து விவாதிக்க ஒருங்கிணைந்தனர்.
  • இந்த உலக உணவு இந்தியா 2025 மாநாட்டில், இந்திய உணவு பதப்படுத்துதல் துறையின் மிகப்பெரும் முதலீடாக ரூபாய் 1,02,000-க்கும் அதிகமான அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • மத்திய அமைச்சர்கள் திரு நிதின் கட்கரி, திரு சிராக் பஸ்வான் ஆகியோர் தலைமையில், இந்தியா மற்றும் பல்வேறு நாட்டு முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்ற வட்டமேசை கூட்டம் நடைபெற்றது.
  • நீடித்த முதலீடுகள், மக்கும் தன்மை கொண்ட பேக்கஜிங், கழிவு மதிப்பீடுகள், நீலப் பொருளாதாரத்தின் சாத்தியக்கூறுகள், செலவை குறைத்தல் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்த சரக்கு போக்குவரத்து மற்றும் போக்குவரத்து சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


மத்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்திர ஆய்வறிக்கை வெளியீடு / AUGUST MONTHLY REVIEW OF ACCOUNTS OF GOVERNMENT OF INDIA (FY 2025-26) :

  • மத்திய அரசின் கணக்குகள் குறித்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வறிக்கை வெயிடப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
  • மத்திய அரசு வரி வருவாயாக 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை 12 லட்சத்து 82 ஆயிரத்து 709 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. இது 2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் வருவாய் மதிப்பீட்டில் 36.7 சதவீதமாகும். 
  • இதில் வரி வருவாயாக 8 லட்சத்து 10 ஆயிரத்து 407 கோடி ரூபாயும், வரி அல்லாத வருவாயாக 4 லட்சத்து 40 ஆயிரத்து 332 கோடியும், கடன் அல்லாத மூலதன வருவாயாக 31 ஆயிரத்து 970 கோடி ரூபாயும் அடங்கும். 
  • இந்த வருவாயிலிருந்து மாநில அரசுகளுக்கான வரி பகிர்மான தொகையாக 5 லட்சத்து 30 ஆயிரத்து 148 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக்காட்டிலும் 74 ஆயிரத்து 431 கோடி ரூபாய் கூடுதலாகும்.
  • மத்திய அரசின் மொத்த செலவினத் தொகை 18 லட்சத்து 80 ஆயிரத்து 862 கோடி ரூபாயாகும். இது 2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜட் மதிப்பீட்டில் 37.1 சதவீதமாகும். 
  • மொத்த செலவினத் தொகையில் 14 லட்சத்து 49 ஆயிரத்து 283 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலிருந்தும், 4 லட்சத்து 31 ஆயிரத்து 579 கோடி ரூபாய் மூலதனக் கணக்கிலிருந்தும் செலவிடப்பட்டுள்ளது. 
  • மொத்த வருவாய் இன செலவினங்களில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 668 கோடி ரூபாய் கடனுக்கான வட்டி தொகையாகவும், மானியமாக 1 லட்சத்து 50 ஆயிரத்து 377 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.   



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-29th-30th-september-2025




Post a Comment

0Comments

Post a Comment (0)