CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 - (01.10.2025-03.10.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 - (01.10.2025-03.10.2025)


அக்டோபர் மாதம் 2025 (01.10.2025-03.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :


அமெரிக்காவில் ‘எகனாமிக் ஷட்டவுன்’ / ECONOMIC SHUTDOWN' IN THE UNITED STATES :

  • அமெரிக்க நிதியாண்டு செப்டம்பர் 30-ல் முடிவடையும். அக்.1-ல் புதிய நிதியாண்டு தொடங்கும். இதனையடுத்து ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் மசோதா செப்.30-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
  • அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்று செனட் சபை, மற்றொன்று பிரதிநிதிகள் சபை. அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும்.
  • அவ்வாறாக 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காவிட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படும். இதனால் சில நேரங்களில் அத்தியாவசிய சேவைகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தவிர மற்ற துறைகளில் இருப்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படும் சூழல் ஏற்படும். சில நேரங்களில் அந்தத் துறைகள் தற்காலிகமாக மூடப்படுவதால் அவர்கள் முடங்கவும் நேரிடும். இதை ஃபர்லோ ஸ்டேட்டஸ் (furlough status) என்கிறார்கள்.
  • இந்நிலையில்,  அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஆதரவாக குடியரசு கட்சி உறுப்பினர்கள் 53 சதவீதம் பேரும், ஜனநாயக கட்சியின் 47 சதவீத உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறாததால் நள்ளிரவு 12 மணிக்கு அமெரிக்க அரசு முடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கபப்ட்டது.(அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (அக். 1) நள்ளிரவு 12.01 மணிமுதல்)
  • இந்த முடக்கத்துக்குப் பின்னணியில் அஃபர்டபிள் கேர் (அல்லது) ஒபாமா கேர் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், எல்லை பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளாததும் பிரதானக் காரணமாக இருக்கிறது.
  • உள்நாட்டைப் பொறுத்துவரை ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்கும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் காவல் துறை, அஞ்சல் துறை, மருத்துவத் துறை, ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, விமானக் கட்டுப்பாட்டுத் துறை, சமூக பாதுகாப்புக்கான நிதி விடுவிக்கும் துறை, வங்கிகள், நீதித்துறை உள்பட சில சேவைகள் தான் இயங்கும். அரசின் புள்ளி விவரங்கள் துறை கூட செயல்படாது என்பதால், அமெரிக்க பொருளாதார நிலவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாது. இதனால், நிச்சயமற்றத்தன்மை அதிகரிக்கும். விசா விண்ணப்பங்கள் பரிசீலனையில் தாமதம், வரி வசூலில் சுணக்கம் உள்ளிட்டவையும் ஏற்படக் கூடும்.
  • உலகளாவிய தாக்கங்கள் :அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை உலக சந்தைகளிலும் தாக்கம் ஏற்படுத்தும்.முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு அதிகரிக்கின்றனர்.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விசா செயலிகள், வரி வசூல், சுற்றுலா துறை போன்றவை பாதிக்கப்படலாம்.சுமார் 7,05,000 அரசு ஊழியர்கள் பணி நீக்கம் அல்லது ஊதியம் இல்லாமல் பணியில்.சுற்றுலா துறை, அருங்காட்சியங்கள், தேசிய பூங்காக்கள் உள்ளிட்டவை முடங்கும்.
  • வரலாற்றுப் பின்னணி: நீண்ட காலத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் நிபுணர்கள் தனியார் துறைக்கு மாறும் நிலை ஏற்படும்.2013, 2018–2019 காலங்களில் இதுபோன்ற முடக்கங்கள் ஏற்பட்டுள்ளன.2013-ல் 31% ஊழியர்கள் பணி ராஜினாமா செய்தனர்.
  • அமெரிக்கா அரசு முடங்கி இருப்பதன் காரணமாக சுமார் 7.50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி தடைபடும் என்றும், இதனால் அமெரிக்க அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ. 3,300 கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை முடக்கம் நீடித்தால், ஒவ்வொரு வாரமும் GDP 0.2% குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் / INDIA'S FREE TRADE AGREEMENT WITH EUROPEAN COUNTRIES:

  • ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
  • ஐரோப்பாவில் உள்ள ஐஸ்லாந்து, லிக்டன்ஸ்டீன், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டது. இந்த வர்த்தக ஒப்பந்தம் (அக்டோபர் 1) முதல் அமலுக்கு வருகிறது.


இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு ஆய்வு அறிக்கை CANCER INCIDENCE STUDY REPORT IN INDIA :

  • இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு கடந்த 1990-ம் ஆண்டு முதல் 26% அதிகரித்துள்ளது. இதுகுறித்து 'தி லான்செட்' இதழில் வெளியான ஆய்வு முடிவுகளின்படி, இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 33 ஆண்டுகளில் 26% அதிகரித்துள்ளது.
  • 1990-ல் 1 லட்சம் மக்கள்தொகைக்கு 84.8 ஆக இருந்த புற்றுநோய் பாதிப்பு 2023-ல் 107.2 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் புற்றுநோய் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு 21% அதிகரித்துள்ளது. 
  • அதேவேளையில் அமெரிக்கா மற்றும் சீனாவில் 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டும் கணிசமாக குறைந்துள்ளது.


உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றார் / INDIA'S MIRABAI CHANU WINS SILVER MEDAL AT WORLD WEIGHTLIFTING CHAMPIONSHIPS :

  • நார்வேயின் போர்டே நகரில் உலக பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. 87 நாடுகளில் இருந்து 477 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 48 கிலோ பிரிவு போட்டி நடந்தது. இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானு 31, உட்பட 14 பேர் பங்கேற்கின்றனர்.
  • முதலில் 'ஸ்னாட்ச்' பிரிவில் மீராபாய் சானு, 84 கிலோ துாக்கினார். அடுத்து இரு முறை 87 கிலோ துாக்க முயன்று, முடியாமல் போக, 3வது இடம் பிடித்தார். பின் 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் அசத்திய மீராபாய் சானு, 115 கிலோ துாக்கி 2வது இடத்துக்கு முன்னேறினார். ஒட்டுமொத்தமாக 199 கிலோ துாக்கி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். 
  • வடகொரியாவின் ரி சாங்-கம், 213 கிலோ துாக்கி தங்கம் வென்றார். தாய்லாந்தின் தன்யதோமிற்கு (198) வெண்கலம் கிடைத்தது. இது, உலக சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு, வென்ற மூன்றாவது பதக்கம் ஆனது.


 

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-01st-03rd-october-2025



Post a Comment

0Comments

Post a Comment (0)