![]() |
TECH CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 |
TECH CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 1st WEEK :
அரட்டை (Arattai) செயலி :
- சென்னையில் இயங்கிவரும் சோஹோ (Zoho) டெக் நிறுவனம் 2021ம் ஆண்டு அமெரிக்க 'வாட்ஸ்அப்' செயலிக்கு மாற்றாக நம் நாட்டின் தயாரிப்பான 'அரட்டை (Arattai) என்கிற சோஷியல் ஆப்பை அறிமுகப்படுத்தியது.
- ஆரம்பத்தில் சிறு சிறு டெக் பிரச்னைகள் இருந்தன, அவை டெவலப் செய்யப்பட்டு இப்போது முன்னணி டெக் ஆப்களுக்கு சவால்விடும் அளவிற்கு வந்திருக்கிறது.
- அது இந்த 'அரட்டை' ஆப்பின் மீதான நம்பகத்தன்மையைக் கூட்டி, 3 நாள்களில் 35 லட்சம் பயன்பாட்டாளர்களைக் கொண்டு வரச் செய்திருக்கிறது.
மெட்டா நிறுவனம் புதிதாக இரண்டு ரே-பான் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது:
- மெட்டா நிறுவனம் புதிதாக இரண்டு ரே-பான் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் வலது லென்ஸில் செயலிகள், செய்திகள், அறிவிப்புகள், திசைகளைக் காட்டும் வகையில் திரை (டிஸ்ப்ளே) அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தக் கண்ணாடியின் கட்டுப்பாட்டு மையமாக மணிக்கட்டுப் பட்டை செயல்படும். Meta Neural Band என அழைக்கப்படும் இந்தப் பட்டை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை அணிந்துகொண்டு கையால் சில சைகைகளைச் செய்வதன் மூலம் கண்ணாடியைக் கட்டுப்படுத்தலாம்
- .இந்த பேண்ட் தண்ணீரால் பாதிக்கப்படாத வண்ணம், ஒருமுறை சார்ஜ் செய்தால் 18 மணி நேரம் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு சாதனத்தை கையாள்வது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்கின்றனர்.
- மெட்டாவின் வருடாந்திர நிகழ்வான மெட்டா கனெக்ட் 2025-ல் மார்க் சக்கர்பெர்க் இந்தக் கண்ணாடியை அறிமுகப்படுத்தும்போது, மெட்டா ரே-பான் டிஸ்ப்ளே Meta Ray-Ban Display என அழைத்தார்.
- செப்டம்பர் 30ஆம் தேதி முதல் இந்தக் கண்ணாடியை வாங்க முடியும்.இதன் விலை 799 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 70,402 ரூபாய்).
வாட்ஸ்அப் மெசேஜ்களை உடனடியாக மொழிபெயர்க்கும் அம்சம்:
- வாட்ஸ்அப் மெசேஜ்களை உடனடியாக மொழிபெயர்க்கும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
- இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு அறிமுகமாகி உள்ளது.
- ஆண்ட்ராய்டு போன்களில் ஆறு மொழிகளும், ஐஓஎஸ் போன்களில் 19 மொழிகளும் மொழிபெயர்க்கலாம்.
- குறிப்பிட்ட மெசேஜ் அல்லது மொத்த சாட்டையும் மொழிபெயர்க்கும் வசதி உள்ளது.
- பயனர்கள் தங்களுக்கு வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்களை மொழிபெயர்க்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மெசேஜை லாங்-பிரஸ் செய்து டிரான்ஸ்லேட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.
- அதில் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் மூலம் அடுத்த முறை டிரான்ஸ்லேட் ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்யும் போது, அந்த குறிப்பிட்ட மெசேஜ் நேரடியாக அவரது விருப்ப மொழியில் டிரான்ஸ்லேட் ஆகிவிடும்.
இ-ஆதார் செயலி (e-Aadhaar App):
- இ-ஆதார் செயலி (e-Aadhaar App), ஆதார் விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்ய ஏதுவான ஒரு எளிய, பாதுகாப்பான மற்றும் பயன்படுத்த எளிதான தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இந்தச் செயலி அறிமுகமானவுடன், ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கியமான தகவல்களை, நேரடி பதிவு மையங்களுக்குச் செல்லாமல் திருத்த முடியும். இதன் மூலம் பேப்பர் வொர்க்கும் இருக்காது, கால தாமதமும் இருக்காது.
- பாதுகாப்பை உறுதிசெய்ய, இந்தச் செயலியில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முக அடையாள சரிபார்ப்பு (Face ID verification) போன்ற அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இது டிஜிட்டல் செயல்முறையைப் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகளுக்கு மட்டுமே நேரில் செல்ல வேண்டியிருக்கும்
- ஆதார் அங்கீகாரக் கோரிக்கைகளுக்கான ஒப்புதல் செயல்முறையை எளிதாக்க 'ஆதார் நல்லாட்சிக்கான போர்ட்டல்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5:
- அடுத்த தலைமுறை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்காக ஹவாயில் நடந்த வருடாந்திர ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5-ஐ வெளியிடப்பட்டது.
- குவால்காம் நிறுவனம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜெனரல் 5 உடன் 24GB LPDDR5X ரேம், 1TB UFS4.1 சேமிப்பகம் மற்றும் 3200×1440 பிக்சல்கள் தெளிவுத்திறன் கொண்ட 6,8-இன்ச் AMOLED LTPO டிஸ்ப்ளே ஆகியவற்றை இணைத்தது.
- இது உலகிலேயே மிக வேகமான மொபைல் சிப் என்று குவால்காம் தெரிவித்துள்ளது.
- இது 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
- AI திறன்கள் மற்றும் புரட்சிகரமான கேமிங் அனுபவத்தை இது வழங்குகிறது.
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை பயன்படுத்தும் முதன்மையான மொபைல்கள் Xiaomi 15, OnePlus 15, iQOO 15, மற்றும் Samsung Galaxy S26 ஆகியவை ஆகும். இவை அனைத்தும் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
TECH CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 2nd WEEK :
ஆக்ஸிஜன் ஓஎஸ் 16 வெளியீடு :
- OxygenOS 16 என்பது OnePlus இன் சமீபத்திய தனிப்பயன் ஆண்ட்ராய்டு ஸ்கின் ஆகும், இது அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 16, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
tech-current-affairs-in-tamil-october-2025