CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 - (04.10.2025-07.10.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 - (04.10.2025-07.10.2025)


அக்டோபர் மாதம் 2025 (04.10.2025-07.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :


விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான கண்காட்சி கருத்தரங்கம் /  AEROSPACE AND DEFENSE EXHIBITION AND CONFERENCE 2025 :

  • சென்னை நந்தம்பாக்கத்தில் TIDCO சார்பில் நடைபெறும் விண்வெளி பாதுகாப்பு தொழில்களுக்கான (AeroDefCon 25) கண்காட்சி கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசியதாவது:- 
  • இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது.தமிழக தொழில்துறை மாநாடுகள் உலக அளவில் பேசப்படுகின்றன. 
  • இந்தியாவை மட்டும் அல்ல, உலகையே ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. 
  • வளர்ந்து வரும் அனைத்து தொழில்களிலும் தமிழ்நாடு கால்பதித்து வருகிறது. உலக அளவில் வளரும் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 
  • தமிழ்நாட்டில் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.  உற்பத்தி துறையில் லீடராக தமிழ்நாடு மாறி வருகிறது, அனைத்து தொழில்களிலும் தடம் பதித்து வருகிறது. 
  • இன்று நான் தொடங்கி வைத்தது வெறும் கண்காட்சி அல்ல, முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்களை கண்டறியும் தளம். 
  • இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 
  • இந்திய விண்வெளி துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும். * பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற உள்ளது. 
  • பாதுகாப்பு துறையில் முக்கிய மையமாக தமிழ்நாடு மாறும் என நம்புகிறேன். பாதுகாப்புத்துறையில் 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 
  • சென்னை அருகே AEROHUB என்ற திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது.  தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியும் முதலீடுகளுக்கு உகந்த பகுதிகளாக திகழ்கிறது என்றார்.


அருணாச்சலப் பிரதேசத்தில் நாம்சிக்-நம்புக்கில் முதல் வணிக நிலக்கரிச் சுரங்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கம் /  HISTORIC LAUNCH OF FIRST COMMERCIAL COAL MINE IN ARUNACHAL PRADESH AT NAMCHIK-NAMPHUK :

  • அருணாச்சல பிரதேசம் 2025 அக்டோபர் 6 அன்று நாம்சிக்-நாம்புக் நிலக்கரி தொகுதியில் தனது முதல் வணிக நிலக்கரி சுரங்கம் உற்பத்தியை தொடங்கியது.
  • 1.5 கோடி டன் இருப்புகளைக் கொண்ட நாம்சிக் நாம்புக் நிலக்கரி தொகுதி 2003-ல் முதன்முதலில் ஒதுக்கப்பட்டது, ஆனால் பல சவால்கள் காரணமாக நீண்ட தாமதங்களை எதிர்கொண்டது. 2022-ல் வெளிப்படையான ஏல செயல்முறை மூலம் இது புத்துயிர் பெற்றது. 
  • இந்த சுரங்கம் மாநிலத்திற்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடிக்கும் மேலான வருவாயை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலைகளையும் செழிப்பையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த தொடக்கம் சட்டவிரோத சுரங்கம், சுரண்டல் மற்றும் மாநில வளங்கள் வீணடைவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் குறிக்கிறது. அருணாச்சலில் முதல்முறையாக இரண்டு தொகுதிகளும் அஸ்ஸாமில் ஐந்து தொகுதிகளும் ஏலத்தில் விடப்பட்டு முக்கியமான கனிமங்கள் உற்பத்திக்கு திறக்கப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், வடகிழக்கில் ரூ.6 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. அருணாச்சலபிரதேச மாநிலத்தில் மட்டும், 2014க்கு முன் முதலீடு ரூ.6,000 கோடியிலிருந்து 2014க்குப் பின் ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைப்பதற்கு ஒப்புதல் / APPROVAL FOR SETTING UP 'NAMO SEMICONDUCTOR LABORATORY' AT IIT BHUBANESWAR :

  • மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப  அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், சமீபத்தில் ஐஐடி புவனேஸ்வரில் 'நமோ செமிகண்டக்டர் ஆய்வகம்' அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும். திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 4.95 கோடி ஆகும்.
  • நமோ செமிகண்டக்டர் ஆய்வகம் இளைஞர்களுக்கு தொழில்துறைக்கு தேவையான திறன்களை வழங்குவதன் மூலம் இந்தியாவின் ஆழமான திறன் வளத்திற்கு பங்களிக்கும். இந்த ஆய்வகம் ஐஐடி புவனேஸ்வரை செமிகண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான மையமாக நிலைநிறுத்தும்.
  • உலகளாவிய சிப் வடிவமைப்பு திறமையில் 20 சதவீதம் இந்தியாவில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 295 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் தொழில்துறையால் வழங்கப்பட்ட சமீபத்திய பகுப்பாய்வுகளை பயன்படுத்துகின்றனர். 20 நிறுவனங்களிலிருந்து 28 மாணவர்கள் வடிவமைத்த சிப்கள் எஸ்எல்சி மொஹாலியில் முழுமையாக பயன்படுத்தப்பட்டது.
  • ஐஐடி புவனேஸ்வர் ஏற்கனவே சிலிக்கான் கார்பைடு ஆராய்ச்சி மற்றும் புதுமை மையத்தை (SiCRIC) கொண்டுள்ளது. நாட்டில் செமிகண்டக்டர் தொழில்துறையை ஆதரிக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளை இது வழங்கும்.

2022-23 ஆம் ஆண்டிற்கான மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகள் / MY BHARAT-NATIONAL SERVICE SCHEME (NSS) AWARDS FOR THE YEAR 2022-23:

  • குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (அக்டோபர் 6, 2025) குடியரசுத் தலைவர் மாளிகையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான மை பாரத் - நாட்டு நலப்பணித் திட்ட விருதுகளை வழங்கினார். தன்னார்வ சமூகப் பணியில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. 
  • பத்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலகம் மற்றும் அவற்றின் பத்து திட்ட அதிகாரிகளுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகளுக்கான விருது பெற்றவர்களில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ் ஜெயகுமாரிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • நாட்டு நலப்பணித் திட்டத்தின் தாரக மந்திரம் ‘நான் அல்ல, நீயே’ என்பதாகும். நாட்டின் இளைஞர்களிடையே தன்னார்வ சமூக சேவை மூலம் ஆளுமையையும் குணத்தையும் வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் / INDIA'S SECOND LARGEST CRICKET STADIUM :

  • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானம் பீகாரில் கட்டப்பட்டுள்ளது. ராஜ்கிரில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார். 
  • இந்த மைதானம் 90 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புனேவிலிருந்து உயர்தர கருப்பு மண்ணைப் பயன்படுத்தி இந்த மைதானத்தின் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த மைதானத்தில் 40,000 இருக்கைகள் உள்ளது. இந்த மைதான கட்டுமானத்தின் ஆரம்பச் செலவு ரூ.740 கோடியாக மதிப்பிடப்பட்டது, ஆனால் நவீன வசதிகள் மற்றும் கூடுதல் கட்டமைப்புகள் சேர்க்கப்பட்டதால் ரூ.1,121 கோடி செலவானது குறிப்பிடத்தக்கது


தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தயாரான  இருமல் மருந்துக்கு தடை போட்ட மத்திய பிரதேசம் / MADHYA PRADESH BANS COUGH MEDICINE MADE IN TAMIL NADU AND GUJARAT :

  • மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. 
  • இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 
  • இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
  • கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நோயாளிகள் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர்-  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு /  PATIENTS WILL BE CALLED MEDICAL BENEFICIARIES OR BENEFICIARIES – TAMIL NADU GOVERNMENT ORDER ISSUED : 

  • மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
  • இதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், "மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சேவைகளைப் பெற வருபவர்கள் 'நோயாளிகள்' என அல்லாமல் 'மருத்துவப் பயனாளிகள்' என குறிப்பிடப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மருத்துவம் ஒரு மனிதநேயம் மிக்க சேவையாக உள்ளதால், "நோயாளி" என்ற சொல்லுக்கு பதிலாக "பயனாளி" என குறிப்பிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது.


நோபல் பரிசு 2025 / NOBEL PRIZE 2025 :

  • இதில், முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள புறநோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது
  • இந்நிலையில், 2025ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச். டெவோரெட், ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் கணினிக்கான சிப் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.


உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025 / WORLD PARA-ATHLETICS CHAMPIONSHIPS 2025 :

  • புதுதில்லியில் நடைபெற்ற உலக பாரா தடகளச் சாம்பியன்ஷிப் 2025-ல் வரலாற்று சிறப்புமிக்க வகையில் செயலாற்றிய இந்திய பாரா தடகளக் குழுவினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 
  • இதுவரை இல்லாத அளவில் பதக்கப்பட்டியலில் 6 தங்கம் உட்பட 22 பதக்கங்களை இந்தியா வென்றது. 
  • நாட்டின் பாரா விளையாட்டுப் பயணத்தின் புதிய மைல் கல்லாகும்.  அத்துடன் முதல் முறையாக உலகளாவிய மதிப்புமிக்க விளையாட்டு நிகழ்வை இந்தியா நடத்தியுள்ளதற்கும் திரு மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-04th-07th-october-2025


Post a Comment

0Comments

Post a Comment (0)