அக்டோபர் மாதம் 2025 (08.10.2025-09.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
உலக புத்தொழில் மாநாடு 2025 / GLOBAL STARTUP SUMMIT 2025:
- கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
- தொழில் மாநாடுகள் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் சான்று.தொழில்துறை வளர்ந்தால் அந்த மாநிலமும் தொடர்ந்து வளர்கிறது என அர்த்தம்.
- அமைதியான மாநிலங்களை தேடியே தொழில்துறையினர் தொழில் தொடங்க வருவர். தி.மு.க. ஆட்சியில் ஏராளமான தொழில் நிறுவனங்களை ஈர்த்துள்ளோம்.
- தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
- 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
- 4 ஆண்டுகளில் 6 மடங்கு புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரமாக இருந்த புத்தொழில் நிறுவனங்கள் 12 ஆயிரமாக உயர்ந்துள்ளன.
- சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள மாநிலங்களைத்தான் தொழில் நிறுவனங்கள் தேடி வரும். தமிழ்நாட்டில் முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
- தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 33 சதவீதம் புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்கின்றன.
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உலகில் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய மொபைல் மாநாடு 2025 / INDIA MOBILE CONGRESS 2025:
- இந்திய மொபைல் மாநாட்டை புதுதில்லியில் உள்ள யஷோபூமியில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஆசியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு, ஊடகம், தொழில்நுட்பத்துறைக்கான இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், இதில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அனைத்துப் பிரதிநிதிகளையும் வரவேற்றார்.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4ஜி சேவை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி அலைக்கற்றை சேவையை வழங்குவதற்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
- மொபைல், தொலைத்தொடர்பு, மின்னணுவியல் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில்நுட்பச் சூழலில் ஏற்படும் சிக்கல்களுக்கு உலக நாடுகளுக்கு தீர்வு வழங்குவதில் இந்தியாவிற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவில் முதல்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் / BRITISH PRIME MINISTER MAKES FIRST OFFICIAL VISIT TO INDIA:
- இங்கிலாந்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக பிரதிநிதிகளுடன் முதல் முறையாக இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை மனமார வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் ஸ்டார்மரின் தலைமையின் கீழ், இந்தியா மற்றும் இங்கிலாந்து உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. இந்தோ-பசிபிக் மற்றும் மேற்கு ஆசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும், உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்தும் ஸ்டார்மர் உடன் விவாதித்தேன். பிரிட்டனை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள், இந்தியாவில் தங்களது கல்வி வளாகங்களை திறக்கும். ஜூலை மாதம், எனது இங்கிலாந்து பயணத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டோம் " என்று தெரிவித்தார்.
- இதன்பின் பேசிய கெய்ர் ஸ்டார்மர், 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2028-க்குள் இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற முயற்சிக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள். 2047-க்குள் முற்றிலும் வளர்ந்த நாடு என்ற உங்களின் கொள்கை நிச்சயம் நிறைவேறும். உங்களின் பயணத்தில் நாங்கள் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறோம்காமன். காமன்வெல்த், ஜி20 இல் நாங்கள் ஒன்றாக அமர்ந்திருக்கிறோம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அந்தஸ்து பெறுவதை நாங்கள் காண விரும்புகிறோம்' என்று கூறினார்.
இந்திய விமானப்படை தினம் / INDIAN AIR FORCE DAY :
- இந்திய வான்ப் படையானது, 1932 இல் அக்டோபர் 8 ஆம் நாளில் இந்தியப் பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாக, இந்தியா ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது உருவாக்கப்பட்டது.
- இந்திய விமானப்படைச் சட்டம் 1932 ன்படி பிரித்தானியா ராயல் விமானப் படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தோற்றுவிக்கப்பட்டது.
- இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்டோபர் 08 ம் தேதி, இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது.
- உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய விமானப்படை 4வது இடத்தில் பெரியதாக திகழ்கிறது.
நல்லாட்சி மற்றும் பதிவுகள்” என்ற கண்காட்சி 2025 / EXHIBITION “GOOD GOVERNANCE AND RECORDS” 2025:
- மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்திய தேசிய காப்பகம் நல்லாட்சி மாதத்தை கடைபிடிப்பதன் ஒரு பகுதியாக 2025 அக்டோபர் 10 அன்று புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “நல்லாட்சி மற்றும் பதிவுகள்” என்ற தலைப்பில் கண்காட்சியை நடத்தவுள்ளது. இக்கண்காட்சியை காலை 10.00 மணியளவில் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கிவைக்கிறார்.
- வளமான சமூகம், பொது நடத்தை விதிமுறைகளை வடிவமைத்தல், சமூக உரையாடல், நலத்திட்டங்களை திறம்பட அமல்படுத்துதல் ஆகியவற்றிற்கு தூய்மையும், நல்லாட்சியும் ஒருங்கிணைந்தவையாகும்.
- இது தொடர்பான முக்கிய தேசிய முன்முயற்சிகளில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தூய்மை மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி நாட்டின் ஆவண பாரம்பரியத்தின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கிறது.
- 2021-25-ம் ஆண்டுகளுக்கு இடையே பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மிகப்பெரிய ஆவணங்கள் மேலாண்மை நடைமுறையை மேற்கொண்டு அதை கண்டறிந்து 75,500-க்கும் அதிகமான வரலாற்று மதிப்புமிக்க ஆவணங்களை இந்திய தேசிய காப்பகத்திற்கு அனுப்பின.
- நல்லாட்சியின் தூண்களாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை மற்றும் பதிவுகளை பராமரித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், இக்கண்காட்சி இப்பதிவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பைக் காட்சிப்படுத்துகிறது.
தேசிய அஞ்சல் வாரம் 2025 / NATIONAL POSTAL WEEK 2025 :
- தேசிய அஞ்சல் வாரம் 2025-ன் கருப்பொருளான மக்களுக்கான அஞ்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தின் “ஒரு மாவட்டம்-ஒரு பொருள்” தயாரிப்பான வீட்டு அலங்கார ஜவுளிகளின் சிறப்பு உறையினை மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் திருமதி நிர்மலா தேவி, கரூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெளியிட்டார்.
- ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறைந்தது ஒரு பொருள் தயாரிப்பை தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பது இந்த முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணியிலேயே இந்த சிறப்பு உறை செய்யப்பட்டது, இதற்கு மதிப்பு கூட்டும் வகையில் அமைந்துள்ளது.
உத்தராகண்டில் சிறுபான்மையினர் கல்வி மசோதா 2025-ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் / MINORITY EDUCATION BILL 2025 IN UTTARAKHAND-GOVERNOR GURMEET SINGH APPROVES :
- உத்தராகண்டில் மதரஸா கல்வி வாரிய சட்டத்துக்கு மாற்றாக சிறுபான்மையினர் கல்வி மசோதா அண்மையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் குர்மீத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதியுடன் மதரஸா கல்வி வாரிய சட்டம் காலாவதியாகிறது.
- இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் சிறுபான்மையினர் கல்வி மசோதா, சட்டமாகி உள்ளது. புதிய சட்டத்தின்படி சிறுபான்மையினர் கல்வி ஆணையம் உருவாக்கப்படும். இந்த ஆணையமே சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
புத்த மதத்துக்கு மாறினால் எஸ்சி சான்றிதழ் தர வேண்டும்: கர்நாடக அரசு உத்தரவு / SC CERTIFICATE MUST BE PROVIDED IF YOU CONVERT TO BUDDHISM: KARNATAKA GOVERNMENT ORDERS :
- கர்நாடக அரசின் சமூக நலத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவை சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு உடனடியாக எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
- கர்நாடக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது.
- கடந்த 1990-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கர்நாடக அரசு 2013-ல் வெளியிட்ட சுற்றறிக்கையிலும் இந்த விஷயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களிடமும் புத்த மதத்தினராக மாறிய பட்டியலினத்தவர் எஸ்சி சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
- எனவே கல்வி, வேலைவாய்ப்பு தேவைக்காக புத்த மதத்துக்கு மாறிய பட்டியலினத்தவருக்கு எஸ்சி சாதிச் சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகிறது. இந்த உத்தரவை அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிப்பு / NOBEL PRIZE 2025 ANNOUNCEMENT :
- உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
- இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 71 வயதான ஹங்கேரி எழுத்தாளர் 'லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை' ( László Krasznahorkai) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அழிவை நோக்கிய உலகின் அபோகாலிப்டிக் பயங்கரத்தின் மத்தியில், கலையின் சக்தியை உறுதிப்படுத்தும் அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட பணிக்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.
- உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சி கண்டுபிடிப்பிற்காக சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஒமர் எம். யாகி ஆகிய ஆகிய 3 பேருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் / THE 2ND LARGEST CRICKET STADIUM IN TAMIL NADU :
- வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது.
- பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
- சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான்.
- இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது மதுரைக்கு வந்தடைந்துள்ளார். அவர் மைதானத்தை திறந்து திறந்து வைத்துவிட்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-08th-09th-october-2025