அக்டோபர் மாதம் 2025 (24.10.2025-26.10.2025)
முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான ‘மாஹே’ இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது:
- கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் (சிஎஸ்எல்) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மாஹே (‘MAHE’ - FIRST ANTI-SUBMARINE WARFARE SHALLOW WATER CRAFT) என்ற எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களில் முதலாவது கப்பல் இன்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமான மாஹேவின் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
- கப்பல் கட்டுமானத்தில் அதிகரித்து வரும் இந்தியாவின் தற்சார்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த போர்க்கப்பல் சிஎஸ்எல் நிறுவனத்தால் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது. இது நீருக்கடியில் கண்காணிப்பு, குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தோராயமாக 78 மீட்டர் ஆழத்தில், சுமார் 1,100 டன் இடப்பெயர்வுடன், டார்பிடோக்கள், பல்வேறு செயல்பாடுகளுடன் கூடிய நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட ரேடார்கள் மற்றும் சோனார்கள் மூலம் நீருக்கடியில் போரில் சிறப்பாகச் செயல்படுகிறது.
- நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையின் திறனை கணிசமாக அதிகரிப்பதுடன், கடலோரப் பகுதிகளில் கடல்சார் பாதுகாப்பை அதிகரிக்கும். 80%-க்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன் கட்டப்பட்டுள்ள ‘மாஹே’ போர்க்கப்பல், தற்சார்பு இந்தியா என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை உறுதிப்படுத்துகிறது.
பாதுகாப்பு கொள்முதல் கையேடு 2025 :
- புதுதில்லியில் (அக்டோபர் 23, 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், பாதுகாப்பு கொள்முதல் கையேடு 2025-ஐ (Defence Procurement Manual 2025) வெளியிட்டார். நவம்பர் 01, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த புதிய கொள்முதல் கையேடு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் முப்படைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் கொள்முதலை எளிதாக்கும்.
47-வது ஆசியான் உச்சி மாநாடு :
- 2025-ம் ஆண்டு 47-வது ஆசியான் உச்சி மாநாடு (ASEAN (Association of Southeast Asian Nations)) மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
- இதில் அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் கலந்து கொண்டன.
- தென்கிழக்காசிய நாடுகளான கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக கடந்த மே மாதம் திடீர் மோதல் வெடித்தது.
- இரு நாட்டு படைகளும் மாறி மாறி தாக்கி கொண்டதில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்தனர். எல்லைப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறினார்கள். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர மலேசியா மத்தியஸ்தம் செய்து வந்தது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இதில் தலையிட்டு இரு நாட்டு தலைவர்களுடன் பேசி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
- இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 47வது ஆசியான் உச்சி மாநாட்டின் கலந்துகொண்டார்.
- மாநாட்டின் ஒரு பகுதியாக டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. கம்போடிய பிரதமர் ஹுன் மானெட் மற்றும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் ஆகியோர் டிரம்ப் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தம் மூலம் தாய்லாந்து காவலில் வைத்திருந்த 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான 800 கி.மீ நீளமுள்ள எல்லைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்ட கனரக ஆயுதங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
- இந்த ஒப்பந்தத்துடன் சேர்த்து, மலேசியாவுடனான வர்த்தக ஒப்பந்தம், அரிய மண் தாதுக்கள் ஒப்பந்தத்த்திலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
- மேலும் கம்போடியா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்துடனான கனிம வள ஒப்பந்தத்திலும் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஆயுதப்படைகளுக்காக ரூ.79,000 கோடி மதிப்பிலான ஆயுத தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல்:
- ஆயுதப்படைகளுக்காக ரூ.79,000 கோடி மதிப்பிலான ஆயுத தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு புதுதில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது.
- எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்குக் குழிகள், உள்ளிட்டவற்றை அழிப்பதற்கான இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த எம்கே-II நாக் ஏவுகனைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினருக்கு தேவையான சரக்கு போக்குவரத்திற்காக அதிநவீன வாகனங்கள் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- 30 எம்எம் கடற்படைத் துப்பாக்கி, மேம்பட்ட இலகுரக நீர்மூழ்கிக் குண்டுகள், 76 எம் எம் அதிநவீன துப்பாக்கிக்கான வெடிமருந்து உள்ளிட்டவற்றை இந்தியக் கடற்படைக்காக கொள்முதல் செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.
- கடல்சார் நடவடிக்கை மற்றும் கடல்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் திறனை மேம்படுத்துவதற்காக 30 எம்எம் துப்பாக்கி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் (Montha cyclone) 28-ந்தேதி (அக்.28) இரவுக்குள் கரையை கடக்கும்:
- மோன்தா புயல் (Montha cyclone) 28-ந்தேதி (அக்.28) இரவுக்குள் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏனாம் பிராந்தியம் (Yanam region) காக்கிநாடா அருகில் இருப்பதால், அந்த பகுதியில் பலத்த காற்று மற்றும் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இதனைத் தொடர்ந்து, ஏனாமில் 3 நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
- அனைத்து அரசு பள்ளிகளும் இடையினருக்குத் தேவையான நிவாரண மையங்களாக செயல்படும் என அறிவிப்பு.
- மோந்தா என்பது தாய்லாந்து ஆல் வழங்கப்பட்ட, மணமழை மலர்/ அழகான மலர் என்று பொருள் படும் பெயராகும். இது WMO-ESCAPஐச் சேர்ந்த உறுப்பினர் நாடுகள் முன்னேற்படுத்திய பட்டியலில் இருந்து, வட இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி 2025 :
- ஆசிய இளையோர் விளையாட்டு போட்டி 2025 (Asian Youth Games 2025) பஹ்ரைன் நாட்டில் (Manama, Bahrain) அக்டோபர் 22 முதல் 31, 2025 வரை நடந்தது. இதில் இந்தியா பெருமை பெற்றுள்ளது:
- கபடி: இந்தியா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கம் வென்றன.
- ஆண்கள் இறுதி: இந்தியா 35–32 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது
- பெண்கள் இறுதி: இந்தியா 75–21 என்ற மிகப்பெரிய வெற்றியில் ஈரானை தோற்கடித்தது
- இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா (பெண்கள்) மற்றும் அபினேஷ் (ஆண்கள்) அணி முக்கியப் பங்கு வகித்தனர். இவர்களுக்கு தமிழக அரசு தலா ₹25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டியிருக்கிறது.
ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2025 பதக்கப் பட்டியல்:
| Rank | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
|---|---|---|---|---|---|
| 1 | சீனா | 26 | 17 | 7 | 50 |
| 2 | உஸ்பெகிஸ்தான் | 9 | 4 | 9 | 22 |
| 3 | ஈரான் | 7 | 6 | 13 | 26 |
| 4 | தாய்லாந்து | 7 | 4 | 4 | 15 |
| 5 | கஜகஸ்தான் | 4 | 7 | 13 | 24 |
| 6 | சீன தாய்வான் | 3 | 4 | 9 | 16 |
| 7 | பிலிப்பைன்ஸ் | 3 | 3 | 4 | 10 |
| 8 | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | 3 | 2 | 2 | 7 |
| 9 | பஹ்ரைன் | 3 | 2 | 1 | 6 |
| 10 | இந்தியா | 2 | 6 | 9 | 17 |
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-24th-26th-october-2025


