- இந்தியாவும், ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கமான இஎஃப்டிஏ-வும் (EFTA), 2024 மார்ச் 10 அன்று வர்த்தக - பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தமான டிஇபிஏ-வில் (TEPA) கையெழுத்திட்டன. இது 2025 அக்டோபர் 1. அன்று நடைமுறைக்கு வந்தது , இது நான்கு வளர்ந்த ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும்.
- டிஇபிஏ, 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்து 1 மில்லியன் நேரடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
- இதில் உள்ள நடைமுறைகள், இது பால், சோயா, நிலக்கரி, விவசாயம் போன்ற முக்கிய துறைகளுக்குப் பெரிதும் பயனளிக்கும் .
- இந்த ஒப்பந்தம் சந்தை அணுகலை விரிவுபடுத்தி, உற்பத்தியையும் புதுமைகளையும் அதிகரிக்கும்.
- இஎஃப்டிஏ என்பது ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டீன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். இது 1960-ம் ஆண்டு அதன் உறுப்பினர்களிடையே தடையற்ற வர்த்தக பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
- 2024 மார்ச் 10 அன்று புது தில்லியில் கையெழுத்தான இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக சங்கம் (EFTA) வர்த்தக - பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (TEPA), 2025 அக்டோபர் 1 அன்று நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் ஒரு முக்கியமான தருணமாகும்.
- இது நான்கு வளர்ந்த ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன் ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமாகும் , மேலும், அளவிலும் நோக்கத்திலும் மிகப்பெரிய ஒன்றாகும்.
- இந்த ஒப்பந்தம் 14 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. பொருட்களுக்கான சந்தை அணுகல், வர்த்தக வசதி, வர்த்தக தீர்வுகள், முதலீட்டு மேம்பாடு, சேவைகள், அறிவுசார் சொத்துரிமைகள் முக்கிய பகுதிகளை அவை மையமாகக் கொண்டுள்ளன.
SOURCE : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2177724