நவம்பர் மாதம் 2025 (01.11.2025-03.11.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
மகளிர் உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி :
- மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் 02.11.2025 நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
- இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.
- 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர். 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
- இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். நடப்பு தொடரில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடி வருகிறார். ஸ்மிருதி மந்தனா இறுதிப்போட்டியில் 21 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
- இந்நிலையில், மகளிர் 50 ஓவர் உலக கோப்பை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு மொத்தமாக ரூ.51 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.
- மகளிர் உலகக் கோப்பை 2025 PLAYER OF THE MATCH: ஷஃபாலி வர்மா
- மகளிர் உலகக் கோப்பை 2025 PLAYER OF THE SERIES: தீப்தி சர்மா
வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்:
- இந்த ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் 01.11.2025 தொடங்கியது. தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் 02.11.2025 மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
- ராக்கெட் தரையில் இருந்து புறப்பட்ட 16 நிமிடத்தில் செயற்கைக்கோளை 169 கி.மீ உயரத்தில் திட்டமிட்ட புவிவட்ட பரிமாற்ற சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதன் சுற்றுப்பாதை படிபடியாக மாற்றப்பட்டு குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 29,970 கி.மீ. தொலைவும் கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது :
- இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மாநில சட்டப்பேரவையில் (நவம்பர் 1) முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
- கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு (நவம்பர் 1) கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
- ரூ.1,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், கேரள மாநில அரசு 20,648 குடும்பங்களுக்கு தினசரி உணவை உறுதி செய்தது, அவர்களில் 2,210 பேருக்கு சூடான உணவு வழங்கப்பட்டது. மேலும், 85,721 நபர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு வீட்டுவசதி ஆகியவற்றையும் அரசு உறுதி செய்தது.
- தீவிர வறுமையை ஒழிக்கும் நோக்கில் 5,400க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும், 5,522 வீடுகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளன என்றும், 2,713 நிலமற்ற குடும்பங்கள் வீடு கட்ட நிலம் பெற்றுள்ளன என்றும் பினராயி விஜயன் கூறினார். இது தவிர, 21,263 பேர் முதல் முறையாக ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் ஓய்வூதியம் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றனர் என்றும், மேலும் 4,394 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் கிடைத்துள்ளன.
- மேலும், தீவிர வறுமையை ஒழிக்க ஒரே மாதிரியான கொள்கைக்கு பதிலாக, அரசாங்கம் 64,006 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொருவரின் தனித்துவமான தேவைகளுக்கும் குறிப்பிட்ட நுண் திட்டங்களை உருவாக்கியது.” என்று பினராயி விஜயன் கூறினார்.
- இந்தியா விடுதலை அடைந்த பிறகு, 1 நவம்பர் 1956 அன்று கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது.
- இந்த நாள் கேரளா பிறவி அல்லது கேரளா தினம் என அழைக்கப்படுவதோடு, ஆண்டுதோறும் நவம்பர் 1 அன்று கொண்டாடப்படுகிறது.
- 1956 ஆம் ஆண்டு தமிழகத்தின் தென் கனரா மாவட்டத்தில் உள்ள காசர்கோடு, மலபார், திருவாங்கூர்-கொச்சி பகுதிகள் ஒன்றிணைந்து மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கேரளா என்ற மாநிலமாக உருவாக்கப்பட்டன. இதனால் மலையாள மொழி பேசும் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு கேரள மாநிலம் உருவானது
ஸ்வச் சர்வேக்ஷன் 2025 வருடாந்திர ஆய்வு அறிக்கை :
- மத்திய அரசின் நகர மற்றும் கிராமப்புற தூய்மையை அளவிடும் விசாரணையான "ஸ்வச் சர்வேக்ஷன் 2025" வருடாந்திர ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- இதில் இந்தூர், சூரத், மற்றும் நவி மும்பை இந்தியாவின் தூய்மையான நகரங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- அதே சமயம், மதுரை 4,823 புள்ளிகளுடன் நாட்டின் மிகவும் அசுத்தமான நகரமாக முதன்மை வகித்துள்ளது. சென்னை 6,822 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், பெங்களூரு 6,842 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
- இந்த பட்டியல் கழிவு மேலாண்மை மற்றும் பொதுத்தூய்மை போன்ற அடிப்படைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 35 வயதான நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்:
- டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வு குறித்து கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளதாவது; "நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த முடிவு, வரும் டி20 உலகக் கோப்பைக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அணியின் தேர்வில் தெளிவு கொடுக்க உதவும். நீண்ட காலமாக நான் விரும்பிய ஒரு பகுதியாக இது இருந்துள்ளது. அனைத்து நினைவுகளுக்கும் அனுபவங்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
- 2011 ஆம் ஆண்டில் அறிமுகமான வில்லியம்சன், நியூசிலாந்துக்காக 93 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவர் 2,575 ரன்கள் குவித்து, நியூசிலாந்துக்காக அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 75 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். அதில் நியூசிலாந்து அணி 39 வெற்றிகளைப் பெற்றதுடன், 2016 மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கும், 2021 இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்:
- டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.
- இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுவர் ரோஹன் போபண்ணா. மேலும், இவர் இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-01st-03rd-november-2025


