பிரதமர் நரேந்திர மோதி ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை (RDI Fund) திட்டத்தை தொடங்கி வைத்தார்:
- ‘ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை (RDI-Research, Development, and Innovation)’ நிதியாக ரூ.1 லட்சம் கோடி நிதியை அமைப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இந்தியா முன்னேறுவதற்கு சக்தி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
(RDI-Research, Development, and Innovation)’-திட்டம்:
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST), ஜூலை 1, 2025 அன்று மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை (RDI) திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
- ₹1 லட்சம் கோடி மொத்த செலவினத்துடன் , இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி, அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது இந்தியாவின் நீண்டகால கண்டுபிடிப்பு மற்றும் ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, மூலோபாய தொழில்நுட்பங்களில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்துவதையும் தொழில்நுட்ப தன்னம்பிக்கையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
(RDI-Research, Development, and Innovation)’-திட்டம் முக்கிய நோக்கங்கள் :
1. தனியார் ஆராய்ச்சி முதலீட்டை ஊக்குவித்தல் – இந்தியாவில் தற்போது மொத்த ஆராய்ச்சி செலவில் (GERD) 36% மட்டுமே தனியார் பங்களிப்பு. இதை 50%-க்கு மேல் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
2. Deep-Tech (ஆழமான தொழில்நுட்பம்) – குவாண்டம் கணினி (Quantum Computing), செயற்கை நுண்ணறிவு (AI), உயிரியல் தொழில்நுட்பம் (Biotech) ,பசுமை ஆற்றல் (Green Energy) போன்ற துறைகளில் இந்தியாவை முன்னோடியாக மாற்றுவது.
3. Startups மற்றும் Industry–Academia இணைப்பு – பல்கலைக்கழகங்களும் தொழில்துறைகளும் இணைந்து புதுமைகளை சந்தைக்கு கொண்டு வருதல்.
4. R&D Infrastructure உருவாக்குதல் – புதிய தேசிய ஆராய்ச்சி மையங்கள், ஆராய்ச்சி நிதி மையங்கள், மற்றும் புதுமை மையங்கள் (innovation hubs) உருவாக்கப்படுகின்றன.
5. இந்தியாவின் மொத்த ஆராய்ச்சி செலவு (GERD): GDP-இன் 0.7% மட்டுமே.(உலக சராசரி: சுமார் 2–3%.) . 2030 க்குள் இதை GDP இன் 2% அல்லது அதற்கும் மேலாக உயர்த்துவது.
குறுகிய கேள்விகள் மற்றும் பதில்கள் :
Q1: RDI என்றால் என்ன?
A1: Research (ஆராய்ச்சி), Development (முன்னேற்றம்), Innovation (புதியமைப்பு).
Q2: இந்த திட்டத்தின் நோக்கம் என்ன?
A2: இந்தியாவின் தனியார் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ச்சி செய்து உலகளவில் போட்டியிடும் திறனை வளர்த்தல்.
Q3: மொத்த நிதி எவ்வளவு?
A3: ரூ. 1 லட்சம் கோடி.
Q4: எந்த துறை திட்டத்தை செயல்படுத்தும்?
A4: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Department of Science & Technology - DST).
Q5: எத்தனை ஆண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படும்?
A5: 6 ஆண்டுகள்.
Q6: யார் இதன் மூலம் நன்மை பெறுவார்கள்?
A6:
- தனியார் துறை நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்புகள், மற்றும் டீப்-டெக் ஆராய்ச்சி நிறுவனங்கள்.
- வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப Startups பெருகும்.
- இந்தியா “Innovation-Driven Economy” ஆக மாறும்.

