நவம்பர் மாதம் 2025 (09.11.2025-10.11.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பு 2025 / PERIODIC LABOUR FORCE SURVEY 2025:
- நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் எண்ணிக்கை விகிதம் 2025-ம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் சிறிதளவு அதிகரித்து 55.1 சதவீதமாக உள்ளது. இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் சிறிது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 33.7 சதவீதமாக உள்ளது. இது நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 33.4 சதவீதமாக இருந்தது.
- 15 வயதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை விகிதம் சிறிதளவு அதிகரித்து 2-வது காலாண்டில் 52.2 சதவீதமாக உள்ளது. பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அனைத்து துறைகளிலும் அதிகரித்து சாதனை படைத்து வருகிறது. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் மற்றும் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 2-வது காலாண்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.2 சதவீதமான குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 5.4 சதவீதமாக இருந்தது.
- வேளாண் துறையில் கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் சற்று அதிகரித்து நடப்பு ஆண்டின் 2-வது காலாண்டில் 57.7 சதவீதமாக உள்ளது. இது ஃகாரிப் பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் நடைமுறைகளில் செயல்பாடுகளை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
- நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு விகிதம் 61.7 சதவீதத்திலிருந்து 62.0 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சுய தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 62.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 09 - 10, 2025):
A.62.8%
B.52.2%
C.57.7%
D.55.1%
விடை (Answer): D.55.1%
-----------------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்ஸாமின் முதல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிப் பல்கலைக்கழகம் (First Technology and Vocational Education and Training - T-VET University) :
- சமீபத்தில் (நவம்பர் 8, 2025 அன்று), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில், இந்தப் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.தியாகி கனகலதா பருவா அவர்களின் தியாகத்திற்கு இது ஒரு பொருத்தமான அஞ்சலி என்று அஸ்ஸாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
- வாஹித் கனகலதா பருவா மாநிலப் பல்கலைக்கழகம் (Swahid Kanaklata Barua State University) என்பது அஸ்ஸாமின் முதல் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிப் பல்கலைக்கழகம் (First Technology and Vocational Education and Training - T-VET University) ஆகும்.
- பல்கலைக்கழகத்தின் பெயர்: சுவாஹித் கனகலதா பருவா மாநிலப் பல்கலைக்கழகம் (Swahid Kanaklata Barua State University).
- அமைவிடம்: கோஹ்பூர் (Gohpur), பிஸ்வநாத் மாவட்டம் (Biswanath district), அஸ்ஸாம்.
- சிறப்பம்சம்: இது அஸ்ஸாமின் முதல் பிரத்யேக தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சிப் பல்கலைக்கழகம் ஆகும்.
- பெயர்க் காரணம்: 1942 ஆம் ஆண்டின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தனது 17 வயதில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்றபோது வீரமரணம் அடைந்த இளம் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி கனகலதா பருவா (Swahid Kanaklata Barua) அவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
- நோக்கம்: செயற்கை நுண்ணறிவு (AI), சைபர் பாதுகாப்பு, ட்ரோன் தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற அடுத்த தலைமுறைத் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைத் தொழில் துறைக்குத் தயார்ப்படுத்துவதே இதன் இலக்காகும்.
- ஆரம்ப திட்ட செலவு 415 கோடி ரூபாய். இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்ட மொத்த முதலீடு சுமார் 1,000 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது.
- தியாகி: கனகலதா பருவா, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது, தனது 17வது வயதில் தேசியக் கொடியை ஏந்தியபடி, கோஹ்பூர் காவல் நிலையத்தின் அருகே ஆங்கிலேய காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு வீரமிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஆவார்.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 09 - 10, 2025):
A.Assam / அஸ்ஸாம்
B.West Bengal / மேற்கு வங்கம்
C.Nagaland / நாகாலாந்து
D. Meghalaya / மேகாலயா
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன்:
- சாதனை: ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையின் உச்சியான உகுரு சிகரத்தை (5,895 மீ.) தமிழகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் உட்பட 10 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாக எட்டியுள்ளது.
- சாதனையாளர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (வயது 5).
- சிறப்பு: உலகிலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறிய மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை சிவவிஷ்ணு பெற்றுள்ளார்.
- குழுவின் தலைவர்: எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப் பெண்மணி முத்தமிழ் செல்வி தலைமையில் இந்தக் குழு ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் (5,895 மீ.) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.
- மற்றவர்கள்: சிவவிஷ்ணுவைத் தவிர, காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7), இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12) உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து இந்தச் சாதனையைப் படைத்துள்ளனர்.
- வரலாறு: வரலாற்றில் முதன்முறையாகத் தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் இணைந்து கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
- மலை பற்றிய தகவல்: கிளிமஞ்சாரோ (தான்சானியா நாட்டில் உள்ளது) உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும். இதில் ஏறுவது உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் கடினமானது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 09 - 10, 2025):
A.Inba / இன்பா
B.Manu Chakravarthy / மனு சக்கரவர்த்தி
C.Bari / பாரி
D.Sivavishnu / சிவவிஷ்ணு
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB):
- பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), தனது வாடிக்கையாளர்களுக்காகக் குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
- கூட்டணி: இந்தச் சேவையை வழங்குவதற்காக நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் (NPST) நிறுவனத்துடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் (MoU) போட்டுள்ளது.
- நோக்கம்: இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையான யு.பி.ஐ., தற்போது நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகிவிட்டது. இருப்பினும், இந்தச் சேவையை கண் பார்வையற்ற மற்றும் கல்வியறிவில் குறைந்த வாடிக்கையாளர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இந்தக் குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 09 - 10, 2025):
A.State Bank of India (SBI) / பாரத ஸ்டேட் வங்கி (SBI)
B.Indian Overseas Bank (IOB) / இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
C.Punjab National Bank (PNB) / பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
D.Union Bank of India (UBI) / யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (UBI)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை மெட்ரோ மைக்ரோ பஸ்கள்:
- சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 220 புதிய மின்சார ஏ.சி. மைக்ரோ பஸ்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நோக்கம்: மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகளை எளிதில் சென்றடைய வைப்பது (Last-mile connectivity).
- பஸ்கள் எண்ணிக்கை : 220 புதிய மைக்ரோ பஸ்கள்
- முதற்கட்டமாக 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்தச் சேவை 5 கி.மீ. சுற்றளவில் இயக்கப்படும்.
- சிறப்பம்சம்: இந்த மைக்ரோ பஸ்கள் மினி பஸ்களை விட அளவில் சிறிதாக இருக்கும்.
- கால இடைவெளி: புதிய மைக்ரோ பஸ்கள் அறிமுகமானதும், இவை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் (தற்போதுள்ள மினி பஸ்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படுகின்றன).
- டிக்கெட் முன்பதிவு: பயணிகள் "சென்னை ஒன்" செயலியில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
A.பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பது/To reduce congestion on the city's main roads.
B.மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகளை எளிதில் சென்றடைய வைப்பது (Last-mile connectivity)/ To provide last-mile connectivity to areas around metro stations.
C.நகரிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சேவை வழங்குவது/To provide services to all parts of the city.
D.நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது/To reduce traffic congestion in the city.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய நகர்ப்புற மாநாடு 2025 (National Urban Conclave 2025):
- மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், 2025 நவம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் புது தில்லியில் நடைபெற்ற தேசிய நகர்ப்புற மாநாடு 2025-ல், இரண்டு முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- 1. குப்பை கொட்டும் தளங்களை சீரமைக்கும் துரிதப்படுத்தப்பட்ட திட்டம் (DRAP)
- 2. நகர்ப்புற முதலீட்டு சாளரம் (UiWIN)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியாவின் 2026 புலி கணக்கெடுப்பு அறிக்கை 2026 இல் வெளியிடப்படும் :
- இந்தியாவின் 2026 புலி கணக்கெடுப்பு (All India Tiger Estimation - AITE) என்பது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன வனவிலங்கு கணக்கெடுப்பு ஆகும், இது தற்போது நடைபெற்று வருகிறது. இது ஆறாவது சுழற்சியாகும், இதன் அறிக்கை 2026 இல் வெளியிடப்படும்.
- முக்கிய விவரங்கள் மற்றும் நோக்கங்கள் : இந்தியாவின் 2026 புலி கணக்கெடுப்பு (All India Tiger Estimation - AITE)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
காலநிலை புதுப்பிப்பு நிலை' (State of the Climate Update for COP30) அறிக்கை :
- உலக வானிலை அமைப்பு (WMO) COP30 மாநாட்டிற்காக ஒரு சமீபத்திய 'காலநிலை புதுப்பிப்பு நிலை' (State of the Climate Update for COP30) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :காலநிலை புதுப்பிப்பு நிலை' (State of the Climate Update for COP30) அறிக்கை
-----------------------------------------------------------------------------------------------------------------------------
8வது நம்தாபா பட்டாம்பூச்சி திருவிழா (Namdapha Butterfly Festival) 2025 :
- 2025 ஆம் ஆண்டிற்கான 8வது நம்தாபா பட்டாம்பூச்சி திருவிழா (Namdapha Butterfly Festival), நவம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை, அருணாச்சலப் பிரதேசத்தின் மியாவ் (Miao) துணைப்பிரிவில் உள்ள கச்சாங் கிராமத்தில் (Khachang village) நடைபெற உள்ளது.
- தேதிகள்: நவம்பர் 26 முதல் 28, 2025 வரை (மூன்று நாட்கள்).
- இடம்: கச்சாங் கிராமம், மியாவ், சாங்லாங் மாவட்டம், அருணாச்சலப் பிரதேசம்.
- 8வது நம்தாபா பட்டாம்பூச்சி திருவிழா (Namdapha Butterfly Festival) 2025 :
-----------------------------------------------------------------------------------------------------------------------------
டபிள்யூ. டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் 2025 :
- டபிள்யூ. டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
- இதன் இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் நிலை வீராங்கனையாகத் திகழும் பெலாரஸ் நாட்டின் ஆர்யா சபலென்கா மற்றும் கஜகஸ்தானின் நட்சத்திர வீராங்கனை எலினா ரைபகினா மோதினார்கள்.
- இறுதியில், எலினா ரைபகினா 6-3, 7-6 (7-0) என்ற நேர் செட் கணக்கில் ஆர்யா சபலென்காவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி, WTA ஃபைனல்ஸ் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றார்
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 09 - 10, 2025):
A.Ons Jabeur / ஒன்ஸ் ஜபேர்
B.Coco Gauff / கோகோ காஃப்
C.Elena Rybakina / எலினா ரைபகினா
D.Iga Świątek / இகா ஸ்வியாடெக்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி 2025 :
- 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
- இதில் சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி.யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்றுள்ளார்.
- இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார். மேலும், ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்சிலாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல் இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார். எஸ்.ஆர்.எம். கல்லூரியின் 15-வது கிராண்ட் மாஸ்டராவார்.
நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா (Current Affairs Quiz) -(நவம்பர் 09 - 10, 2025):
A.V. S. Rahul / வி.எஸ்.ராகுல்
B.R. Praggnanandhaa / ஆர். பிரக்ஞானந்தா
C.D. Gukesh / டி. குகேஷ்
D.S. L. Narayanan / எஸ்.எல். நாராயணன்
-----------------------------------------------------------------------------------------------------------------------------
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
current-affairs-in-tamil-09th-10th-november-2025


