நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்கள் அறிமுகம்:
- நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
- ‘டிஆா்ஆா் தன் 100 (கமலா)’ மற்றும் ‘பூசா டிஎஸ்டி ரைஸ் 1’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நெல் ரகங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் மூலம் மரபணு ரீதியாக திருத்தம் செய்யப்பட்டதாகும்.
- இவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தாக்குப் பிடித்து வளா்வதுடன் 30 சதவீதம் கூடுதலாக விளைச்சல் தரக் கூடியவையாகும்.
- இவை தண்ணீா் பற்றாக்குறையைத் தாக்குப் பிடித்து வளரும்; 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கும். கரியமில வாயு வெளியேற்றமும் குறைவாக இருக்கும்.
- ‘டிஆா்ஆா் தன் 100 (கமலா)’ நெல் ரகம் அதன் முந்தைய ரகத்தைவிட 20 நாள்கள் முன்னதாகவே (130 நாள்கள்) அறுவடைக்கு தயாராகிவிடும். இதன்மூலம் பயிா் சாகுபடி சுழற்சி அதிகரிக்கும். கூடுதல் பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். பாசன நீரும் குறைவாகவே செலவாகும்.
- இதற்கு முன்பு சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் மட்டுமே மரபணு திருத்த நெல் ரகங்களை உருவாக்கியுள்ளன.
இசிஐநெட் (ECINET): புதிய டிஜிட்டல் தளம்:
- வாக்காளா்கள், அரசியல் கட்சிகள், தோ்தல் அதிகாரிகள், தோ்தல் ஆணையம் ஆகியோருக்கு இடையேயான அனைத்து சேவைகள், தகவல்கள் உள்ளடக்கிய ஒரே இணையம், செயலியை இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- இதன்படி தற்போதுள்ள வாக்காளா் உதவி மைய செயலி, வாக்காளா் பதிவு செயலி, சி விஜில், சுவிதா 2.0, இஎஸ்எம்எஸ், சாக்ஷம், கேஒய்சி செயலி போன்ற ஏற்கனவே உள்ள செயலிகள், வலை தளங்களை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணைய தளங்களின் சேவையை ஒருங்கிணைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ( தேர்தல் ஆணையத்தின் தற்போதைய 40 க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளையும், வலைதளங்களையும் ஒருங்கிணைத்து மறுசீரமைக்கும்)
- வாக்காளா்கள், தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் வகையில் மாபெரும் முயற்சியாக இசிஐநெட் என்கிற ஒரு புதிய எண்ம தளத்தை இந்திய தோ்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது. ஒரே குடையின் கீழ் அனைத்து சேவைகளையும் வழங்கும் இந்தப் புதிய இசிஐநெட் (உஇஐசஉப) தளத்தின் மூலம், தோ்தல் ஆணையத்தின் அனைத்து கைபேசி செயலிகளையும்,இணை வலைதளங்களையும் ஒருங்கிணைக்கும்.
மறைந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரகுமான் உள்ளிட்ட 5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன:
- பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் 'தமிழ் வார விழா'வாகக் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா நிகழ்ச்சி (05.05.2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
- இந்த விழாவில் மறைந்த எழுத்தாளர்கள் கவிக்கோ அப்துல் ரகுமான், மெர்வின், ஆ. பழநி மற்றும் கொ.மா.கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகிய 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
- தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த பாவேந்தர் பாரதிதாசனைச் சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் 22.4.2025 அன்று சட்டமன்ற பேரவையில், விதி எண்.110-ன் கீழ், ‘பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்’ எனவும், இவ்விழாவில் கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள், தமிழ் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
72-வது உலக அழகிப் போட்டி 2025:
- தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி மே 10-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 120 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் வரும் 8-ம் தேதி முதல் வர தொடங்குகின்றனர்.
- மே 10-ல் ஹைதராபாத் கச்சிபவுலி விளையாட்டு அரங்கில் மாநில சுற்றுலா துறை சார்பில் தொடக்க விழா நடைபெற உள்ளது.
முதல் தேசிய மத்தியஸ்த மாநாடு 2025:
- குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மே 3, 2025) புது தில்லியில் இந்திய மத்தியஸ்த சங்கத்தைத் தொடங்கி வைத்து, முதல் தேசிய மத்தியஸ்த மாநாடு 2025-ல் உரையாற்றினார்.
- இந்த நிகழ்வில் பேசிய குடியரசுத் தலைவர், 2023-ம் ஆண்டின் மத்தியஸ்த சட்டம், நாகரிக மரபை ஒருங்கிணைப்பதில் முதல் படியாகும் என்று கூறினார். இப்போது நாம் அதற்கு உத்வேகம் அளித்து அதன் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆஸ்திரேலிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அந்தோணி அல்பானீஸ்:
- ஆஸ்திரேலியா நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமர் அந்தோணி அல்பானீஸ்(Anthony Albanese) வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகிறார்.
- ஆஸ்திரேலிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. அந்தோணி அல்பானீஸ்க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியா நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சியான -தொழிலாளர் கட்சியே மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 2022-ம் ஆண்டு தேர்தலில் ஆஸ்திரேலியாவின் பிரதமரான அந்தோணி அல்பானீஸ் மீண்டும் பிரதமராகிறார்.
சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதி:
- சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநா்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநா் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான கே.வி.சுப்பிரமணியன், ஐஎம்எஃப்பில் இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அடங்கிய குழு சாா்பில் செயல் இயக்குநராக இருந்தாா்.
உலக வங்கி நிலச் சீா்திருத்த மாநாடு 2025:
- அமெரிக்காவில் வாஷிங்டன் உலக வங்கி தலைமையகத்தில் ‘உலக வங்கி நிலச் சீா்திருத்த மாநாடு 2025’ மே 5-இல் தொடங்கி மே 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா சாா்பில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் உயா்நிலைக் குழு பங்கேற்கிறது.
- இது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நாட்டிலுள்ள கிராமப் பகுதிகளில் நிலங்களை ஆய்வு செய்து, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடமாக்கல் திட்டத்தில் (ஸ்வாமித்வா) இந்தியா சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தியது. ஸ்வாமித்வா திட்டம் கிராம மஞ்சித்ரா போன்ற முன்முயற்சிகள் திட்டங்களில் வெற்றியையொட்டி மத்திய பஞ்சாயத்து ராஜ் துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த மாநாட்டில் பங்கேற்று இத் திட்டங்கள் எடுத்துரைக்கப்படவுள்ளன.
- TNPSC KEY NOTES : SVAMITVA SCHEME DETAILS IN TAMIL (ஸ்வமித்வா திட்டம்)
LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL :
3rd May
உலக பத்திரிக்கை சுதந்திர தினம் (World Press Freedom Day) :
- உலக பத்திரிகை சுதந்திர நாள் என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
- 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சர்வதேச சூரிய தினம் :
- சூரிய ஆற்றலின் முக்கியத்துவம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- இது முதன்முதலில் 1978 ஆம் ஆண்டில் புவி தினத்தை நிறுவிய டெனிஸ் ஹேய்ஸ் என்பவரால் முன்மொழியப்பட்டது.
- 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதியன்று முதன் முதலில் சூரிய தினம் கொண்டாடப் பட்டது.
4th May
உலக தீயணைப்பு படையினர் தினம் (International Firefighters' Day) :
- சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் ( IFFD ) மே 4 அன்று அனுசரிக்கப்படுகிறது .
- 1998 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடிய ஐந்து தீயணைப்பு வீரர்கள் இறந்ததைத் தொடர்ந்து ஜனவரி 4 , 1999 இல் ஒரு முன்மொழிவு செய்யப்பட்ட பின்னர் இது நிறுவப்பட்டது.
5th May
சர்வதேச பேறுகால உதவியாளர் தினம் :
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!