Operation Sindoor-ஆபரேஷன் சிந்தூர்

TNPSC PAYILAGAM
By -
0

 

Operation Sindoor


  • பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
  • ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா மக்கள் மீது கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
  • அதன் தொடர்ச்சியாக ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக 150 கி.மீ. தொலைவில் உள்ள பஹவல்பூரில் இந்திய ராணுவத்தினர் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
  • இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கும் 9 இடங்களும் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்துவதற்கு தீவிரமாக ஆதரித்து வந்த அமைப்புகள் இருந்ததாக உளவுத்துறை தகவல் அளித்தது. அதன் அடிப்படையிலேயே இந்த அதிரடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


எந்தெந்த இடங்கள், அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவரங்கள்:

  1. மர்கஸ் அஹ்லே ஹதீஸ், பர்னாலா (லஷ்கர் இ தொய்பா)
  2. மர்கஸ் அப்பாஸ், கோட்லி (ஜெய்ஸ் இ முகமது)
  3. மஸ்கர் ரஹீல் ஷாஹித், கோட்லி (ஹிஸ்புல் முஜாஹிதீன்)
  4. ஷவாய் நல்லா முகாம், முசாபராபாத் (லஷ்கர் இ தொய்பா)
  5. சையத்னா பிலால் முகாம், முசாபராபாத் (ஜெய்ஸ் இ முகமது)
  6. மர்கஸ் சுப்ஹான் அல்லா, பஹவல்பூர் (ஜெய்ஸ்-இ-முகமது)
  7. மார்கஸ் தைபா, முரிட்கே (லஷ்கர்-இ-தொய்பா)
  8. சர்ஜால், தெஹ்ரா கலான் (ஜெய்ஸ் இ முகமது)
  9. மெஹ்மூனா ஜோயா, சியால்கோட் (ஹிஸ்புல் முஜாஹிதீன்)

'ஆப்ரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைக்கக் காரணம் என்ன?
  • கணவர்களை இழந்து சிந்தூர் என இந்தியில் அழைக்கப்படும் சிவப்பு பொட்டை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் :

  • பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதில் நடவடிக்கையான 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

கர்னல் சோபியா குரேஷி:

  • இந்திய ராணுவத்தின் ராணுவத்தின் தகவல் தொடர்பு (சிக்னல்ஸ்) படைப்பிரிவின் அதிகாரியாக 36 வயதான கர்னல் சோபியா குரேஷி செயல்பட்டு வருகிறார். இவர் குஜராத்தைச் சேர்ந்தவர். உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவரது கணவர் காலாட்படை அதிகாரி ஆவார்.
  • மார்ச் 2016 இல் சர்வதேச ராணுவப் பயிற்சியில் இந்தியா மட்டுமின்றி ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா, கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 18 படைப்பிரிவுகள் பங்கேற்றன. அதில் இந்தியாவின்படைப்பிரிவை வழிநடத்திய ஒரே பெண் அதிகாரி லெப்டினன்ட் கர்னல் குரேஷி ஆவார்.
  • இதுபோன்ற பெண் அதிகாரிகள் சர்வதேச ராணுவப் பயிற்சியில் ஈடுப்பட்டது கிடையாது. இந்த சாதனை புரிந்து முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார். சோபியா 2006 இல் காங்கோவில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் பணியாற்றினார். 2010 முதல் பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிராக அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

விங் கமாண்டர் வியோமிகா சிங்:

  • இந்திய விமானப்படையின் முக்கிய பெண் அதிகாரிகளுள் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஒருவர். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு பைலட்டாக விமானப்படையில் சேர்ந்தார். முதலில் சீட்டாக் மற்றும் சீட்டா உள்ளிட்ட ஹெலிகாப்டர்களை ஓட்டி வந்தார்.
  • 2017ஆம் ஆண்டு விங் கமாண்டராக வியோமிகா சிங் பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு பெண்களின் பாதுகாப்பு பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை முதல் இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை தொடங்யுள்ளது.
  • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல பெண்கள் கணவரை இழந்துள்ளனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் பெண்களை கொண்டே பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா பெண் அதிகாரிகளை கொண்டு பதிலடி கொடுத்து வருவது உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.


நன்றி : Dinamani (07.05.2025)


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)