CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (14.06.2025-15.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (14.06.2025-15.06.2025)


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென் ஆப்பிரிக்கா:

  • ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
  • அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள்.
  • தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை மிகச்சிறப்பாக பெளலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 138 ரன்களுக்கு சுருட்டி வீசி 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
  • அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
  • அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மிகச்சிறப்பாக பெளலிங் செய்த தென் ஆப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
  • இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் ஐசிசி ஃபைனலில் சதத்தை அடித்த முதல் தென்னாபிரிக்க வீரராக சாதனை படைத்து 136 (207) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
  • இறுதியில் கெய்ல் வேரின் 7*, பேடிங்கம் 21* ரன்கள் எடுத்ததால் 285/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

  • அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாபிரிக்கா சாதனை படைத்தது. அதை விட 1998 நாக் அவுட் டிராபிக்கு பின் 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது.


ஆப்பரேஷன் ரைஸிங் லயன்:

  • ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ ஈரான் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கிய தாக்குதல் நடவடிக்கைக்கு இஸ்ரேல் வைத்துள்ள பெயா் இது. நீண்ட நேரம் பதுங்கியிருந்து இரையைப் பிடிப்பதற்காக எழுந்து பாயும் சிங்கத்தைப் போல, ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிா்மூலமாக்குவதற்காக ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு தற்போது முழுவீச்சில் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த நடவடிக்கைக்கு ‘எழும் சிங்கம்’ என்று பெயரிட்டுள்ளது இஸ்ரேல்.
  • ஈரானின் நடான்ஸ் பகுதியில் அமைந்துள்ள பிரதான யுரேனியம் செறிவூட்டல் மையம் உள்பட பல்வேறு முக்கிய நிலைகள் மீதும் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டன. இதில் யுரேனியம் செறிவூட்டல் கட்டமைப்பின் சில பகுதிகள் சேதமடைந்தன. மேலும், 12-க்கும் மேற்பட்ட ரேடாா் கண்காணிப்பு அமைப்புகள், மேற்கு ஈரானில் உள்ள தரையிலிருந்து வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் இந்தத் தாக்குதலில் அழிக்கப்பட்டன.
  • இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) தலைமைத் தளபதி ஹுசைன் சலாமி, அந்தப் படையின் ஏவுகணை திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்டோா் கொல்லப்பட்டனா். சில அணுசக்தி விஞ்ஞானிகளும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தனா் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • ஐஆா்ஜிசி-யின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்ட முக்கியப் பாதுகாப்புப் படைத் தளபதிகள் கொல்லப்பட்டதை ஈரானும் உறுதிப்படுத்தியது.

ருத்ராஸ்திர ட்ரோன் : 

  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. இந்த ட்ரோனால் செங்குத்தாக மேலெழும்பி பறந்து சென்று, இலக்கை நெருங்கியதும் செங்குத்தாக தரையிறங்கி துல்லிய தாக்குதல் நடத்த முடியும்.
  • ‘ருத்ராஷ்ட்ரா’ என்ற ட்ரோனை சோலார் ஏரோஸ்பேஸ் அண்ட் டிபன்ஸ் லிமிடெட்(எஸ்டிஏஎல்) நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயார் செய்தது. இது செங்குத்தாக மேலெழும்பி மற்றும் தரையிறங்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை போக்ரானில் கள பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்தது. பரிசோதனையில் 50 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தகர்த்தது. இலக்கு தூரத்தை அதிகரித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாக முடிந்தன.
  • ருத்ராஷ்ட்ரா ட்ரோனால் 1.5 மணி நேரம் பறந்து சென்று 170 கி.மீ இலக்கை தாக்க முடியும். இந்த ட்ரோனால் தன்னிச்சையாக செயல்பட்டு தாக்குதல் நடத்தியபின் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர முடியும். அதோடு இதில் உள்ள கேமிரா மூலம் தாக்குதல் காட்சிகளை நேரடியாக காணலாம்.
  • மேக் இன் இந்தியா திட்டத்தால், தயாரிக்கப்பட்ட இந்த ட்ரோனால், எதிரி நாட்டுக்குள் 100 கி.மீ தூரம் சென்று இலக்குகள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
  • இந்த பரிசோதனையை பார்வையிட ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது. இது அவர்களுக்கு ஊக்குவிப்பாகவும், புதுமையை கண்டுபிடிக்கவும் உதவும். இதன் மூலம் ட்ரோன்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறையும்.
  • நவீனகால போர் முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அதி நவீன ட்ரோன்களை தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் டரோன் தயாரிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு இந்திய ராணுவம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது


நாரி சக்தி வந்தான் ஆதினியம்:

  • மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை செயல்படுத்த இந்திய அரசு தயாராகி வருகிறது. நாரி சக்தி வந்தன் ஆதினியம் (Nari Shakti Vandan Adhiniyam) என்று அழைக்கப்படும் இந்த முயற்சி, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தொடர்ந்து வரவிருக்கும் எல்லை நிர்ணயப் பயிற்சியுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. 2029 மக்களவைத் தேர்தலில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
  • நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்பது பெண்களுக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா ஆகும். நாரி சக்தி வந்தன் ஆதினியம் செப்டம்பர் 2023 இல் நிறைவேற்றப்பட்டது.இது இந்திய அரசியலமைப்பின் 106வது திருத்தமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவும் என கருதப்படுகிறது.


உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 :

  • ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
  • இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங் 241.9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். பிரான்ஸின் காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி (241.7) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் குயன்ஸுன் யாவோ (221.7) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-14th-15th-june-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)