CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (16.06.2025-17.06.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2025 (16.06.2025-17.06.2025)


பிரதமருக்கு மகாரியோஸ் III கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டுள்ளது:

  • சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான "மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்" விருதை வழங்கினார்.
  • 140 கோடி இந்திய மக்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், அந்நாட்டு அதிபர், அரசு மற்றும் மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியா-சைப்ரஸ் இடையே கட்டமைக்கப்பட்டுள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் அடிப்படையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால உறவுகளுக்கு இந்த விருதை அவர் அர்ப்பணித்தார். இந்த விருது இந்தியாவின் "வசுதைவ குடும்பகம்" அல்லது "உலகம் ஒரே குடும்பம்" என்ற பழமையான தத்துவத்தை அங்கீகரிப்பதாக உள்ளது என்றும், உலகளவில் அமைதி, முன்னேற்றத்திற்கான தொலைநோக்கு பார்வையை வழிநடத்துவதாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.


நகர நில ஆவணங்களை நவீமயமாக்கும் திட்டம் :

  • நில அளவைகளை துல்லியமாக்கும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகரில் நகர நில ஆவணங்களை நவீமயமாக்கும் நக்‌ஷா திட்டம் (17.06.2025) தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக இத்திட்டம் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை நில அளவை மற்றும் நிலவரித்துறை மூலம் தமிழகத்தில் உள்ள நில ஆவணங்களை நவீனமயமாக்கும் (நக்‌ஷா) திட்டம் முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், சிவங்கை மாவட்டம்- காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கோவை மாநகராட்சி 7 வார்டுகள், விருதுநகர் ஆகிய நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

  • இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறை நில அளவை ஆவணங்களும், நகராட்சி நிர்வாகத்தின் சொத்து வரி விபரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு இணைய வழியில் கொண்டுவரப்பட உள்ளது. இதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்துக்கான அளவுகள் மற்றும் பரப்புகளை அமைவிடப் புள்ளி விவரங்களுடன் மிகத் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.10.86 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


2025 மே மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள் (All India Wholesale Price Index )வெளியீடு:

  • அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண்ணின் அடிப்படையில் 2025 மே மாதத்திற்கான (2024  மே மாதத்தை விட)  பணவீக்க விகிதம் 0.39% ஆக உள்ளது.  2025 மே மாதத்தில் முதன்மையான  உணவுப் பொருட்கள், மின்சாரம், பிற உற்பத்தி பொருட்கள், ரசாயனப் பொருட்கள், பிற போக்குவரத்து உபகரணங்கள், உணவுப் பொருள் அல்லாத பொருட்களின் உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வு, பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்கு காரணமாகும்.
  • முதன்மைப் பொருட்கள் (சிறப்பு நிலை 22.62%):- கனிமங்கள் (-7.16%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.63%) 2025 ஏப்ரல்   மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் குறைந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை (0.56%) 2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் அதிகரித்துள்ளது,
  • எரிபொருள் & மின்சக்தி  ( 13.15%:- தாது எண்ணெய்களின் விலை (-2.06%) 2025 ஏப்ரல் உடன் ஒப்பிடும்போது 2025 மே  மாதத்தில் குறைந்துள்ளது. நிலக்கரி (0.81%) மற்றும் மின்சக்தியின் விலை (0.80%) 2025 ஏப்ரல்  உடன் ஒப்பிடும்போது 2025 மே மாதத்தில் அதிகரித்துள்ளது.
  • உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் (சிறப்பு நிலை 64.23%):- பிற உலோகம் அல்லாத கனிமப் பொருட்களின் உற்பத்தி; கணினி, மின்னணு, கண்ணாடி இழைப் பொருட்கள்; மருந்துகள், ரசாயன மற்றும் தாவரவியல் பொருட்கள், ஜவுளி போன்றவை. மாதந்தோறும் விலை உயர்ந்தன. உணவுப் பொருட்கள் உற்பத்தி, அடிப்படை உலோகங்கள்,  ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், ரசாயன பொருட்கள், மின் உபகரணங்கள் போன்றவை விலையில் சரிவை கண்டன.
  • மொத்த விலை உணவு குறியீடு (சிறப்பு நிலை 24.38%):- உணவுப் பொருள் குறியீடு  ஏப்ரல்  மாதத்தில் 189.3 ல் இருந்து  மே மாதத்தில் 189.5 ஆக அதிகரித்துள்ளது. மொத்த விலை உணவு குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட பணவீக்க விகிதம் 2025 ஏப்ரல் மாதத்தில் 2.55% இருந்து 2025 மே மாதத்தில் 1.72% ஆகக் குறைந்துள்ளது.

ஏப்ரல்-மே 2025 இல் ஒட்டுமொத்த ஏற்றுமதி:

  • ஏப்ரல்-மே 2025 இல் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஏப்ரல்-மே 2024 இல் 134.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 5.75% வளர்ச்சியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2025 ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 142.43 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 5.75 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது. 2025 ஏப்ரல்-மே மாதங்களில் மொத்த இறக்குமதி 159.57 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 6.52 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
  • மே 2025 இல் சரக்கு ஏற்றுமதி 38.73 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது மே 2024 இல் 39.59 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • மே 2025 இல் சரக்கு இறக்குமதிகள் 60.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தன, இது மே 2024 இல் 61.68 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

இந்தியாவின் மிகப் பெரிய பன்னோக்கு சரக்கு முனையம் திறப்பு:

  • ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்(17.06.2025) ஹரியானாவின் மானேசரில் உள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நாட்டின் மிகப்பெரிய வாகன பன்னோக்கு  சரக்குப் போக்குவரத்து முனையத்தை ( India’s Largest Automobile Gati Shakti Multi-Modal Cargo Terminal ) திறந்து வைத்தார்.
  • மானேசரில் உள்ள மாருதி சுசுகியின் ஆலையில் உள்ள இந்த முனையம், வாகனப் போக்குவரத்தில் சரக்குப் போக்குவரத்துத் திறனை கணிசமாக மேம்படுத்தும். இந்த முனையம் மானேசரிலிருந்து 10 கிலோ மீட்டர் பிரத்யேக இணைப்பு மூலம் பட்லி ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஹரியானா ரயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தால் (HRIDC) உருவாக்கப்பட்டு வரும் 121.7 கிலோ மீட்டர் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதியாகும்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (எஸ்ஐபிஆர்ஐ) வெளியிட்டுள்ளள அறிக்கை:

  • அணு ஆயுத கையிருப்பை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2024-ம் ஆண்டில் இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டு இது 180 ஆக அதிகரிக்கும். மேலும் மேம்பட்ட அணுசக்தி விநியோக அமைப்புகளை உருவாக்குவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
  • மேலும் புது வகையான அணுசக்தி விநியோக அமைப்புகளையும் தொடர்ந்து இந்தியா உருவாக்கி உள்ளது. இதன்மூலம் அணு ஆயுத திறனில் பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் 600 ஆயுதங்கள் உள்ளன. சீனா 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 100 அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது.
  • அணு ஆயுத திறன் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் இடையே சமீபத்தில் சண்டை நடைபெற்றது. இதுபோன்ற சூழலில் இரு பக்கத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரித்து வருவது உலக நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது.
  • அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த 9 நாடுகளும் அணு ஆயுதங்களை அதிகரிக்கவும் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தவும் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை கைவிட ஈரான் திட்டம்:

  • ஈரான் நாடாளுமன்றம் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து (NPT) வெளியேறுவதற்கான மசோதாவைத் தயாரித்து வருவதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்றால் என்ன? - அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) என்பது அணு ஆயுதங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்டது ஆகும். மேலும், அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அணு ஆயுதக் குறைப்பு மற்றும் முழுமையான உலகளாவிய ஆயுதக் குறைப்பு இலக்கை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஒப்பந்தமாகும்.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர ஐந்து உறுப்பினர்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை அணு ஆயுத நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. மற்ற நாடுகள் தங்கள் சொந்த அணு ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கிய பிறகு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் 1970-இல் நடைமுறைக்கு வந்தது, 1995-இல் இது காலவரையின்றி நீட்டிக்கப்பட்டது.
  • ஐ.நா. தரவுகளின்படி, மொத்தம் 191 நாடுகள் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஈரான் 1970-இல் அதன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்தது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ், நாடுகள் அணு ஆயுதங்களைக் கைவிட்டு, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) ஒத்துழைத்த பிறகு சிவில் அணுசக்தியைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-16th-17th-june-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)