CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (13.07.2025-15.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (13.07.2025-15.07.2025)


உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் தொடக்கம்:

  • மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடத்துக்கே சென்று தீர்த்து வைக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" என்ற திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த திட்டம் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • சிதம்பரத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.07.2025 தொடங்கி வைத்தார். இந்த திட்டம் முதல்வரின் முகவரி துறை வழியே செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.


பெண்களால் மட்டுமே நடத்தப்படும் முதலாவது மருத்துவமனை:

  • பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வலுவான நடைமுறையின் ஒரு பகுதியாக பெண்களால் மட்டுமே நடத்தப்படும் வசந்த் விஹார் மருத்துவமனை பிலாஸ்பூரில் உள்ள தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் துவங்கப்பட்டுள்ளது. இது இந்திய நிலக்கரி நிறுவனத்தின் முதலாவது மருத்துவமனையாகும்.
  • இந்த மருத்துவமனையை தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு ஹரீஷ் துஹான் திறந்துவைத்தார். நிலக்கரி துறையில் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் குறிப்பிடத்தக்க முன்முயற்சியை இது குறிக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவிப்பணியாளர்கள் என 16 பெண்களைக் கொண்ட குழுவினரால் இந்த மருத்துவமனை நடத்தப்படும்.


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது செலவு குறைந்த மேம்பட்ட கார்பன் ஃபைபர் கால் செயற்கை உறுப்பு:

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் (டிஆர்டிஎல்) மற்றும் பிபிநகர் எய்ம்ஸ் இணைந்து உருவாக்கியுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது செலவு குறைந்த மேம்பட்ட கார்பன் ஃபைபர் கால் செயற்கை உறுப்பு(First Make-in-India cost-effective advanced Carbon Fibre Foot Prosthesis), 2025 ஜூலை 14 அன்று, தெலங்கானாவின் பிபிநகர் எய்ம்ஸில் வெளியிடப்பட்டது. தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இக்கருவியை பிரபல விஞ்ஞானியும், டிஆர்டிஎல் இயக்குநருமான டாக்டர் ஜி ஏ ஸ்ரீனிவாச மூர்த்தி, பிபிநகர் எய்ம்ஸ் செயல் இயக்குநர் டாக்டர் அகந்தம் சாந்தா சிங் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
  • உரிய பாதுகாப்பு காரணியுடன் 125 கிலோ வரையிலான எடைகளை தாங்குவதற்கு ஏற்ற வகையில் இக்கருவி சோதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகை எடையுடைய நோயாளிகளுக்கு ஏற்றவகையில் மூன்று வகைகளாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச மாதிரிக்கு இணையான செயல்திறனுடன் உயர்தரமிக்க மற்றும் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய வகையில் இது வழங்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இதே போன்ற கருவியானது இரண்டு லட்சம் ரூபாய் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுவதுடன் ஒப்பிடும் போது இங்கே உற்பத்தி செய்யப்படும் இந்த தயாரிப்பு 20,000 ரூபாய்க்கும் குறைவான செலவுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே, இந்த கண்டுபிடிப்பு இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட  மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்தர செயற்கை உறுப்புகளுக்கான அணுகலை கணிசமாக மேம்படுத்தும்.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவைக்கு 4 நியமன எம்.பி.க்களை நியமித்தார்:

  • மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
  • அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக) மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோர் நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார். மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மீதமுள்ள உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள்:

  • அகில இந்திய மொத்த விலை குறியீட்டு  எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஆண்டு பணவீக்க விகிதம் 2025-ம் ஆண்டு ஜூன்  மாதத்திற்கு (2024ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது) (-) 0.13%-ஆக (தற்காலிகமானது) உள்ளது. 2025 ம் ஆண்டு ஜூன் மாதத்தில், பணவீக்க விகிதம் எதிர்மறையாக உள்ளது. 
  • இந்த பணவீக்க விகிதம்  முதன்மையாக உணவுப் பொருட்கள், கனிம எண்ணெய்கள், அடிப்படை உலோகங்களின் உற்பத்தி, கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளில் ஏற்பட்ட குறைவு காரணமாக ஏற்பட்டதாகும்.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமியை வந்தடைந்தார்:

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட சுபான்ஷூ சுக்லாவும் அவரது குழுவினரும், ட்ராகன் விண்கலம் மூலம் பூமிக்கு (15.07.2025) வந்தடைந்தனர். 
  • விண்கலம் கடலில் தரையிறங்கிய நிலையில் அதற்குள் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷூ சுக்லா 18 நாட்கள் (ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ்) தங்கியிருந்திருக்கிறார்.
  • ISSல் ISRO வழங்கிய ஏழு மைக்ரோகிராவிட்டி சோதனைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறார்.


ஒட்டுமொத்த ஏற்றுமதிகள் (வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள்)  ஏப்ரல்-ஜூன் -2025:

  • 2025 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் வணிகப் பொருட்கள் மொத்த ஏற்றுமதி மதிப்பு 112.17 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இது 2024 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் 110.06 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, இது 1.92% நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்கிறது.
  • 2025 ஏப்ரல்-ஜூன்  காலக்கட்டத்தில் பெட்ரோலியம் அல்லாத பிற பொருட்களின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 94.77 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், இது 2024 ஏப்ரல்-ஜூன் காலக்கட்டத்தில் 89.42 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததுடன் ஒப்பிடும்போது 5.97% அதிகரிப்பாகும்.
  • 2025 ஜூன் மாதத்தில் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய காரணிகளில் மின்னணு பொருட்கள், மருந்துகள், பொறியியல் பொருட்கள், கடல்சார் பொருட்கள், இறைச்சி, பால் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
  • மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 2.82 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 46.93% அதிகரித்து 2025 ஜூன்  மாதத்தில் 4.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • மருந்துகளின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 2.47 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 5.95% அதிகரித்து 2025 ஜூன் மாதத்தில் 2.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 9.38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 1.35% அதிகரித்து 2025 ஜூன்  மாதத்தில் 9.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 0.56 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 2025 ஜூன்  மாதத்தில் 13.33% அதிகரித்து 0.63 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
  • இறைச்சி, பால் பொருட்களின் ஏற்றுமதி 2024 ஜூன் மாதத்தில் 0.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில் அது 19.70% அதிகரித்து 2025 ஜூன்  மாதத்தில் 0.37 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 2025:

  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில்  8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் தொடரில் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதன்முறையாகும். ஒட்டுமொத்தமாக இகா ஸ்வியாடெக் வென்றுள்ள 6-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
  • நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன் மூலம் முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸில் அவர் சாம்பியன் பட்டம் வென்றார்.இந்த வெற்றியின் மூலம் ஓபன் ஈராவில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற சாதனையை சின்னர் படைத்தார். அதிக முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற இத்தாலி வீரர் என்ற சாதனையையும் சின்னர் படைத்தார். விம்பிள்டனில் முதல் நிலை வீரர் இறுதி ஆட்டத்தில் இரண்டாம் நிலை வீரரை வீழ்த்துவது இது 11-வது முறை. இந்த வெற்றி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சின்னரின் 81-வது வெற்றியாக அமைந்தது.


உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2025:

  • உலகக் கோப்பை வில்வித்தை போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.
  • இதில் மகளிருக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பிரனீத் கவுர், பிரித்திகா பிரதீத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி இறுதிப் போட்டியில் 225-227 என்ற கணக்கில் சீன தைபேவிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.
  • மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜோதி சுரேகா 147-148 என்ற கணக்கில் இங்கிலாந்தின் எல்லா கிப்சனிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-13th-15th-july-2025

 

Post a Comment

0Comments

Post a Comment (0)