மாற்று திறனாளிகள் எளிதாக பயன்படுத்த நவீன சக்கர நாற்காலி: சென்னை ஐஐடி அறிமுகம்:
- மாற்றுத் திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், போரில் காயமடைந்து நடக்க முடியாத ராணுவத்தினர் ஆகியோர் பயன்பெறும் வகையில் உலக தரத்தில், எடை குறைவான ‘ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
- டிரிம்பிள் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் இதற்கான ஆராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டது.சென்னை ஐஐடியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ மருத்துவ பணிகள் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் இந்த நாற்காலியை அறிமுகப்படுத்தினார்.
- ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான த்ரைவ் மொபிலிட்டி நிறுவனம் இந்த சக்கர நாற்காலிகளை வணிகரீதியில் தயாரிக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
- பொதுவாக சக்கர நாற்காலிகள் 17 கிலோ அளவுக்கு இருக்கும். இதை பயனாளிகள் பயன்படுத்த சற்று சிரமமாக இருக்கும். ஐஐடி உருவாக்கியுள்ள சக்கர நாற்காலியின் எடை 8.5 கிலோதான்.
- குறைந்த எடையில், உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியானது, பாதுகாப்பானது. இதுபோன்ற சக்கர நாற்காலிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ரூ.2.40 லட்சம் செலவாகும். ஆனால், ஐஐடியின் சக்கர நாற்காலி ரூ.75 ஆயிரத்துக்கு கிடைக்கும்
தேசிய வேளாண் அறிவியல் விருது 2025:
- கோயம்புத்தூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் திரு கே ஹரி, திரு புத்ரபிரதாப், திரு பி முரளி, திரு ரமேஷ் சுந்தர், திரு வி சிங்காரவேலு ஆகிய 5 பேருக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது.
- புதுதில்லியில், (16.07.2025) நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் 97-வது நிறுவன தின விழாவின் போது இந்த விருதுகளை அவர்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வழங்கினார். “வேளாண்மையிலும் அதனுடன் தொடர்புடைய துறைகளிலும் புதுமை கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பமும்” என்ற பிரிவின் கீழ் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விருது. விவசாயத்தில் நவீன ஆராய்ச்சியையும், புதுமை கண்டுபிடிப்புகளையம் அங்கீகரித்து அதற்கென வழங்கப்படுகிறது. மண்ணின் ஈரப்பதத்தை அளவிட்டுக் காட்டும் கருவியை இந்த விஞ்ஞானிகள் குழு உருவாக்கியதற்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.
- இந்தக் கருவியின் மூலம், ஈரப்பத அளவைக் கண்காணித்து பயிர் சாகுபடியில் இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என இதனைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் நடைபெற்ற கள சோதனைகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
நாட்டில் ஜூன் மாதத்தில் 2025 வேலையின்மை விகிதம்:
- நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
- மே மாதத்தில் பெண்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் 5.8 சதவீதமாக இருந்த நிலையில் ஜூன் மாதம் 5.6 சதவீதமாக குறைந்தது.
- 15-29 வயதுடையவா்கள் மத்தியிலான வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 15 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 15.3 சதவீதமாக உயா்ந்தது.
- அதிகரித்த நகா்ப்புற வேலையின்மை: நகா்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 17.9 சதவீதமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் 18.8 சதவீதமாக அதிகரித்தது.
- கிராமப்புற பகுதிகளில் வேலையின்மை விகிதம் மே மாதத்தில் 13.7 சதவீதமாக இருந்தது. இது ஜூன் மாதத்தில் 13.8 சதவீதமாக அதிகரித்தது.
- தொழிலாளா் பங்கேற்பு விகிதம்: 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோா் மத்தியிலான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் ( எல்எஃப்பிஆா்) ஜூன் மாத்தில் 54.2 சதவீதமாக இருந்தது. இது மே மாதத்தில் 54.8 சதவீதமாக இருந்தது.
- அதேபோல் ஜூன் மாதத்தில் 15 வயதுடையோருக்கான தொழிலாளா் பங்கேற்பு விகிதம் கிராமப்புறத்தில் 56.1 சதவீதமாகவும் நகா்ப்புறத்தில் 50.4 சதவீதமாகவும் உள்ளது.
ஒலியைவிட 8 மடங்கு வேகம் சென்று தாக்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி:
- ஒலியைவிட 8 மடங்கு வேகத்தில் சென்று 1,500 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) தயாரித்து சோதனை செய்து வருகிறது. பல கட்ட வெற்றிகர பரிசோதனைக்குப்பின் இந்த ஆயுதங்கள் படையில் சேர்க்கப்படும்.
- இந்நிலையில் இடி-எல்டிஎச்சிஎம் (Extended Trajectory Long Duration Hypersonic Cruise Missile (ET-LDHCM) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணையை டிஆர்டிஓ தயாரித்தது. இது ஒலியை விட 8 மடங்கு வேகத்தில் (மேக் 8) அதாவது மணிக்கு 11,000 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
- தற்போது இந்த வகை ஏவுகணை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிடம் மட்டுமே உள்ளன. ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதால், அந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
போலிகிராஸ் மேஜிஸ் ஸ்கில் விருது 2025:
- இந்திய ஹாக்கி வீராங்கனை தீபிகாவுக்கு பெருமைமிக்க போலிகிராஸ் மேஜிஸ் ஸ்கில் விருது வழங்கப்பட உள்ளது.
- கடந்த ஆண்டு எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் தொடரில் அவர் சிறப்பாக விளையாடி ஃபீல்டு கோலை அடித்ததற்காக இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வீராங்கனை தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக அளவிலான ஹாக்கி ரசிகர்கள், வாக்குகளை செலுத்தி இந்த விருதுக்கு வீரர், வீராங்கனையைத் தேர்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் பிரிவில் பெல்ஜியம் வீரர் விக்டர் வெக்னெஸ் இந்த விருதைப் பெற உள்ளார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-16th-17th-july-2025