CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (05.07.2025-06.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (05.07.2025-06.07.2025)


ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்:

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறையின் சார்பில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார். 
  • மேலும், 103 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 முதன்மை பதப்படுத்தும் மையங்கள், 18 சேமிப்புக் கிடங்குகள், 3 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 3 வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையங்கள், 8 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள், 10 துணை வேளாண் விரிவாக்க மையங்கள், 2 விதை சேமிப்புக் கிடங்குகள், உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம், 2 ஒருங்கிணைந்த விதைச்சான்று வளாகங்கள், அலுவலகக் கட்டடம், மாணவர் விடுதி மற்றும் தரக்கட்டுப்பாடு/ பகுப்பாய்வகம் உள்ளிட்ட 52 கட்டடங்களை திறந்து வைத்தார்.

உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டம்:

  • அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஜூலை 15-ம் தேதி தொடங்கி வைக்கிறார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற விடுபட்டவர்கள் இதில் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் :

  • வேளாண்மைத் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் வேளாண்மைத் துறைக்கென 5 தனி நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்து, ரூ.1,94,076 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள், உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்து, வேளாண் பெருமக்களின் வருவாயினை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களின் மண்வளத்தினை அறிந்திட தமிழ் மண் வளம் இணையதளம், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், உழவர் பெருமக்களுக்கு வேளாண் உபகரண தொகுப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ விருது:

  • அரசு முறை சுற்றுப்பயணமாக கரீபியன் தீவுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டிற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய, `ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
  • இது மோடிக்கு வழங்கப்பட்ட 25வது சர்வதேச விருதாகும். இதுவரை சௌதி அரேபியா, ஆஃப்கானிஸ்தான், பாலஸ்தீனம், மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், அமெரிக்கா, ஃபிஜி, பலாவ், பாப்புவா நியூ கினி, எகிப்து, பிரான்ஸ், கிரீஸ், பூடான், ரஷ்யா, நைஜீரியா, டொமினிகா, கயானா, குவைத், பார்படோஸ், மொரீஷியஸ், இலங்கை, சைப்ரஸ் ஆகிய நாடுகளும் தங்கள் உயரிய விருதுகளை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளன. 


டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு பிரதமரின் பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை:

  • டிஜிட்டல் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் வலுவான ஆர்வத்தை வெளிப்படுத்தின. இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் கட்டண தளமான ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) ஏற்றுக்கொண்ட முதல் கரீபியன் நாடாக மாறியதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோவை பிரதமர் மோடி வாழ்த்தினார். 
  • டிரினிடாட் மற்றும் டொபாகோவின் முதன்மை கல்வித் திட்டத்தை ஆதரிப்பதற்காக 2000 மடிக்கணினிகளை பரிசாக வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
  • உணவு பதனப்படுத்துதல் மற்றும் சேமிப்பிற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்களை டிரினிடாட் மற்றும் டொபாகோவின் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டுக் கழகத்திற்கு (NAMDEVCO) பரிசாக இந்தியா வழங்கியது பாராட்டப்பட்டது. இது தொடர்பான ஒரு அடையாள விழாவின் போது, NAMDEVCO-விற்கான முதல் தொகுதி இயந்திரங்களை பிரதமர் மோடி,  ஒப்படைத்தார். 


இந்​திய கடற்​படை​யில் போர் விமானி​யாக பயிற்சி பெற்ற முதல் பெண்:

  • இரண்டாவது அடிப்படை ஹாக் கன்வெர்ஷன் படிப்பின் பட்டமளிப்பு விழா விசாகப்பட்டினம் ஐஎன்எஸ் டேகா விமான தளத்தில் ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது.
  • இதில் லெப்​டினன்ட் அதுல் குமார் துல், சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா ஆகிய இவரும் கவுர​வ​மிக்க ‘விங்ஸ் ஆப் கோல்​டு’ விருதை ரியர் அட்​மிரல் ஜானக் பெல்​வி​யிடம் இருந்து பெற்​றனர். இந்​திய கடற்​படை​யில் போர் விமானி​யாக பயிற்சி பெற்ற முதல் பெண் என்ற பெரு​மையை சப் லெப்​டினன்ட் ஆஸ்தா பூனியா பெற்​றுள்​ளார்.


இந்தியா வருமான சமத்துவத்திலும் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது:

  • உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான சமத்துவமின்மைக்கான கினி குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்புகளும், ஸ்லோவாக் 24,1 மதிப்புகளும், ஸ்லோவேனியா 24.3 மதிப்புகளும், பெலாரஸ் 24.4 மதிப்புகளும் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன. 
  • ஸ்லோவாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3), பெலாரஸ் (24.4) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா ‘மிதமான குறைந்த’ ஏற்றத்தாழ்வு பிரிவில் (கினி குறியீட்டு மதிப்பு 25 முதல் 30 வரை) இடம்பெற்றுள்ளது. 
  • இந்த பட்டியலில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான சீனா 35.7 மதிப்புகளும், அமெரிக்கா 41.8 மதிப்புகளும் பெற்றுள்ளது. 167 நாடுகளுக்கு இடையேயான இந்த குறியீட்டு தரவரிசையில் உலக அளவில் இந்தியா நான்காவது வருமான சமத்துவம் கொண்ட நாடாக மாறியுள்ளதற்கு இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் பெரியளவில் குறைந்ததே, வருமான சமத்துவமின்மை குறைய காரணம் என தெரிவித்துள்ளது.
  • இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 2011-12-இல் 16.2 சதவீதத்திலிருந்து 2022-23-இல் வெறும் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.
  • கினி குறியீட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான முன்னேற்றத்துக்கு, கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வறுமையைக் குறைப்பதில் நாடு அடைந்த நிலையான வெற்றி முக்கியக் காரணியாக கருதப்படுகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் 17.1 கோடி இந்தியா்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா். ஒரு நாட்டில் மக்களிடையே வருமானம், செல்வம் அல்லது நுகா்வு எவ்வளவு சமமாகப் பகிா்ந்துள்ளது என்பதை அளவிடும் ஒரு கருவிதான் கினி குறியீடு. 
  • இதன் மதிப்பு பூஜ்ஜியம் முதல் நூறு வரை இருக்கும். பூஜ்ஜியம் என்பது முழுமையான வருமான சமத்துவத்தையும், நூறு என்பது ஒரு நபருக்கு வருமானம், செல்வம் அல்லது நுகர்வு உள்ளது, மற்றவர்களுக்கு எதுவும் இல்லை, எனவே முழுமையான வருமான சமத்துவமின்மையும் குறிக்கிறது. அதாவது, கினி குறியீட்டு மதிப்பு குறைவாக இருந்தால், அந்நாட்டில் சமத்துவமின்மை குறைவாக இருக்கிறது என்பதாகும்.


அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்:

  • இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன.
  • அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ரூ.13,952 கோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டன. 


ரூ.1 லட்​சம் கோடி தளவாடம்: 

  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்பு 12 கண்ணி வெடி போர்க்கப்பல்கள், ரூ.44,000 கோடி மதிப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளன. 
  • டிஆர்டிஓ தயாரிக்கும் தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், இஸ்டார் என்ற கண்காணிப்பு விமானங்கள், கடற்படை பயன்பாட்டுக்காக உளவு பார்க்கும் சிறிய ரக நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் 76 எம்எம் துப்பாக்கிகள் என ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தளவாடங்கள் முப்படைகளுக்காக கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான ஒப்புதலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-05th-06th-july-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)