CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (07.07.2025-08.07.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL JULY 2025 (07.07.2025-08.07.2025)


பிரதமர் திரு  நரேந்திர மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் 2025 ஜூலை 6 - 7 அன்று நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார்:

  • சுற்றுச்சூழல், சிஓபி-30, உலகளாவிய சுகாதாரம், உலகளாவிய ஆளுகை சீர்திருத்தம் மற்றும் அமைதி மற்றும் பாதுகாப்பு ,பன்முகத்தன்மை, பொருளாதார-நிதி விவகாரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல் , பல தரப்பு வாதம், பொருளாதார-நிதி விவகாரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்த அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி (07.07.2025) உரையாற்றினார். 
  • இந்த அமர்வில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள், பங்குதாரர் நாடுகள், அழைக்கப்பட்ட நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமான இத்தகைய விஷயங்கள் குறித்த அமர்வுக்கு ஏற்பாடு செய்த பிரேசில் நாட்டுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
  • கோவிட் பெருந்தொற்றுக் காலம் உட்பட பல்வேறு நாடுகளுக்கு உதவி வழங்கியதற்கு, “ஒரே பூமி, ஒரே சுகாதாரம்” என்ற மந்திரத்தை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதே காரணம் என்று பிரதமர் குறிப்பிட்டார். டிஜிட்டல் சுகாதார திட்டங்களை இந்தியா வெற்றிகரமாக அமல்படுத்தி வருகிறது என்பதை எடுத்துரைத்த அவர், உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு அவற்றை பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றார். இந்நிலையில் சமூக ரீதியாக தீர்மானிக்கப்பட்ட நோய்கள் ஒழிப்புக்கான பிரிக்ஸ் கூட்டாண்மை பிரகடனம் ஏற்கப்பட்டதை அவர்  வரவேற்றார்.
  • பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை அடுத்த ஆண்டு இந்தியா ஏற்கவுள்ள நிலையில், தற்போதைய உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், அன்பான விருந்தோம்பலுக்காகவும், அதிபர் லூலாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு  தெரிவித்தார்.


பிகார் மாநில அரசுப் பணிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்:

  • பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் இன்று காலை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் சித்தார்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நலதிட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் என 43 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • முக்கியமாக, பிகார் மாநில இளைஞர் ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் இளைஞர்கள், உயர்கல்வி உதவி தேவைப்படும் இளைஞர்கள், வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த ஆணையம் செயல்படவுள்ளது.18 வயது முதல் 45 வயது வரையிலான இளைஞர்களை மையமாகக் கொண்டு இந்த ஆணையம் செயல்படும். 
  • பிகார் மாநில அரசுப் பணிகளில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களுக்கு 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேரடி நியமனத்தில் உள்ள அனைத்துப் பதவிகளுக்கும் இந்த இடஒதுக்கீடு பொருந்தும். 
  • பருவமழை மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு ரூ. 100 கோடி டீசல் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • யுபிஎஸ்சி மற்றும் பிபிஎஸ்சி தேர்வுகளின் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 50,000 மற்றும் ரூ. 1 லட்சம் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.


இந்தியா, 2030 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான உயிரி பொருளாதாரத்தை இலக்காகக் கொண்டுள்ளது:

  • இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப இயக்கத்தை பொதுமக்கள் பரந்த அளவில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அழைப்பு விடுத்தார். 
  • ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் உயிரி பொருளாதாரத்தில் ஒரு பங்குதாரர் என்றும் அவர் கூறினார். நாடு தழுவிய உலக உயிரி உற்பத்தி பொருள் தின கொண்டாட்டமான தி பயோ இ 3 வே நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 2030-ம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான உயிரி பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்று அரசு உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
  • இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப சூழல் அமைப்பைப் பொறுத்தவரை, 10 ஆண்டுகளுக்கு  முன்பு சுமார் 50 புத்தொழில் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அது சுமார்  11,000 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். 
  • கொள்கை ஆதரவு மற்றும் நிறுவன கூட்டாண்மைகளால் இது சாத்தியமானது என்று அமைச்சர் எடுத்துரைத்தார். சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பயோ இ 3 கொள்கையைப் பற்றி குறிப்பிடுகையில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமத்துவத்துடன் உயிரி பொருளாதார இலக்குகளை சீரமைப்பது என்பதுதான் நிலையான உயிரி உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதற்கு அடித்தளமாக அமைகிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.


LIST OF IMPORTANCE DAYS JULY 2025 IN TAMIL:


உலகளாவிய மன்னிப்பு தினம் (Global Frogiveness Day) : 

  • உலக மன்னிப்பு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 
  • இந்த நாளில், மன்னிப்பதன் முக்கியத்துவத்தையும், மன அமைதிக்கான அதன் பங்கையும் குறித்து உலகளாவிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


உலக சாக்லெட் தினம் (World Chocolate Day): 

  • கி.பி. 16-ம் நூற்றாண்டில் இருந்தே, ஐரோப்பியர்கள் சாக்லெட் தினத்தை கொண்டாடி வருகின்றனர். 
  • ஆனால் அது சர்வதேச சாக்லெட் தினமாக உருவெடுத்தது 2009-ம் ஆண்டுதான். ஐரோப்பியர்கள் சாக்லெட்டை அறிமுகப்படுத்திய ஜூலை 7-ந் தேதியே, ஒவ்வொரு வருடமும் 'உலக சாக்லெட் தினமாக கொண்டாடப்படுகிறது.

 

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-07th-08th-july-2025

Post a Comment

0Comments

Post a Comment (0)