CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (19.08.2025-20.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (19.08.2025-20.08.2025)



முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்:

  • சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் (19.08.2025) தொடக்கி வைத்தார். 
  • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வர் முன்னதாக அறிவித்திருந்தார்.


 பசுமை விமான நிலையம்:

  • ராஜஸ்தான் மாநிலம் கோட்டா-பண்டியில் பசுமை விமான நிலையத்தை ரூ.1507 கோடி செலவில் கட்ட வேண்டும் என்ற இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஏ-321 ரக விமானங்களை இயக்கும் வகையில் பசுமை விமான நிலைய மேம்பாட்டிற்காக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு 440.06 ஹெக்டேர் நிலப்பரப்பை ராஜஸ்தான் அரசு அளித்துள்ளது. ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளையும் போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில் 1000 பயணிகளையும் கையாளும் வகையில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் விமானநிலைய முனைய கட்டடம் அமைப்பதும் இத்திட்டத்தில் உள்ளடங்கும்.


பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் :

  • பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் 20.08.2025 தாக்கல் செய்தார்.
  • அரசியலமைப்பு (130வது திருத்த) மசோதா 2025, யூனியன் பிரதேச அரசு(திருத்த) மசோதா 2025, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.
  • ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ன் பிரிவு 54ல் திருத்தம் மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் அல்லது அமைச்சர் தொடர்ந்து 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டால் அவரை பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா வழிவகை செய்கிறது. கடுமையான குற்றச் செயல்களுக்காகக் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் முதல்வர் அல்லது அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம், 2019 ல் எந்த ஏற்பாடும் இல்லை என்பதால், இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
  • இந்த மசோதாவின்படி, ஒரு அமைச்சர் ஊழல் அல்லது கடுமையாக குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களில் அவர் ஈடுபட்டிருந்தால் 31வது நாள் முதல்வரின் பரிந்துரையின்பேரில் அவரை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்க வேண்டும். ஒருவேளை ஆளுநர் பரிந்துரை அளிக்கவில்லை என்றால், தானாகவே 31-ம் நாளில் அவர் பதவியை இழப்பார்.
  • இதேபோல், ஒரு முதல்வர் தொடர்ந்து 30 நாட்களுக்கு காவலில் இருந்தால், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதன் தண்டனைக் காலம் குறைந்தது 5 ஆண்டுகள் என இருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால், 31வது நாளில் இருந்து அவர் முதல்வர் பதவியை இழப்பார்.

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் தாக்கல்:

  • ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 ஐ, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்தார்
  • ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை 19.08.2025 ஒப்புதல் அளித்தது. 
  • இந்த மசோதா ஆன்லைன் விளையாட்டு தளங்களை சட்ட வரம்புக்குள் கொண்டு வந்து, டிஜிட்டல் செயலிகள் மூலம் நடைபெறும் சூதாட்டங்களுக்கு அபராதம் விதிக்க வழி செய்யும். 
  • இவற்றை ஒழுங்குபடுத்தும் அமைப்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செயல்படும். 
  • ஆன்லைன் சூதாட்டத்துக்கு இந்த மசோதா முடிவு கட்டும் எனத் தெரிகிறது. அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கெனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது. 
  • புதிய மசோதாப்படி ஆன்லைன் சூதாட்டத்துக்கும் அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: 

  • கடந்த 2023-ம் ஆண்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா நாடாளு​மன்​றத்​தின் 2 அவை​களி​லும் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது.
  • இந்​நிலை​யில் பல்​வேறு திருத்​தங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு ஜன் விஷ்​வாஸ் மசோதா 2.0 (19.08.2025) மக்​களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மசோ​தாவை தாக்கல் செய்தார்.
  • இந்த மசோதா தற்​போதுள்ள சட்​டங்​களில் மிகச் சிறிய குற்​றங்​களுக்கு தண்​டனை விதிக்​கும் 288 விதி​களை நீக்​கு​வதற்கு வழி​வகை செய்​கிறது. 
  •  மோட்​டார் வாக​னச் சட்​டம் 1988, புதுடெல்லி நகரசபை கவுன்​சில் சட்​டம் 1994, சாலை போக்​கு​வரத்​துக் கழக சட்​டம் 1950 உள்​ளிட்ட சட்​டங்​களில் உள்ள பல்​வேறு ஷரத்​துகளை நீக்க இந்த மசோதா வழி​வகை செய்​கிறது.


பட்டியல் சாதியினருக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:

  • பட்டியல் சாதியினருக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்றாக பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பட்டியலின வலதுசாரிகள், பட்டியலின இடதுசாரிகள், தீண்டத்தக்க சாதியினர் என 3 உள்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • நீதிபதி ஹெச்என் நாகமோகன் தாஸ் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியலின சமூகத்துக்கான 17 சதவீத இடஒதுக்கீட்டை மூன்று பிரிவுகளாகப் பிரித்ததை கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
  • அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில், பட்டியல் சமூகத்துக்கான 17 சதவீத இட ஒதுக்கீட்டில், பட்டியலின வலதுசாரிகளுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு, பட்டியலின இடதுசாரிகளுக்கு 6 சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் லம்பானி, போவி, கோர்மா, கோர்ச்சா போன்ற தீண்டத்தக்க பட்டியல் சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் நாடோடி சமூகங்களுக்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் 101 சாதிகள் பலனடைந்து வருகின்றன.


வரும் 2040-ம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்:

  • கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதும் விண்வெளித் துறை சார்ந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது பேச்சில் குறிப்பிட்டார். 2020 முதல் விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா வாய்ப்பு அளித்து வருகிறது. அதன் மூலம் தேசத்தின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் 45 பில்லியன் டாலர்களைத் தொடும் என்று அவர் தெரிவித்தார்.
  • 2026-ல் வியோமித்ரா என்ற ரோபோவை கொண்டு ஆளில்லா விண்வெளிப் பயணத்தை இந்தியா மேற்கொள்ளும். 
  • அதைத் தொடர்ந்து 2027-ல் மனிதர்களை விண்வெளி பயணத்துக்கு அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடைபெறும். 
  • 2035-ல் ‘பாரத் அந்தரிக்‌ஷ் நிலையம்’ என்ற விண்வெளி நிலையத்தை இந்தியா நிறுவும்.
  • தொடர்ந்து 2040-ல் இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்கி தனது தடத்தை பதிப்பார். இது 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை அறிவிக்கும் விதமாக அமையும்” என அவர் பேசினார்.


‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ 2025 :

  • கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.இரண்டாம் உலகப்போரின்போது இந்த போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த 1952 முதல் மீண்டும் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சர்வதேச அழகி போட்டியில் பங்கேற்க அந்தந்த நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது.
  • இதன்படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்துக்கான போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 48 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் சார்பில் காமாக் ஷி ஆத்ரேயா பங்கேற்றார். பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
  • ஜெய்ப்பூரில் இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை வென்றார்.
  • உத்தர பிரதேசத்தை சேர்ந்த தான்யா சர்மா, ஹரியானாவை சேர்ந்த மெஹக் திங்ரா ஆகியோர் 2, 3-வது இடங்களைப் பிடித்தனர். வரும் நவம்பரில் தாய்லாந்தின் நந்தபுரியில் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் மணிகா விஸ்வகர்மா பங்கேற்க உள்ளார்.


ஆசிய துப்பாக்கி சாம்பியன்ஷிப் 2025 :

  • கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில், ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் பங்கேற்றார். இப்போட்டியில் சீன வீராங்கனை கியாங்கே மா 243.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
  • தென் கொரியாவின் ஜின் யாங், 241,5 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார். மனு பாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
  • அணிகளுக்கான போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற மனு பாக்கர், சுருச்சி சிங், பாலக் குலியா ஆகியோர் அடங்கிய அணி, 1730 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இப்போட்டியில் சீனா, 1740 புள்ளிகளுடன் தங்கம், கொரியா 1731 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றன.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-19th-20th-august-2025

 


Post a Comment

0Comments

Post a Comment (0)