முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் / MUDHALVARIN KAKKUM KARANGAL SCHEME

TNPSC PAYILAGAM
By -
0
MUDHALVARIN KAKKUM KARANGAL SCHEME


  • சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் (19.08.2025) தொடக்கி வைத்தார். 
  • முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோரின் நலனுக்காக 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற புதிய திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும் என முதல்வர் முன்னதாக அறிவித்திருந்தார்.
  • இத்திட்டத்தில், முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்கள், படை பணியின்போது இறந்த படைவீரர்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்களின் மகன்கள் மற்றும் மணமாகாத, கணவனை இழந்த மகள்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
  • இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். அதேபோன்று, இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரர்களுக்கு குறைந்தபட்ச வயது இல்லை.
  • இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஏற்கெனவே மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் இதைப் போன்ற திட்டங்களில் பயன் பெற்றிருக்கக் கூடாது.
  • ஏற்கெனவே அரசாணையில் நீக்கம் செய்யப்பட்ட விவசாய நடவடிக்கைகள் சார்ந்த தொழில்கள் மற்றும் பட்டுப்புழு, ஆடு, மாடு, கோழி, மீன் மற்றும் பன்றி வளர்ப்பு தொழில்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)