- தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் வருடாந்திர பாஸ் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
- இதற்கென தேசிய நெடுஞ்சாலைகள் கட்டணம் (கட்டண விகிதம் நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிமுறைகள் 2008-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.ஜூன் 17 , 2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி திருத்த அறிவிப்பு எண். GSR 388 (E) மூலம், தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008 இல் அரசாங்கம் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த திருத்தத்தின்படி ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸ் வழங்கும் நடைமுறை ஆகஸ்ட் 15-ம் தேதி (2025) முதல் அமல்படுத்தப்பட்டது.
- இது வர்த்தகம் அல்லாத கார்கள், ஜீப்கள் மற்றும் வேன்களுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தும். வருடாந்திர பாஸ் வழங்கும் திட்டத்தின் கீழ், 3,000 ரூபாய் கட்டணம் செலுத்தி இதனைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகள் தேசிய விரைவுச் சாலைகளில் பயன்படுத்த முடியும்.
- இந்த பாஸ் ஓராண்டு காலம் வரையிலும் செல்லத்தக்கது என்றும் அல்லது 200 முறை சுங்கச் சாவடிகளைக் கடக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய நடைமுறை அடிக்கடி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர், அவ்வப்போது ஃபாஸ்டாக் கட்டணங்களை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தைக் குறைப்பதற்கும் வர்த்தகம் சாராத வாகனங்களில் சுங்கக் கட்டணச் சுமையைக் குறைக்கவும் உதவிடும்.
SOURCE : https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2159896