CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (21.08.2025-22.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (21.08.2025-22.08.2025)


அக்னி -5 ஏவு​கணை  பரிசோதனை :

  • கண்டம் விட்டு கண்​டம் பாயும் அக்னி -5 ஏவு​கணை, ஒடி​சா​வில் உள்ள சண்​டிபூர் பரிசோதனை மையத்​தில் இருந்து வெற்​றிகர​மாக பரிசோதனை செய்​யப்​பட்​டது.
  • நாட்​டின் பாது​காப்​புக்​காக பல வகை ஏவு​கணை​களை ராணுவ ஆராய்ச்சி மேம்​பாட்டு மையம்​(டிஆர்​டிஓ) உரு​வாக்கி வரு​கிறது. அவற்​றில் மிக​வும் சக்தி வாய்ந்​தது அக்​னி-5 ஏவு​கணை. அணு ஆயுதங்​களு​டன் 5,000 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்​கும் திறன் படைத்​தது.
  • இந்த ஏவு​கணை ஒடி​சா​வின் சண்​டிப்​பூரில் உள்ள பரிசோதனை மையத்​தில் நேற்று முன்​தினம் பரிசோ​திக்​கப்​பட்​டது. அப்​போது ஏவு​கணை​யின் அனைத்து தொழில்​நுட்ப செயல்​பாடு​களும் சரி​பார்க்​கப்​பட்​டன. இந்த சோதனை வெற்​றிகர​மாக நடை​பெற்​ற​தாக பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் தெரி​வித்​தது. அடுத்​த​தாக 7,500 கி.மீ தூர​முள்ள இலக்கை தாக்​கும் வகையில் அக்னி ஏவு​கணையை மேம்​படுத்​தும் முயற்​சி​யில் டிஆர்​டிஓ இறங்​கி​யுள்​ளது.


வேளாண் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் ஜூலை 2025:

  • வேளாண் தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கடந்த ஜூலை மாதத்தில் 1.23 புள்ளிகள் அதிகரித்து 135.31 ஆக உள்ளது. மேலும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான குறியீடு 1.30 புள்ளிகள் அதிகரித்து 135.66 ஆக உள்ளது.
  • மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடுகள் 2019-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 கிராமங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரி தரவுகளின் அடிப்படையில் இந்தக் குறியீட கணக்கிடப்பட்டுள்ளது.
  • உணவுப் பொருட்களுக்கான குறியீட்டில் 1.94 புள்ளிகள் வேளாண் தொழிலாளர்களுக்கும் 2.16 புள்ளிகள் கிராமப்புற தொழிலாளர்களுக்கும் கணக்கிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
  • தமிழ்நாட்டில் விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டெண் கடந்த ஜூன் மாதத்தில் 133.27 என்ற புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 131.68 ஆகவும், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக்குறியீட்டெண் ஜூன் மாதம் 132.63 புள்ளியிலிருந்து ஜூலை மாதத்தில் 131.12 ஆக குறைந்துள்ளது.


ஸ்லைநெக்ஸ்-2025 :

  • இந்தியா- இலங்கை கடற்படை இடையேயான கூட்டுப் பயிற்சி ஸ்லைநெக்ஸ்-2025  12வது பதிப்பு (SLINEX-2025) கொழும்பில் 2025 ஆகஸ்ட் 18 அன்று நிறைவடைந்தது. இப்பயிற்சியில் இந்தியக் கடற்படை கப்பல்கள் ஐஎன்எஸ் ஜோதி, ஐஎன்எஸ் ராணா ஆகிய கப்பல்களும், இலங்கை கடற்படை கப்பல்கள் எஸ்எல்என்எஸ் கஜபாகு, எஸ்எல்என்எஸ் விஜயபாகு ஆகிய கப்பல்களும் பங்கேற்றன.
  • இரண்டு கட்டங்களாக நடைப்பெற்ற இப்பயிற்சியின் துறைமுக பயிற்சி ஆகஸ்ட் 14 முதல் 16 வரையும், கடல்பகுதி பயிற்சி 17 முதல் 18 வரையிலும் நடைபெற்றது.

ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயற்குழு வாரியத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:

  • ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் (Asia-Pacific Institute for Broadcasting Development (AIBD)) செயல் வாரியத் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது. 
  • தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில்  இம்மாதம் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெற்ற இந்நிறுவனத்தின் பொதுக் கூட்டத்தில் அதிகபட்ச வாக்குகளுடன் இந்தியா அந்த அமைப்பின்  தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 2016-ம் ஆண்டில் இந்த அமைப்பின் செயற்குழுத் தலைவராக இந்தியா பொறுப்பேற்று வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது. 
  • இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் ஆசியா-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தெருநாய்களை அகற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு :

  • 8 வாரங்களுக்குள் அனைத்து தெரு நாய்களையும் அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டது. இது தேசிய தலைநகர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் இந்த விவகாரம் இந்திய தலைமை நீதிபதி முன் குறிப்பிடப்பட்டது. அதன் பின்னர் மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை அமைத்தார்.
  • இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 14 ஆம் தேதி, மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிபதி விக்ரம் நாட், நீதிபதி சந்தேப் மெட்டா மற்றும் நீதிபதி என்வி அன்ஜாரி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது.ஆனால் இறுதி தீர்ப்பு வழங்காமல் தனது உத்தரவை ஒத்தி வைத்திருந்தது.
  • இந்தநிலையில், இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, "பிடிபட்ட அனைத்து தெருநாய்களையும் விடுவிக்க வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்.
  • அவற்றுக்கு தடுப்பூசி போடப்பட்டு, பின்னர் மக்களிடையே விடுவிக்கப்பட வேண்டும். மேலும் தெருநாய்கள் ஆக்ரோஷமாக மாறி பொது மக்களை கடித்தால், அவற்றை தனித்தனியாக சிறையில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை வழங்கினர்.
  • நகராட்சி உத்தரவின் பிரிவு 12, 12.1 மற்றும் 12.2 ஐப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. நாய்களைப் பிடித்து, குடற்புழு நீக்க மருந்து, தடுப்பூசி போன்றவற்றைக் கொடுத்த பிறகு அதே பகுதியில் விடுவிக்க வேண்டும். ஆனால் ஆக்ரோஷமான அல்லது ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள் விடுவிக்கப்படாது.
  • பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பது தடைசெய்யப்படும். இதற்காக, ஒரு தனி பிரத்யேக உணவு மண்டலம் உருவாக்கப்பட வேண்டும்.
  • தவறான உணவு காரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே தெரு நாய்களுக்கு உணவளிக்க ஒரு தனி மண்டலம் உருவாக்கப்பட வேண்டும்.
  • நீங்கள் நினைத்த இடத்தில் எங்கு வேண்டும் என்றாலும் தெரு நாய்களுக்கு உணவளிக்க முடியாது. நாய்கள் தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாது.
  • முந்தைய உத்தரவான பத்தி 13 ஐ மீண்டும் வலியுறுத்தி, எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ இந்த சேவைகளைத் தடுக்கக்கூடாது என்று திருத்தியது.
  • மேலும், நாய் பிரியர்களும், அரசு சாரா நிறுவனங்களும் முறையே ₹ 25,000 மற்றும் ₹1 லட்சத்தை நீதிமன்ற பதிவேட்டில் டெபாசிட் செய்ய வேண்டும்.
  • இது தவிர, யாராவது தெருநாய்களை தத்தெடுக்க விரும்பினால், அவர்கள் நீதிமன்றத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், தெருநாய் வளர்க்க அனுமதி கிடைக்கும்.
  • அனைத்து மாநிலங்களையும் மனதில் கொண்டு, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

யுரேனஸ் கிரகத்தின் புதிய நிலா கண்டுபிடிப்பு :

  • அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நாசா மற்றும் கனடா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்துஅதிநவீன சக்தி வாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கி விண்ணில் நிலைநிறுத்தியது.
  • இந்த தொலை நோக்கி ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு நாசா மற்றூம் கனடா விண்வெளித் துறையினர் விண்வெளியை ஆர ஆராய்ந்து வருகின்றனர்.
  • இந்த நிலையில் பால்வெளி மண்டலத்தில் 7-வது கிரகமாக யுரேனசை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய்ந்து வந்த நிலையில் தற்போது யுரேனஸ் கிரகத்தை
  • மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய நிலவுக்கு தற்காலிகமாக S/2023 U1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 2025:

  • கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. 
  • இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில் 53 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • மற்றொரு இந்திய வீராங்கனையான யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் லிடியா பஷரேவா 40 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
  • ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் ஷா 250.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். 
  • 10 மீ ஏா் ரைஃபிள் ஆடவா் அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபினவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் 2025:

  • 64-வது தேசிய சீனியர் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது. 
  • இதில் ஆடவருக்கான போல் வால்ட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கவுதம், ரீகன், கமல் ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் தமிழரசு பந்தய தூரத்தை 10.22 விநாடிகளில் கடந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

  • மற்றொரு தமிழக வீரரான ராகுல் குமார் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தனலெட்சுமி தங்கப் பதக்கமும், அபிநயா ராஜராஜன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
  • ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டத்தில்தமிழகத்தைச் சேர்ந்த விஷால் தென்னரசு கயல்விழி பந்தய தூரத்தை 45.12 விநாடிகளில் கடந்து தேசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதற்கு முன்னர் முகமது அனாஸ் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை 45.21 விநாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் 21 வயதான விஷால் தென்னரசு கயல்விழி.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-21st-22nd-august-2025

 


Post a Comment

0Comments

Post a Comment (0)