CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (23.08.2025-25.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (23.08.2025-25.08.2025)



ஒருங்​கிணைந்த வான் பாது​காப்பு ஆயுத அமைப்​பின் முதல் சோதனை:

  • ஒடிசா கடற்​கரை​யில் ஒருங்​கிணைந்த வான் பாது​காப்பு ஆயுத அமைப்​பின் முதல் சோதனையை பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு அமைப்பு (டிஆர்​டிஓ) வெற்​றிகர​மாக நடத்​தி​யது.
  • போர்க் காலங்​களில் எதிரி நாடு​களின் ஏவு​கணை​கள், ட்ரோன்​களை முறியடிக்க ஒருங்​கிணைந்த வான் பாது​காப்பு ஆயுத அமைப்பு (ஐஏடிடபிள்​யூஎஸ்) மிக முக்​கிய​மான​தாகும். இந்த ஐஏடிடபிள்​யூஎஸ்​-ன் முதல் சோதனை ஒடிசா கடற்​கரை​யில் ஆகஸ்ட் 23-ம் தேதி மதி​யம் 12.30 மணி​யள​வில் வெற்​றிகர​மாக நடத்​தப்​பட்​டது. ஐஏடிடபிள்​யூஎஸ் என்​பது உள்​நாட்டு விரைவு எதிர்​வினை மேற்​பரப்பு வான் ஏவு​கணை​கள், குறுகிய தூர வான் பாது​காப்பு அமைப்பு ஏவு​கணை​கள், உயர் சக்தி கொண்ட லேசர் அடிப்​படையி​லான நேரடி ஆற்​றல் ஆயுதம் (டிஇடபிள்​யூ) ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய பல அடுக்கு வான் பாது​காப்பு அமைப்​பாகும்.
  • இந்த சோதனை​களின்​போது இரண்டு அதிவேக ஆளில்லா வான்​வழி வாகன இலக்​கு​கள் மற்​றும் ஒரு மல்​டி-​காப்​டர் ட்ரோன் உள்​ளிட்ட மூன்று வெவ்​வேறு இலக்​கு​கள் ஒரே நேரத்​தில் வெவ்​வேறு வரம்​பு​கள் மற்​றும் உயரங்​களில் ஈடு​படுத்​தப்​பட்டு முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன. 
  • ஏவு​கணை அமைப்​பு​கள், ட்ரோன் கண்​டறிதல், அழிக்​கும் அமைப்​பு, ஆயுத அமைப்பு கட்​டளை உள்​ளிட்ட அனைத்து கூறுகளும் துல்லியமாக செயல்​பட்​டன. இந்த தனித்​து​வ​மான சோதனை​கள் நாட்​டின் பல அடுக்கு வான் பாது​காப்பு திறனை மேம்​படுத்​தும் என்​றும், எதிரி​களின் வான்​வழி அச்​சுறுத்​தல்​களுக்கு எதி​ரான பாது​காப்பை வலுப்​படுத்​தம் என்​றும் கூறி டிஆர்​டிஓ மற்​றும் ஆயுத படைகளுக்கு பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பா​ராட்​டு தெரி​வித்​துள்​ளார்​.


விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை:

  • ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வருகின்றன. இந்த பட்டியலில் 4-வது நாடாக இந்தியாவும் விரைவில் இணைய உள்ளது. 
  • இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப ககன்யான் என்ற திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ஷுபான்ஷு சுக்லா, அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகிய 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஷுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்துவிட்டு கடந்த ஜூலையில் பூமிக்கு திரும்பினார்.
  • இதை தொடர்ந்து, ககன்யான் திட்டப்பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தி உள்ளது. முதல்கட்டமாக விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பும் விண்கலம் பாதுகாப்பாக கடலில் இறங்குவதற்கான பாராசூட் சோதனை, ஸ்ரீஹரிகோட்டாவில் நடத்தப்பட்டது. 
  • இந்திய விமானப் படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4 கி.மீ. உயரத்துக்கு சிறப்பு விண்கலம் எடுத்துச் செல்லப்பட்டது. ஹெலிகாப்டரில் இருந்து விண்கலம் கீழே பறக்கவிடப்பட்டது. விண்கலம் பூமியை நோக்கிவிரைந்தபோது, சரியான நேரத்தில்3 பாராசூட்கள் விரிவடைந்து கடலில் பாதுகாப்பாக இறங்கியது


வாட்ஸ்ஆப் மூலம் சென்னை மாநகராட்சியின் சேவைகள் :

  • மேயர் பிரியா 2025-26-ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் வழங்கப்படும் பொது மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கப்படும் செயல்பாட்டினை மாநகராட்சி மேயர் பிரியா இன்று (25.08.2025) ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.
  • பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையினைப் பெற தற்போது உருவாக்கப்பட்டுள்ள 94450 61913 என்கிற Whats App எண்ணை பொதுமக்கள் தங்கள் கைபேசியில் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
  • இதனைத் தொடர்ந்து இந்த Whats App Chatbot எண்ணிற்கு "Hi" அல்லது ‘வணக்கம்' என பதிவிட வேண்டும். பின்னர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவைகளை அதில் உள்ள உரிய வழிகாட்டலுடன் உள் நுழைந்து பெற்றிட வேண்டும்.
  • இதில் பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், புகார் பதிவு, தொழில் வரி செலுத்துதல், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், ஆவண பதிவிறக்கம், சமுதாயக் கூடம் முன்பதிவு, முதல்வர் படைப்பகம் தொடர்பான சேவைகள், நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளின் உரிமம் பதிவு, பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், நகரமைப்பு தொடர்பான சேவைகள், விண்ணப்பங்கள் கண்காணிப்பு, கடை வாடகை செலுத்துதல், கட்டடம் மற்றும் கட்டுமானக் கழிவுகள் தொடர்பான பதிவு உள்ளிட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் 32 வகையான சேவைகளை மக்கள் எவ்வித அலைச்சலும் இன்றி தாங்கள் இருந்த இடத்தில் இருந்து இந்த Whats App Chatbot வாயிலாகப் பெற்றிட முடியும்.
  • இந்த Whats App Chatbot-ஐ மக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாட முடியும். மேலும் இந்த Whats App Chat bot-ல் பிற தகவல் சேவைகளாக, மண்டல அலுவலகம், வார்டு அலுவலகம் கண்டறிதல், அருகில் உள்ள வசதிகளைத் தெரிந்து கொள்ளுதல், பள்ளிக் கூடங்கள், கழிப்பிடங்கள், பேருந்து நிறுத்தும் இடங்கள், அம்மா உணவகம், மயான பூமி, சமுதாயக் கூடம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நகர்ப்புற சமூக சுகாதார மையம், படிவங்கள் பதிவிறக்கம், அடுத்தடுத்து கேட்கப்படும் கேள்விகள் உள்ளிட்ட சேவைகளையும் பெற முடியும்.
  • மேலும், இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சொந்த சேவைகளில் பொழுதுபோக்கு வரி மற்றும் சுகாதாரச் சான்றிதழ் சேவைகளும் புதிதாக சேர்க்கப்பட்டு அதன் சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இந்த WhatsApp Chatbot மூலம் மக்களுக்கான சேவைகளை எளிதாகப் பெறுதல், 24 மணி நேரமும் சேவை கிடைக்கும் வசதி, இதனைப் பயன்படுத்துவதற்கான இயல்பான உரையாடல், எவ்வித காலதாமதமும் அலைச்சலுமின்றி மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே இந்த சேவைகளைப் பெறுதல் ஆகியன குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
  • இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக இந்த Whats App Chatbot-ல் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் (CMWSSB) மற்றும் பதிவுத் துறை (TNREGIET) ஆகியவற்றின் சேவைகளையும் மக்களுக்கு வழங்கிடும் வகையில் கூடுதலான சேவைகள் இதில் விரிவாக்கம் செய்யப்படும்.
  • இவ்வாறாக தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த WhatsApp chatbot சேவையானது மக்களுக்கு எளிதாக கிடைக்கப் பெற்று அவர்களுடன் சேர்ந்து பயணித்து சேவையாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


தேசிய அளவில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம்: பள்ளிக்கல்வித் துறை சாதனைகள் குறித்து அரசு பெருமிதம்:

  • எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் தேசியளவில் பள்ளிக்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. 
  • இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கென பிரத்யேக மாநிலக் கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சமத்துவமான, குழந்தைகளை எதிர்காலத்துக்கு தயார்ப்படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான திட்ட வரைவை அடிப்படையாக கொண்டுள்ளது.
  • கரோனா கால கற்றல் இடைவெளியை சரிசெய்வதற்காக இல்லம் தேடிக் கல்வித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு 2021-22-ம் கல்வியாண்டு முதல் ரூ.660.35 கோடி ஒதுக்கீடு செய்து 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.2024–25-ம் கல்வியாண்டு முதல் 17.53 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். 
  • தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளிடம் அடிப்படைக் கல்வியறிவு, எண்ணறிவை மேம்படுத்த ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.
  • அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களை அடையாளம் கண்டு சிறப்புக் கல்வி வழங்க நலம் நாடி செயலி பயன்படுத்தப்படுகிறது. 
  • பள்ளியிலேயே 76 லட்சத்து 56,074 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 28,067 அரசுப் பள்ளிகளில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையவசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்:

  • அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அலுவலக இயக்குனராக பணியாற்றும் தனது நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
  • மேலும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் அவர் சிறப்பு தூதராகவும் செயல்படுவார். 
  • அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் செர்ஜியோ கோர். இவர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் அலுவலக இயக்குனராக உள்ளார்.


பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது - ஐ.நா: 

  • மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
  • ‘காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது’ என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் ஃப்ளட்ச்சர் தெரிவித்துள்ளார்


ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025:

  • கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்  வருகிறது. 
  • இதில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் -2025 போட்டியில் தோமர் 462.5 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். சீன வீரர் வென்யு ஜாவோ 462 புள்ளிகளுடன் வெள்ளியையும், ஜப்பானின் நயோயா ஒகாடா 445.8 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் வென்றனர். 
  • முன்னதாக 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணி பிரிவில் இந்தியாவின் தோமர். செயின் சிங், ஷிரோன் ஆகியோர் அடங்கிய அணி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளியை வென்றது.


ஓய்வை அறிவித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா:

  • அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக புஜாரா அறிவித்துள்ளார். 
  • 37 வயதான புஜாரா இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். கடைசியாக கடந்த 2023-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார். 
  • இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 7195 ரன்கள் குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பேட்டிங் சராசரி 43.61. மொத்தம் 16,217 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
  • டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 2010-ல் இதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட துவங்கினார்.


.

OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-23rd-25th-august-2025

 



Post a Comment

0Comments

Post a Comment (0)