நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
- மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- நாடு முழுவதும் 18-29 வயதுப் பிரிவினரில் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை செயலாக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆளுகை, பொதுக்கொள்கை, சமுதாயத் தொழில்முனைவு, டிஜிட்டல் கல்வியறிவு, நிதிசார் கல்வியறிவு ஆகியவற்றில் கூட்டுச் செயல்திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். இரு தரப்பினரின் பரஸ்பர ஒப்புதலின் கீழ் இதன் காலம் நீட்டிக்கப்படலாம்.
- தலைமைத்துவ செயல்திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துதல், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகள் நடத்துதல், கூட்டாக இணைந்து ஆய்வு மேற்கொள்ளுதல், இளைஞர்களுக்காக சேவை ஆற்றும் நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளித்தல் ஆகியவற்றை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தியா முழுவதிலும் இருந்து அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- நிர்ணயிக்கப்பட்ட தொடர்பு இடங்களில் மற்றும் கூட்டு பணிக்குழுக்கள் மூலமாக கீழ்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- தலைமைத்துவ மேம்பாட்டிற்காக இளையோர் மாநாடுகள் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்படும்.
- இளைஞர்களுக்கு சேவையாற்றும் நிறவனங்கள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு திறன் கட்டமைப்பு பயிற்சி அளிக்கப்படும்.
- இளையோர் தலமைத்துவத்தில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
- இளையோர் தலைமைத்துவம் மற்றும் திறன் கட்டமைப்பில் சிறந்த நடைமுறைகள் பரவலாக்கப்படும்.
- மைபாரத் மற்றும் அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளி இடையே பயிற்சியாளர்கள், நிபுணர்கள் ஆகியோர் பரிமாறிக் கொள்ளப்படுவார்கள்.
- பயிற்சிக்கான கருவிகள், பாடத்திட்டம், மதிப்பீடு செய்தல் ஆகியன மேம்படுத்தப்படும்.
- நாடு முழுவதும் இளம் தலைவர்களை இணைப்பதற்காக நெட்வொர்க்கிங் முயற்சி மேற்கொள்ளப்படும்.
- தகுதி அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கும் அணுகுமுறையில் ஆன்லைனில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் நாட்டின் இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலம் தலைமைத்துவத் திறன்களில் பயிற்சி அளிக்கும் செயல்திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்.
SOURCE : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2155984