CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (12.08.2025-14.08.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL AUGUST 2025 (12.08.2025-14.08.2025)



ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் வென்றுள்ளார்:

  • இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியை இளம் வீரர் ஷுப்மன் கில் சிறப்பாக வழிநடத்தினார். அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரிலேயே ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகள் படைத்தார்.

  • கடந்த மாதத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 94.50 சராசரியுடன் 567 ரன்கள் குவித்துள்ளார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் வியான் முல்டரை பின்னுக்குத் தள்ளி ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஷுப்மன் கில் வென்றுள்ளார்.

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்:

  • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகிக்கும் ‘தாயுமானவர்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் (ஆகஸ்ட்12-ம் தேதி) தொடங்கிவைத்தார்.

பஞ்சாயத்து அமைப்புகளுக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான “சபாசார்” செயலி அறிமுகம்:

  • பஞ்சாயத்து அமைப்பின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான சபாசார் செயலியை மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • இந்த செயலியின் வாயிலாக பஞ்சாயத்து அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நிரலாக தானியங்கி முறையில் தொகுத்து வழங்கக் கூடிய  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆதார் என்பது சரியான அடையாள ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது:

  • பிகார் சிறப்பு வாக்களர் திருத்தம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
  • பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற நிபந்தனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
  • இந்த பணியில், ‘பிகாரில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலில் பெயர் இடம்பெற்றவா்கள், எந்தவொரு ஆதார ஆவணங்களையும் தாக்கல் செய்யத் தேவையில்லை. ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள், தங்களின் குடியுரிமையை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.
  • இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் மற்றும் ஜனநாயக சீா்திருத்தத்துக்கான சங்கம் (ஏடிஆா்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
  • இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமனற்ம், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்ச பரிந்துரை செய்திருந்தது.
  • இது குறித்து பதிலளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் கருத்தை ஏற்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு காலை இலவச உணவு தமிழக அமைச்சரவை ஒப்புதல்:

  • மு.க ஸ்டாலின் தலைமையில் 14.08.2025 அமைச்சரவை கூட்டம் காலையில் கூடியது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேசப்பட்டது.
  • பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. அதில் முக்கியமாக தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் பேசப்பட்டது.
  • இந்த அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
  • அறிவிப்பு 1 தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, இத்தகைய தொழில்சார் நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
  • அறிவிப்பு 2 - தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப் பணியாளர் நலவாரியத்தின் மூலமாக, நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களின் எதில்கால நலன்களையும், வாழ்வாதரத்தையும் முழுமையாக உறுதி செய்யக்கூடிய வகையில், இந்த நிதியுதவியுடன் கூடுதலாக இந்தப் பணியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் அளவிற்கு காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால், பணியின் போது இறக்க நேரிடும் தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படும்.
  • அறிவிப்பு 3 - தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் சமூகப் பொருளாதார நிலையினை உயர்த்திட சுய தொழில் தொடங்கும்போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில், 35 விழுக்காடு நிதி அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். மேலும், இந்த கடனுதவியைப் பெற்று தொழில் தொடங்கி கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்துவோருக்கு 6 விழுக்காடு வட்டி மானியமும் வழங்கப்படும். இந்தப் புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.


ஹர் கர் திரங்கா 2025 “இல்லந்தோறும் மூவண்ணக் கொடி” :

  • ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு “ஹர் கர் திரங்கா” எனும் ‘இல்லந்தோறும் மூவண்ணக்  கொடி’ இயக்கத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
  • 79-வது சுதந்திரப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘இல்லந்தோறும் மூவண்ணக்கொடி 2025’ இயக்கம் நடத்தப்படுகிறது. மக்கள் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் சுயவிவரப் பட பகுதியில் மூவண்ணக் கொடி படத்தை வைப்பதையும், தங்கள் வீடுகள், தெருக்களில் மூவண்ணக் கொடியை ஏற்றுவதையும் இந்த இயக்கம் ஊக்குவிக்கிறது.
  • இதன் ஒரு பகுதியாக திருச்சிராப்பள்ளி அருகே முக்கொம்புவில் “இல்லந்தோறும் மூவண்ணக்  கொடி 2025 விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை, திருச்சிராப்பள்ளி மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் திருமதி தி.நிர்மலா தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியில் அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

இந்திய துறைமுகங்கள் மசோதா 2025, மக்களவையில் நிறைவேறியது:

  • இந்திய துறைமுகங்கள் மசோதா 2025 மக்களவையில் நிறைவேறியது ஒரு புதிய இது இந்தியாவின் கடல்சார் எதிர்காலத்திற்கான சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது. 

நாடு முழுவதும் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க மை பாரத் புரிந்துணர்வு ஒப்பந்தம்:

  • மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.




OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!

current-affairs-in-tamil-12th-14th-august-2025

 

Post a Comment

0Comments

Post a Comment (0)