பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம் / AMBIKAPUR’S GARBAGE CAFE
By -TNPSC PAYILAGAM
October 27, 2025
0
பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம்:
அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதுமையான முயற்சியை சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ளது. அதற்காக ‘‘குப்பை கஃபே’’ வை அமைத்துள்ளது. அங்கு குடிமக்கள் உணவுக்காக பிளாஸ்டிக் கழிவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.
அம்பிகாபூர் நகராட்சியால் நடத்தப்படும் இந்த கஃபேவில் யாராவது ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவை கொண்டு வந்து தந்தால் மதிய உணவு தரப்படும். அரை கிலோ பிளாஸ்டிக் கழிவை கொண்டு வந்தால் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
மக்கள் 1 கிலோ பிளாஸ்டிக் கழிவை கொடுத்தால் முழுமையான மதிய உணவு, 0.5 கிலோ வழங்கினால் காலை காபி, சமோசா போன்ற சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டம், நகர மையங்களில் உள்ள 'Garbage Cafe', நகராட்சி நிர்வாகம் அல்லது தனி அமைப்புகள் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் நகரம் இந்த முயற்சியில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. திட்டத்தில் அரிசி, இரு வகை மரக்கறி, பருப்பு, சப்பாத்தி, சாலட், ஊறுகாய் ஆகியவைகள் அடங்கிய உணவு கலந்து வழங்கப்படுகிறது.
இந்த திட்டம், பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கும் நோக்குடன், குறைவான வருவாயுடையோர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்குப் பயனளிக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, நகராட்சி பொது நிதியில் இருந்து திட்டத்துக்கு பணமளிக்கப்படுகிறது; சுத்தமான சுற்றுச்சூழல் மற்றும் சமூக பொறுப்புணர்வை ஊக்குவிக்க இது உதவுகிறது.