அக்டோபர் மாதம் 2025 (10.10.2025-11.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
தன் தான்யா கிரிஷி யோஜனா, மற்றும் ஆத்ம நிர்பார்தா / : PM MODI TO LAUNCH PM DHAN DHANYA KRISHI YOJANA AND MISSION FOR AATMANIRBHARTA IN PULSES :
- விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகள் விரைவான வளர்ச்சி அடையும் வகையில் மத்திய அரசு மொத்தம் ரூ.35,440 கோடி மதிப்பீட்டில் தன் தான்யா கிரிஷி யோஜனா, மற்றும் ஆத்ம நிர்பார்தா ஆகிய 2 புதிய முக்கிய திட்டங்களை கொண்டு வந்து உள்ளது.
- விவசாயிகள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நவீன வேளாண்மை திட்டங்களை பிரதமர் மோடி டெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
- தன்தானியா கிரிஷி யோஜனா திட்டம் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலும், ஆத்ம நிர்பார்தா திட்டம் ரூ. 11,440 கோடி மதிப்பீட்டிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
- இந்த திட்டங்களின் நோக்கம் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தல், விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துதல், கொள்முதல், சேமிப்பு பயிர் பல்வகைப் படுத்துதல் நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவித்தல் போன்றவை ஆகும்.
- பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பது, சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்துதல், அறுவடைக்கு பிந்தைய இழப்புகளை குறைத்தல், முதல் கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாவட்டங்களில் நீண்டகால குறுகிய கால கடனை எளி தாக்குதல் உள்ளிட்டவைகள் இந்த புதிய திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும்.
- இந்த விழாவில் பிரதமர் மோடி விவசாய துறையை மேம்படுத்தும் வகையில் ரூ. 815 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளம், உணவு பதப்படுத்து தல் துறைகளில் ரூ.5,450 கோடிக்கும் அதிகமான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
10,000 கிராமங்களை இணைத்து கிராம சபை கூட்டம்; தமிழக வரலாற்றில் முதன்முறை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் / GRAM SABHA MEETING CONNECTING 10,000 VILLAGES; FIRST TIME IN TAMIL NADU HISTORY: CHIEF MINISTER STALIN PROUD :
- தமிழ்நாட்டு வரலாற்றிலேயே 10,000-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணையம் மூலமாக இணைத்து கிராம சபை கூட்டம்(11.10.2025) நடத்துவது இதுவே முதல்முறை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- கிராம சபை கூட்டம் ஜனநாயகத்தின் அடையாளம் என்றும், கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க அரசு உறுதியாக உறுதி அளிப்பதாகவும் கூறினார்.
- ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்.
- கிராம வளர்ச்சி, சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம், மகளிர் முன்னேற்றம், குழந்தை வேலை தடுப்பு, பிளாஸ்டிக் கழிவு குறைப்புப் போன்ற தேவைகள் குறித்து பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
- மக்களே ஆலோசித்து 3 முக்கிய தேவைகள் தீர்மானிக்க வேண்டும்; அவை உடனடியாக நிறைவேற்றப்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தமிழ்நாடு கிராம ஊராட்சிகள் முன்னேற்றம், பொருளாதாரம், அடிப்படை வசதிகள், மற்றும் முறையான நிதி மேலாண்மை குறித்தும் வலியுறுத்தினார்.
- கிராம மக்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, டெங்கு/சிக்குன் குனியா நோய் தடுப்பு, மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்தியாவின் முதல் மனநல தூதர் / INDIA'S FIRST MENTAL HEALTH AMBASSADOR:
- உலக மனநல தினத்தையொட்டி, நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நடிகை தீபிகா படுகோனை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது.
- மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலக மனநல தினம் அக். 10ல் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில், 'பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மனநல சேவைகளுக்கான வாய்ப்பு' என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் மனநல சேவை கிடைக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கம்.
ஹ்வாசொங்-20 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை / HWASONG-20 INTERCONTINENTAL BALLISTIC MISSILE :
- வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
- ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.
- இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
- இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது.
- இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.
சீன பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்/ US PRESIDENT TRUMP ANNOUNCED THAT AN ADDITIONAL 100% TARIFF WILL BE IMPOSED ON CHINESE GOODS STARTING NOVEMBER 1ST 2025:
- அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான வரியை கணிசமாக அதிகரித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வரியை சற்று குறைத்தார். அந்த வகையில் சீன பொருட்களுக்கு இப்போது 30% வரி விதிக்கப்படுகிறது.
- இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்கடந்த 10-ம் தேதி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஸ்மார்ட்போன், மின்சார வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தேவைப்படும் அரியவகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உலக நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். உலக நாடுகளை தனது பிடியில் வைத்திருக்க விரும்பும் சீனாவை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
- எனவே, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100% வரிவிதிக்கப்படும். சீனா வேறு ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், இந்தஉயர்வு உடனடியாக அமலுக்கு வரும்.இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலக ஜூனியர் பேட்மிண்டன் 2025: வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா / WORLD JUNIOR BADMINTON 2025: INDIA WINS BRONZE MEDAL:
- உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.
- கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய கலப்பு அணி 0-2 என தோல்வி அடைந்தது.
- ஆனாலும் அரையிறுதிக்கு முன்னேறியதால் வெண்கலப் பதக்கம் பெற்று இந்தியா வரலாற்று சாதனை படைத்தது. உலக ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியா பதக்கம் வெல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-10th-11th-october-2025