CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 - (12.10.2025-14.10.2025)

TNPSC PAYILAGAM
By -
0


CURRENT AFFAIRS IN TAMIL OCTOBER 2025 - (12.10.2025-14.10.2025)


அக்டோபர் மாதம் 2025 (12.10.2025-14.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :



ஆந்திராவில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் ஏஐ மையம் அமைக்கிறது கூகுள் நிறுவனம் / GOOGLE TO SET UP $15 BILLION AI HUB IN ANDHRA PRADESH  

  • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பில் கூகுள் நிறுவனம் ஏஐ மையம் (AI Hub) அமைக்க இருக்கிறது. இந்த தகவலை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் செய்யும் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று சொல்லப்படுகிறது.
  • இந்த ஏஐ மையம், இந்திய இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் அதிகமான இந்தியர்களுக்கு தொழில் வாய்ப்பும், தொழில்நுட்பங்களிலும் விருத்தியும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
  • கூகுள் ஏஐ மையம் அமைப்பதற்கானப் பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும், இது உலகளாவிய கூகுள் நெட்வொர்க்குடன் இணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கூகுள் கிளவுடின் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், “கூகுள் இந்தியாவில் நீண்டகாலமாக உள்ளது. இங்கு இது எங்களுக்கு 21வது ஆண்டு. ஐந்து ஆண்டுகளில் எங்களுக்காக 14,000 பேர் வேலை செய்ய உள்ளார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் எங்கள் கிளவுட் தீர்வுகளை நாங்கள் தொடங்கினோம். புதுடெல்லி மற்றும் மும்பையில் எங்கள் சாதனங்களை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

  • விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் 1 ஜிகாவாட் ஹைப்பர்ஸ்கேல் கூகுள் தரவு மையம், ஆந்திரப்பிரதேசத்திற்கு சுமார் ரூ.10,000 கோடி வருவாயை ஈட்டித்தரும் என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
  • ஆந்திரப்பிரதேசத்தின் வளமை மற்றும் தற்சார்பு பயணத்தில் வரையறைக்கும் மைல்கல்லாக இத்திட்டம் உள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், 5 ஆண்டுகளில் (2026-2030) செய்யப்படும் சுமார் 15 பில்லியன் டாலர் முதலீடுகளால் மாநிலத்தில் 5,000 முதல் 6000 நேரடி வேலைவாய்ப்புகளையும் 20,000 முதல் 30,000 வரையிலான மொத்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று கூறினார்.


முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா 2025 /  CLOSING CEREMONY OF THE CM TROPHY 2025 

  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 7ம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் 2025 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்-2025 நடத்திட மொத்தம் 83.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 37 கோடி ரூபாய் பரிசுத் தொகையுடன் நடைபெற்ற மிகப்பெரிய விளையாட்டு போட்டியாகும்.
  • 2025-ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மொத்தம் 16,28,338 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்
  • முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் – 2025ல் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளி, அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்ற ஐந்து பிரிவுகளின் கீழ் தடகளம், டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து, பளு தூக்குதல் உள்ளிட்ட 37 வகை விளையாட்டு பிரிவுகளில் மொத்தம் 196 போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் 109 தங்கம், 90 வெள்ளி மற்றும் 82 வெண்கலம் என மொத்தம் 281 பதக்கங்களுடன் சென்னை மாவட்டம் முதலிடத்தையும்; 36 தங்கம், 22 வெள்ளி மற்றும் 30 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 33 தங்கம், 27 வெள்ளி மற்றும் 35 வெண்கலம் என 95 பதக்கங்களுடன் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை பெற்ற மாவட்டங்களைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.
  • முதல்வர் ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழாவில் பேசியது:
  •  கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.601.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். விளையாட்டுத் துறைக்கு மொத்தமாக ரூ.1,945.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம். அதனால் தான் தமிழ்நாடு விளையாட்டு துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி உள்ளது. 
  • பொருளாதாரத்தில் எந்த மாநிலமும் சாதிக்காத இரட்டை இலக்க வளர்ச்சியை நாம் எட்டியுள்ளோம். 
  • தேசிய, பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் சாதித்த 5,393 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 
  • தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 75 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வருகிறது.
  • எளியவர்களின் வெற்றிதான் நமது அரசின் வெற்றி" எனவும், பல ஏழை வீரர்களின் கனவை விளையாட்டுத் துறை நனவாக்குவதாகவும் குறிப்பிட்டார்.


சர்வதேச ஊதா விழா (பர்பிள் ஃபெஸ்டிவல்) 2025 / INTERNATIONAL PURPLE FEST 2025 

  • மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிப்படுத்தும் சர்வதேச ஊதா விழா (பர்பிள் ஃபெஸ்டிவல்) கோவாவில் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாவது நாளான  (11.10.2025) மாற்றுத்திறனாளிகள் கேட்பது, படிப்பது, எழுதுவது ஆகியவற்றை மேலும் எளிமைப்படுத்த மூன்று முக்கிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட்டு அது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 
  • மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால் இந்த முயற்சிகளைத் தொடங்கி வைத்து அறிவிப்புகளை வெளியிட்டார். தடையற்ற கற்றல் சூழலை உருவாக்குவதற்கும், மாற்றுத்திறனாளிகள் உலகளாவிய கல்வி வாய்ப்புகளில் முழுமையாக பங்கேற்பதற்கும் அரசின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்த முயற்சிகள் பிரதிபலிக்கின்றன.
  • முதலாவதாக வெளியிடப்பட்டது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பயிற்சி கையேடு ஆகும்.
  • இரண்டாவதாக இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 2025 டிசம்பர் 3 அன்று புது தில்லியில் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மதிப்பீட்டுப் பயிற்சிகளில் பங்கேற்றவர்களுக்கு இந்த சான்றிதழ்கள் வழங்கப்படும்.
  • மூன்றாவதாக, சைகை மொழி ஆராய்ச்சி மையம் சார்பில் டிசம்பர் 3 அன்று தொடங்கி, காது கேளாதோருக்கான ஒரு மாத பயிற்சித் திட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தேசிய, சர்வதேச தளங்களில் சிறந்து விளங்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையை இந்த மூன்று முயற்சிகளும் பிரதிபலிக்கின்றன.


உலகத் தரநிலைகள் தினத்தை முன்னிட்டு சென்னையில் கலந்துரையாடல் திருவிழா 2025  / BIS CHENNAI CELEBRATES WORLD STANDARDS DAY WITH MANAK MAHOTSAV 2025 

  • உலகத் தரநிலைகள் தினத்தை முன்னிட்டு, “சிறந்த உலகிற்கான பகிரப்பட்ட பார்வை: நீடித்த வளர்ச்சி இலக்கு 17 குறித்து கவனம் செலுத்துதல்  — இலக்குகளுக்கான கூட்டாண்மைகள் என்ற தலைப்பில் “கலந்துரையாடல் திருவிழா 2025”-ஐ இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை அலுவலகம்  (அக்டோபர் 14, 2025) நடத்தியது. 

  • இந்த நிகழ்வில் கொள்கை  வகுப்பாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுக்க தரநிலைகளின் பங்கு குறித்து விவாதித்தனர்.
  • உலக தரநிலை தினம் ( World Standards Day ) என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று கொண்டாடப்படும் ஒரு சர்வதேச நாளாகும் .
  • அக்டோபர் 14 குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் அக்டோபர் 14 , 1946 ஆம் ஆண்டு  25 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் முதன்முதலில் லண்டனில்  தரப்படுத்தலை எளிதாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்க கூடினர். ஒரு வருடம் கழித்து ISO உருவாக்கப்பட்டது. முதல் உலக தரநிலைகள் தினம் 1970 இல் கொண்டாடப்பட்டது.


2025 செப்டம்பர் மாதம் இந்தியாவின் மொத்த விலைக் குறியீட்டு எண்ணிக்கை (Wholesale Price Index) தொடர்பான முக்கிய அம்சங்கள்/ KEY FEATURES RELATED TO INDIA'S WHOLESALE PRICE INDEX FOR SEPTEMBER 2025 :

  • ஆண்டுப் பணவீக்க விகிதம் (Year-on-Year inflation rate) செப்டம்பர் 2025-ல் 0.13% என தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது நேர்மறையாக உள்ளது.
  • பணவீக்க விகித அதிகரிப்பு உணவுப் பொருட்கள், உற்பத்திப்பொருட்கள், போக்குவரத்து உபகரணங்கள், ஜவுளிகள் போன்றவற்றின் விலை உயர்ச்சி காரணமாக ஏற்பட்டது.
  • அனைத்து பொருட்களின் குறியீட்டு எண் செப்டம்பரில் 154.9, பணவீக்க விகிதம் 0.13%.
  • முதன்மைப் பொருட்கள்: குறியீட்டு எண் 189.0 (-3.32%)
  • எரிபொருள் மற்றும் மின்சாரம்: 143.4 (-2.58%)
  • உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள்: 145.2 (2.33%)
  • உணவுப் பொருட்கள்: 192.0 (-1.99%)
  • ஆகஸ்டு 2025-ன் மொத்த விலைக் குறியீட்டு எண்ணுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் 2025-ல் மாற்றம் -0.19%.
  • முக்கிய பொருட்கள் மற்றும் தொகுதிகளில் மாதந்தோறும் இருந்த மாற்றங்கள்:
  • உணவுப் பொருட்கள் விலை -1.38% குறைவு
  • உணவு அல்லாத பொருட்கள் விலை -1.06% குறைவு
  • கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு விலை 0.64% அதிகரிப்பு
  • கனிமங்கள் 1.36% அதிகரிப்பு
  • கனிம எண்ணெய் பொருட்கள் -0.54% குறைவு
  • நிலக்கரி -0.15% குறைவு
  • மின்சாரம் விலை 1.20% அதிகரிப்பு
  • அடுத்து அக்டோபர் மாதம் பற்றிய குறியீடு 14.11.2025 அன்று வெளியிடப்படும்


சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மாநாடு 2025/ STATE TOURISM MINISTERS MEET 2025 :

  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள்  பங்கேற்கும் இரண்டு நாள் மாநில சுற்றுலா அமைச்சர்கள் மாநாட்டிற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 2025 அக்டோபர் 14-15 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
  • ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் குறைந்தது ஒரு உலகாளவிய தரம் வாய்ந்த சுற்றுலாத் தளத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் “ஒரு மாநிலம்: ஒரு உலகளாவிய சுற்றுலா தளம்” என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் இதுவாகும். இந்தியாவில் சுற்றுலா மாற்றத்திற்கான திட்டமிடல் மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான வழிவகைகளின் ஒரு பகுதியாக சுற்றுலா மைய மேம்பாடு மற்றும் சுற்றுலா மைய மேலாண்மைக்கான மத்திய பட்ஜெட் 2025-26-ல் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகளை இந்த முன்முயற்சி பிரதிபலிக்கிறது.
  • சுற்றுலாத்துறை செயலாளர் வி.வித்யாவதி, தொடக்க உரையாற்றினார்.  அதைத் தொடர்ந்து மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்த இரண்டு நாள் விவாதம் குறித்து விவரித்தார்.
  • இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் சுற்றுலா மையங்கள் மற்றும் அதற்கான பட்ஜெட் முன்முயற்சிகள்  ஆகியவற்றை  சுற்றுலாத்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் சமர்ப்பிக்க உள்ளனர்.


எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னிலையில் காசா அமைதி ஒப்பந்தம் உறுதியானது / GAZA PEACE DEAL CONFIRMED IN PRESENCE OF US PRESIDENT DONALD TRUMP AT PEACE CONFERENCE IN EGYPT : 

  • இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா அல் சிசி தலைமையில் நடைபெற்ற காசா அமைதி உச்சி மாநாட்டில் 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
  • காசாவில் தடுத்துவைக்கப்பட்ட 20 பிணைக்கைதிகள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 4 பெட்டிகள், பிணைக்கைதிகளின் உடலுடன் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் பெற்றது.
  • 2023 அக்டோபர் 7-ல் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, 250 பாலஸ்தீனிய ஆயுள் கைதிகள், 1700க்கு மேற்பட்ட காசா கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
  • அமைதி ஒப்பந்தத்தை நினைத்து பார்க்க முடியாத ஒன்று என அமெரிக்க அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார். இதை சாத்தியமாக்க உதவிய எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்து இருக்கிறார்
  • கெய்ரோவில் நடைபெற்ற ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில், டிரம்புடன், எகிப்து, துருக்கியைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் பங்கேற்றனர். இதில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை
  • எகிப்தில் அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் மெர்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோரும் ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்வில் பங்கேற்றது, சர்வதேச அளவில் நாடுகளின் ஆதரவை வெளிக்காட்டியது. 
  • போரின் போது காசாவில் மட்டும் 67,000 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது வடக்கு காசாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பஞ்சம் நிலவுவதால், அனைத்து நிவாரண நடவடிக்கைகளும் இனி வேகம் பெறும் சூழல் உருவாகி இருக்கிறது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


current-affairs-in-tamil-12th-14th-october-2025


Post a Comment

0Comments

Post a Comment (0)