அக்டோபர் மாதம் 2025 (18.10.2025-20.10.2025) முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் 5ஆவது இந்திய வீரர்:
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி (20 அக்டோபர் 2025) இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
- இந்தப் போட்டியில், இந்தியாவின் முக்கிய வீரர் ரோகித் சர்மா நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கினார். ஆனால், அவர் 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.
- இந்த போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் 5ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவற்றை முன்னர் பெற்றவர்கள்:
- சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள்
- விராட் கோலி – 551 போட்டிகள்
- எம்எஸ். தோனி – 535 போட்டிகள்
- ராகுல் டிராவிட் – 504 போட்டிகள்
- இந்த பட்டியலில் ரோஹித் சர்மா ஐந்தாவது இந்திய வீரராக இணைந்துள்ளார்
சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு :
- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் கூறியதாவது:
- இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.
- இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும்.
- இது மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும். இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தி உள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’( New England Journal of Medicine) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day) 2025 :
- உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படுகிறது. எலும்புப்புரை பற்றிய விழிப்புணர்வு, தடுப்பு, ஆரம்ப கால பராமரிப்பு ஆகியவற்றுக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நாள் குறிக்கப்படுகிறது
- உலகம் உலக எலும்புப்புரை தினத்தைக் கடைப்பிடிக்கும் வேளையில், ஆயுஷ் அமைச்சகம் இந்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில் ஆரம்பகால தடுப்பு பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறை தலையீடுகளின் முக்கிய தேவையை வலியுறுத்துகிறது. இது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு அமைதியான ஆனால் பெரிய பொது சுகாதார சவாலாக மாறியுள்ளது. எலும்பு ஆரோக்கியம் மற்றும் எலும்புப்புரை போன்ற குறைபாடுகளுக்கு ஆயுர்வேதம் எவ்வாறு நிலையான, தடுப்பு மற்றும் மறுசீரமைப்பு தீர்வுகளை வழங்குகிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- எலும்புப்புரை நோய் எலும்புகளை பலவீனப்படுத்துவதுடன், அவை உடைந்து போகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் ஆகிறது. எலும்பு வலிமை மற்றும் அடர்த்தி இழப்பு காரணமாக இது காலப்போக்கில் மெதுவாக உருவாகிறது, மேலும் இது பெரும்பாலும் "அமைதியான நோய்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது பொதுவாக எலும்பு முறிவு ஏற்படும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. பல சந்தர்ப்பங்களில், முதல் அறிகுறி எலும்பு முறிவு - பெரும்பாலும் இடுப்பு, மணிக்கட்டு அல்லது முதுகெலும்பில் ஏற்படும்.
"No kings" என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது:
- "No kings" என்ற முழக்கத்தைக் கொண்டு, அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 2025 அக்டோபரில் அமெரிக்கா முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
- போராட்டத்திற்கான காரணங்கள் :குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள், அரசுத் துறைகளில் அதிக பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை பொதுமக்களில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. டிரம்ப் நிர்வாகம் சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த இடதுசாரி அமைப்புகள் பிரபலமாக "No kings" என்ற முழக்கத்தில் போராட்டங்களை வழிநடத்தியது.
- "No Kings" இயக்கத்தின் சிறப்பம்சங்கள் : "No kings" போராட்டத்தை 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் நடத்துகின்றன. இந்த இடதுசாரி சார்பு அமைப்புகள் கடந்த ஜூன் மாதத்திலும் வெகுவிலா போராட்டத்தை ஒருங்கிணைத்தன.2025 அக்டோபர் 19-20 தேதிகளில், ஏழு மில்லியன் (70 லட்சம்) பேருக்கு மேல் மக்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி டிரம்ப் அரசுக்கு எதிராக மக்கள் இயக்கம் நடத்தப்பட்டது.
- முக்கிய நோக்கம் : "No kings" முழக்கம் மூலம், ஜனநாயகத்திற்கு எதிரான அதிகார concentration-ஐ எதிர்த்து, எல்லா அதிகாரமும் ஒரே நபரிடம் சுகாதாரிக்கக் கூடாது என்பதை வலியுறுத்த மாநாட்டு அளவில் இதயம் கொண்ட போராட்டம் தொடங்கப்பட்டது.குடியேற்றமான, மனித உரிமை பாதுகாப்பான அமெரிக்கா வேண்டும் என்பதையே மக்கள் முன்வைக்கின்றனர்.
உலகக் கோப்பை வில்வித்தை 2025 ஜோதி சுரேகா வெண்கலம் வென்றார் :
- உலகக் கோப்பை வில்வித்தை போட்டியின் 8-வது சீசன் சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜோதி சுரேகா, உலகின் 2-ம் நிலை வீராங்கனையான கிரேட் பிரிட்டனின் எலா கிப்சனுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
- இதில் ஜோதி சுரேகா 150-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பை வில்வித்தை இறுதி தொடரில் காம்பவுண்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஜோதி சுரேகா படைத்துள்ளார்.
ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025 தன்வி சா்மா வெள்ளி வென்றார் :
- ஜூனியா் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், தன்வி சா்மா 7-15 12-15 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் அன்யபட் பிசிட்பிரீசசாக்கிடம் வீழ்ந்தார். எனினும், அவர் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- கடந்த காலங்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியிருந்த இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெவால் தங்கம், வெள்ளி என இரண்டு பதக்கங்களையும், இன்னொரு வீராங்கனை அபர்னா போபட் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் 2025 :
- நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
- இதில் அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். 2-வது செட்டை ரிபாகினா 6-0 என கைப்பற்றினார்.
- இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து 3-6, 6-0, 6-2 என்ற செட் கணக்கில் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி ரிபாகினா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் 2025:
- கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது.
- இதில் நடந்த இறுதிப்போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரான்சின் கரன்டின் மவுடெட் உடன் மோதினார்.
- இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். சுமார் 882 நாட்களுக்குப் பிறகு மெத்வதேவ் வெல்லும் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ் டென்பின் பவுலிங் தொடர் 2025:
- DAVe BABA VIDYALAYA தமிழ் நாடு ஓபன் ட்ரையோஸ் டென்பின் பவுலிங் தொடர் 2025 போட்டியில், டெல்லிஷார்க்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
- இந்த போட்டி லெட்ஸ் பவுல், தோரைய்ப்பாக்கம், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வை தமிழ்நாடு டென்பின் பவுலிங் சங்கம் (TNTBA) இந்திய டென்பின் பவுலிங் கூட்டமைப்பின் (Tenpin Bowling Federation of India) ஆதரவுடன் ஏற்பாடுசெய்தது.
- இறுதி ஆட்டம் "பேக்கர் வடிவத்தில் (Baker Format)" நடைபெற்றது, இது இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்ஃபால் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது.
- டெல்லி ஷார்க்ஸ் அணியின் வீரர்கள் — த்ருவ் சார்தா, பள்குனாரெட்டி மற்றும் சுனில் சர்மா — ஸ்ட்ரைக் சிண்டிகேட்சென்னை (சோபன் டி., கணேஷ் என்.டி., குருநாதன்) அணியை வெறும் 12 பின்களால் (375–363) வென்று பட்டம் வென்றனர்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-18th-20th-october-2025


