அக்டோபர் மாதம் 2025 (21.10.2025-23.10.2025)
முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
ஜப்பான் – இந்தியா கடற்படை பயிற்சி 2025 :
- ஜப்பான் – இந்தியா இடையே கடற்படை பயிற்சி 2025-ல் (JAIMEX-25) இந்திய கடற்படைக் கப்பல் சஹ்யாத்ரி பங்கேற்றது. இந்தப் பயிற்சி 2025 அக்டோபர் 16 முதல் 18 வரை நடைபெற்றது. துறைமுக கட்டத்தின் போது, இந்தியக் கடற்படை ஜப்பானில் உள்ள யோகோசுகா துறைமுகத்திற்கு சென்றது.
- யோகோசுகா துறைமுகத்திற்கு செல்வதற்கு முன் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, ஜப்பானின் கடற்பகுதி தற்காப்புப்படைக் கப்பல்களான அசாஹி, ஊமி மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் ஜின்ரியூ ஆகியவை கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன.
- துறைமுகப் பயணத்தின் போது, ஐஎன்எஸ் சஹ்யாத்ரி குழுவினரும் ஜப்பானின் கடல்பகுதி தற்காப்புப் படை பிரிவினரும், பல்வேறு கலாச்சார பரிவர்த்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளனர். நட்பையும் ஒற்றுமையையும் வளர்ப்பதற்கு கப்பல்களுக்கு இடையே பயணம் செய்வது, சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வது, கூட்டாக யோகா பயிற்சி செய்வது ஆகியவையும் இடம் பெறவுள்ளன.
உலகில் மிகவும் மாசுபட்ட மாநகராக டெல்லி :
- டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) நிர்ணயித்ததைவிட 15 மடங்கு காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.
- டெல்லியில் ஒரு கன மீட்டருக்கு 228 மைக்ரோ கிராம் அளவில் மாசு பதிவாகி உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள ஒரு கன அடிக்கு 15 மைக்ரோ கிராம் என்ற அளவுடன் ஒப்பிடும்போது இது 15.1 மடங்கு அதிகம்.
- IQAir என்ற சுவிட்சர்லாந்து காற்றுத் தர தொழில்நுட்ப நிறுவனம் உலகின் மிக முக்கிய 120 மாநகரங்களின் காற்ற மாசு குறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, டெல்லியின் காற்றுத் தரக்குறியீடு 429 ஆக இருந்ததாகவும், இதன் மூலம் உலகில் மிகவும் மாசுபட்ட மாநகராக டெல்லி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-ம் இடத்தில் உள்ள லாகூரில் காற்றின் தரக்குறியீடு 260 ஆகவும், 3ம் இடத்தில் உள்ள கராச்சியில் தரக்குறியீடு 182 ஆகவும் பதிவாகி உள்ளது.
உலகளாவிய வன வள மதிப்பீடு 2025 :
- பாலித் தீவில் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (எப்ஏஓ) வெளியிட்ட உலகளாவிய வன வள மதிப்பீடு 2025-ன் படி, உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையை எட்டியுள்ளது. உலகளவில் மொத்த வனப் பரப்பளவில் 9-வது இடத்திற்கு அது முன்னேறியுள்ளது.
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சமூக ஊடக எக்ஸ் பதிவில் இந்த வளர்ச்சியைப் பற்றி தெரிவித்துள்ளார்.
- முந்தைய மதிப்பீட்டில், இந்தியா 10-வது இடத்தில் இருந்தது. வருடாந்திர வனப் பரப்பளவு ஆதாயத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது நிலையான வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சமநிலைக்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார்:
- ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வழங்கினார்.
- லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய அமைச்சர், விடாமுயற்சி, தேசபக்தி, சிறந்தவற்றுக்காக பாடுபடும் இந்திய உணர்வு ஆகியவற்றின் அடையாளமாக நீரஜ் சோப்ரா திகழ்வதாக தெரிவித்தார்.
அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே கனிம ஒப்பந்தம் :
- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை அவர் (அக். 20) சந்தித்தார்.
- இந்த நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா இடையில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.75 ஆயிரம் கோடி) மதிப்பிலான அரிய கனிம வள ஒப்பந்தத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் அல்பானீஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
- இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்த 6 மாதங்களுக்கு அரிய கனிம சுரங்கங்கள் மற்றும் அதன் செயலாக்கத் திட்டங்களுக்கு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரசுகள் தலா 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
- முன்னதாக, அரிய கனிம வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீன அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், மாற்று வழியாக இந்தப் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- மேலும், சீன அரசின் நடவடிக்கைக்கு அதிபர் டிரம்ப் வரும் நவம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் மீது கூடுதலாக 100 சதவிகித வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் பெண்களுக்கான ஜிகாதி படிப்பை ஜெய்ஷ்-இ-முகம்மது தொடங்கியுள்ளது:
- காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கத்துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு தொடங்கப்பட்டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது இந்தியாவால் விடுவிக்கப்பட்ட 3 தீவிரவாதிகளில் ஒருவரான மவுலானா மசூத் அசார் இந்த அமைப்பை தொடங்கினார்.
- 2001-ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட கொடூர தாக்குதல்களை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐ.நா.சபையால் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது, இம்மாத தொடக்கத்தில் 'ஜமாத்-உல்-முமினாத்' என்ற பெயரில் மகளிர் பிரிவை தொடங்கியது. இந்நிலையில் நிதி திரட்டுதல் மற்றும் ஆள் சேர்ப்புக்காக 'துஃபத்-அல்-முமினாத்' என்ற பெயரில் பெண்களுக்கான ஆன்லைன் படிப்பை இந்த அமைப்பு தொடங்க உள்ளது.
- ஆன்லைன் ஜிகாதி படிப்புக்காக ஒவ்வொரு பெண்ணிடம் இருந்தும் 500 பாகிஸ்தானிய ரூபாய் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.156) கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சியை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது:
- பிரதமரை தேர்ந்தெடுக்கும் கீழ் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் லிபரல் ஜனநாயகக் கட்சி (எல்டிபி) வேட்பாளர் சனே டகைச்சி 237 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைவிட 4 வாக்குகள் கூடுதலாக சனே டகைச்சி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிர்க்கட்சியான அரசியலமைப்பு ஜனநாயகக் கட்சியின் தலைவர் யோஷிகோகோ 149 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
- முன்னதாக, லிபரல் ஜனநாயகக் கட்சியின் (எல்டிபி) தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் இருந்த ஷிகெரு இஷிபா, ஓராண்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார். இதன்படி கடந்த மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இதையடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 4-ம் தேதி டோக்கியோவில் நடைபெற்றது. சனே டகைச்சி 183 வாக்குகளும், வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில் சனே டகைச்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது நாடாளுமன்றத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
ஐஸ்லாந்து நாட்டில் முதன்முறையாக கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளன:
- ஐஸ்லாந்து நாட்டின் தலைநகருக்கு தென் மேற்கில் உள்ள ஜோஸ் (Kjós) என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் கொசுக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியை ஐஸ்லாந்து இழந்துள்ளது. இப்போதைக்கு, ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அன்டார்டிக்கா கண்டமாக அறியப்படுகிறது.
- ஐஸ்லாந்தின் ஜோஸ் பகுதியில் இரண்டு பெண் கொசுக்களும், ஓர் ஆண் கொசுவும் கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் பூச்சியியல் துறை நிபுணர் ஜோர்ன் ஹிஜால்டாசன் கூறியுள்ளார். மேலும், இந்தக் கொசுக்கள் ‘Culiseta annulata’ என்ற இனத்தைச் சேர்ந்தவை என்றும், இவை எளிதில் கடும் குளிரை தாக்குப் பிடிக்கும் ரகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
- ஐஸ்லாந்தில் நிலவும் நடுக்கும் குளிரும், தேங்கிய நீர்நிலைகள் இல்லாத சூழலும் தான் அங்கு இதுவரை கொசுக்கள் இல்லாததற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு ஐஸ்லாந்தில் பல முறை அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.
- அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸை ஐஸ்லாந்து சந்தித்திராத நிலையில் இந்த ஆண்டு மே மாதம் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கும் மேல் 20 டிகிரி செல்சியஸைக் கடந்து வெப்பம் பதிவானதாகவும், ஒரு முறை 26.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் கூறப்படுகிறது. இந்த வெப்ப அதிகரிப்பு ஐஸ்லாந்தில் பனிப்பாறைகள் உருகக் காரணமானது என்றும், இதுவே, கொசு உற்பத்தியாகக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கொசுக்கள் எப்படி நாட்டுக்குள் வந்தது என்பது குறித்து தீவிர ஆய்வுகள் நடந்து வருகின்றன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-21st-23rd-october-2025


