அக்டோபர் மாதம் 2025 (29.10.2025-31.10.2025)
முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம்:
- மலேசியா கோலாலம்பூரில் 19-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு (01.11.2025) நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் (31.10.2025) சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
- இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்
- ராஜ்நாத் சிங் கூறியதாவது: “இந்த ஒப்பந்தம் இந்தியா-அமெரிக்கா உறவுகளில் புதிய அத்தியாயம். இது எதிர்காலத் தொடரும் உறவு மிக வலுவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
10 ஆண்டு கால பாதுகாப்பு கட்டமைப்பு இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தானது, இது பல முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்:
- தகவல் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு - இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளுக்கிடையே தகவல் பரிமாற்றம்
- தொழில்நுட்ப ஒத்துழைப்பு - பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் கூட்டு முயற்சிகள்
- பிராந்திய ஸ்திரத்தன்மை - ஆசிய-பசிபிக் பகுதியில் அமைதி பராமரிப்பு
- தடுப்புக் கொள்கை - பொதுவான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல்
மகளிர் உலக கோப்பை 2025:
- மகளிர் உலக கோப்பை 2025 அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை இந்திய அணிகள் அதிரடியாக வீழ்த்தியது. இந்த போட்டியில் இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் எடுத்தும், 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியோடு மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
- இந்த வெற்றியின் முக்கிய காரணமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளங்கினார். அவர் தனிப்பட்ட பலத்துடன் 127 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு மாபெரும் பங்களிப்பு செய்தார்.
- 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டி 2025 நவம்பர் 2ஆம் தேதி நவீ மும்பையிலுள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியல் :
- ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் சீனியர் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் 38 வயதான ரோஹித் சர்மா 121 ரன்கள் விளாசியிருந்தார். இதன் மூலம் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்துள்ளார். தரவரிசை பட்டியலில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன்முறையாகும்.
- 38 வயதிலும், இந்த சாதனையை அடைந்த மூத்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்:
- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதாக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- இரண்டு முறை நிறைவேற்றப்பட்ட நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதா ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மற்றும் நிர்வாக மாற்றங்களை உள்ளடக்கிய 9 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுடன் அமலாகியுள்ளன.
- மேலும், 2025-ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு, ஆளுநரின் ஒப்புதலுக்காக நிறைய மசோதாக்கள் காத்திருந்த நிலையில், தற்போதைய அமலில் 9 மசோதாக்கள் சட்டமாகியுள்ளன.
தமிழ்நாட்டில் போர்டு நிறுவனம், ரூ.3250 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்:
- கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , போர்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
- அப்போது போர்டு நிறுவ னத்தின் உயர் அதிகாரிகள் உறுதியளித்தபடி, போர்டு நிறுவனம், ரூ.3250 கோடி முதலீட்டில் வாகன என்ஜின் உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது.
- அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்ச மு.க. ஸ்டாலின் முன்னிலையில் (31.10.2025) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தால் ரூ.3,250 கோடி முதலீட்டில் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், அடுத்த தலைமுறை வாகன என்ஜின் (Next-Gen Engine) உற்பத்தி செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- இது செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், 2,35,000 புதிய இன்ஜின்கள் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் திட்டம் 2028 அல்லது 2029 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த ஓர் பெரும் உற்பத்தி முயற்சி தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கு மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்பு அதிகரிக்க முக்கியமாக இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த கையேடு ஒப்பந்தம் செய்யப்பட்டு, தொழில் முதலீட்டின் முக்கியம் அறியப்படுத்தப்பட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் இலக்கு :
- சென்னையில் (30 அக்டோபர் 2025) நடைபெற்ற 7-வது விண்டர்ஜி இந்தியா-2025 மாநாட்டில் உரையாற்றிய அவர், 2030-ம் ஆண்டுக்குள் நாட்டில் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாகவும், இதில் 100 ஜிகாவாட் மின்சாரம் காற்றாலை திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்றும் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு :
- நாட்டில் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது.
- அதன்படி, தமிழ்நாட்டில் 3 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், ஆர் கே பெட் தாலுகாவின் ஒரு பகுதி, காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு நகராட்சி ஆகிய இடங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னோட்டம் நடைபெறவுள்ளது.
- இப்பணிகள் சுமூகமாக நடைபெறுவதற்கு தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை மாநில அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்.
- களப்பணியாளர்களுடன் துல்லியமான விவரங்களை பகிர்ந்து கொள்வது கணக்கெடுப்பின் போது பயன்படுத்தப்படும் டிஜிட்டல் செயலிகள் மற்றும் செயல்முறைகளை செம்மைப்படுத்த உதவும்.
- இந்த முன்னோட்டம் 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வெற்றிகரமாக அமைய வழிவகுக்கும். நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மிகத்துல்லியமிக்க செயல்திறனுடைய தயார்நிலையை உறுதிசெய்ய இந்த முன்னோட்டம் பயிற்சி உதவும்.
- 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்னோட்டம் 10-11-2025 முதல் 30-11-2025 வரை நடைபெறும். அத்துடன் சுய கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கான முன்னோட்டம் 1-11-2025 முதல் 7-11-2025 வரை நடைபெறும் என்று தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே புதிய வர்த்தக உடன்பாடு:
- தென்கொரியாவின் புசான் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்கள் முக்கிய வர்த்தக ஒப்பந்தமாக அமைந்துள்ளது. இதில்:
- சீனா, அமெரிக்காவிடம் சோயாபீன்ஸ், சோளம் உள்ளிட்ட விவசாய பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
- அரிய பூமி தாதுக்களை (Rare Earth Minerals) அமெரிக்காவிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய சீனா சம்மதம் தெரிவித்துள்ளது.
- முக்கிய வர்த்தகப் பிரச்னைகளைத் தீர்க்க இருநாடுகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
- அதற்கு பதிலாக, சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆக குறைக்கப்படுகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
உலகின் முதல் AI போர் விமானம்:
- உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- இந்த விமானம் "X-BAT" எனப்படும் ஃபைட்டர் ஜெட் ஆகும். இதன் முக்கிய அம்சங்கள்:
- இது ஒரு விமானி இல்லாத (unmanned) AI இயக்கப்படும் ஃபைட்டர் ஜெட்.
- ரன்வே தேவையில்லை, நிலத்திலிருந்து நேரடியாக செங்குத்தாக (VTOL) புறப்படும்.
- 2,000 கடல் மைல்கள் (சுமார் 3,704 கிலோமீட்டர்கள்) பயணம் செய்யும் திறன்.
- 50,000 அடி (சுமார் 15,240 மீட்டர்) உயரத்தில் பறக்கக்கூடியது.
- சுறுசுறுப்பான AI மென்பொருள் "Hivemind" மூலம் தானாக இயக்கப்பெறும்; GPS இல்லை, தொடர்பு துண்டிக்கப்பட்டாலும் மனித உதவி இல்லாமல் செயல்படும்.
- வெவ்வேறு போர் நடவடிக்கைகள் மற்றும் ஆயுதங்கள் (air-to-air, air-to-surface) கொண்டு தாக்குதல் செய்யும் வசதி.
- ரகசியமாக செயல்படும் திறன் மற்றும் 3 X-BATs ஒரே பாரம்பரிய ஃபைட்டர் விமான இடத்திற்கு இணைந்து அமையக்கூடிய தெளிவான வடிவமைப்பு.
- கடல், காடு, பனிக்கட்டுகள் நிலங்களிலோ எங்கும் தரையிறங்கி, மீண்டும் பறக்கலாம்.
- சிறந்த சுற்றுச்சூழல் அறிவு கொண்டு தானாக முடிவெடுக்கிறது, போரின் மாற்றங்களுக்கு தற்சமயம் தகுந்த நடவடிக்கை எடுக்கிறது.
- இதுவே போர் விமான ஒப்பீட்டில் புதிய புரட்சி: மனிதர்களை விமானத்தில் கொண்டுவராமல் செயற்கை நுண்ணறிவு மூலம் முழுமையாக தானாக நடத்தும் VTOL ஃபைட்டர் ஜெட் ஆகும், இதனால் ரன்வே இல்லாத சூழல்களிலும் போரில் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்
உலக சிக்கன தினம் (World Thrift Day) 2025 :
- உலக சிக்கன தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. இது சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நாள் ஆகும்.
- உலக சிக்கன தினம் (World Thrift Day) அல்லது உலக சேமிப்பு தினம் (World Savings Day) என்பது சிக்கன வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மற்றும் சேமிப்பின் அவசியத்தை மக்களிடையே விழிப்புணர்வாக ஏற்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள்.
- 1924-ஆம் ஆண்டு, இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற சர்வதேச சேமிப்பு வங்கிகளின் மாநாட்டில் இந்த தினம் உருவாக்கப்பட்டது.
- உலகளவில் இது அக்டோபர் 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அக்டோபர் 31, 1984 அன்று படுகொலை செய்யப்பட்டதையடுத்து, அக்டோபர் 30 அன்று உலக சிக்கன தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தேசிய ஒற்றுமை தினம் 2025 :
- தேசிய ஒற்றுமை தினம் என்றும் அழைக்கப்படும் ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ், ஆண்டுதோறும் அக்டோபர் 31 அன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை நினைவுகூரும் விதமாகவும், இந்தியாவில் தேசிய மற்றும் அரசியல் ஒருங்கிணைப்பு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் அவர் வகித்த முக்கிய பங்கை கௌரவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது. நாட்டின் இறையாண்மை, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் விளக்குகிறது.
- தேசத்தைக் கட்டியெழுப்புவதில் சர்தார் படேலின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கௌரவித்து கொண்டாடுவதற்காக மத்திய அரசு அறிவித்தபடி, இந்த நாள் முதன்முதலில் 2014-ல் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2015 அக்டோபர் 31 அன்று , நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே நீடித்த மற்றும் கட்டமைக்கப்பட்ட தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு இடையே மேம்பட்ட புரிதல் மற்றும் பிணைப்பை ஏற்படுத்துவதற்காகவும், 'ஒரே பாரதம் உன்னத பாரதம் ' என்ற முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை குறிக்கும் விதமாக இந்த ஆண்டு தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
- 1947-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஒருங்கிணைப்பு செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகித்தார். இந்தியாவின் நிலப்பரப்பு மற்றும் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40% ஐ உள்ளடக்கிய 560-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. சர்தார் படேல் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள், வற்புறுத்தல், தேவையான இடங்களில் உறுதியான நிர்வாக நடவடிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தினார். இந்த மாநிலங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, நவீன இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்தார். அவரது முயற்சிகள், ஒன்றுபட்ட ஜனநாயகக் குடியரசிற்கு அடித்தளம் அமைத்தன.
உலக பக்கவாத தினம் 2025 :
- உலக பக்கவாத தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- இந்த நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு இதற்கான சிகிச்சை முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், இந்தத் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மூளைக்குச் செல்லும் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைபடுவதையடுத்து இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.
- விரைந்து செயல்படுதல்: ஒவ்வொரு நிமிடமும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டுக்கான பக்கவாத தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய கடல்சார் வாரம் 2025 :
- மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் நடைபெறும் இந்திய கடல்சார் வாரம் 2025 இல் கடல்சார் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
- மேலும் உலகளாவிய கடல்சார் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்ற கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கப்பல் துறை சம்பந்தமான ஏராளமான திட்டங்கள் விழாவில் தொடங்கப்பட்டிருப்பதுடன், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன என்று கூறினார்.
- இந்தியாவின் கடல்சார் திறன்கள் மீது சர்வதேச நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது என்று கூறினார்.
- “21-வது நூற்றாண்டில் இந்தியாவின் கடல்சார் துறை அதிக வேகத்துடனும், ஆற்றலுடனும் முன்னேறுகிறது”, என்று குறிப்பிட்ட பிரதமர், 2025-ம் ஆண்டு, இந்தத் துறைக்கு மிக முக்கிய வருடமாக அமைந்திருப்பதாகக் கூறி, பல்வேறு முக்கிய சாதனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
2025ஆம் ஆண்டிற்கான Dictionary.com தளத்தில் சிறந்த வார்த்தையாக "67" தேர்வாகியுள்ளது:
- இது பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளது, ஏனெனில் வழக்கமாக ஒரு எண்ணை வார்த்தையாக எடுக்குவது அபூர்வம். ஆனால் "67" இப்போது ஒரு எண் அல்ல, சரியான அர்த்தம் மற்றும் குறியீடு கொண்ட வார்த்தையாக மகிழ்ச்சி, உற்சாகம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
- சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களில் (முக்கியமாக Gen Alpha – 2010–2024 பிறந்தவர்கள்) இந்த "67" குறியீடு பெரிதும் பரவியது.
- டிக்டாக் போன்ற இடங்களில் இளைய தலைமுறை #67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியுள்ளது.
- "67" என்ற வார்த்தையை 'அறுபத்தி ஏழு' என்ற தமிழ் உச்சரிப்பை விட "six-seven" (சிக்ஸ் செவன்) என ஆங்கில ஸ்டைலில் சொல்ல வேண்டும்.
- ஸ்க்ரில்லா என்ற அமெரிக்க ராப் பாடகன் "Doot Doot (6 7)" பாடலிலும் இருந்து இது இணையத்தில் டிரெண்டாகத் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- Dictionary.com-ன் பதில்: 67 என்ற எண்ணுக்கு ஒரு நிலையான வரையறை இல்லை, அதன் பாவனை சூழலுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-29th-31st-october-2025


