அக்டோபர் மாதம் 2025 (27.10.2025-28.10.2025)
முக்கிய நடப்பு நிகழ்வுகள் :
மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டம் :
- மின்னணு சாதன உதிரிப்பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் (Electronics Manufacturing Component Scheme), முதல் கட்டமாக 7 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பல்தட அச்சு சர்க்யூட் போர்டுகள், தாமிரத்திலான கிளாட் லாமினேட்ஸ், கேமராவிற்கான பாகங்கள் மற்றும் பாலிபிரப்போலின் பில்ம்ஸ், ஆகியவை உற்பத்தி செய்யப்பட உள்ளன.
- இந்த நடவடிக்கை இந்தியாவின் உற்பத்தித்துறை வளர்ச்சிக்கு முக்கிய படிநிலையாகும். இது மின்னணு சானதங்களின் உதிரிப் பாகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மற்றும் எந்திரங்களின் முழுமையான உற்பத்திக்கு உதவிடும்.
- மத்திய அரசின் இந்தத் திட்டத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனஙகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதுவரை 249 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது 1.15 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைப் பிரதிபலிப்பதாகவும், 10.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி மற்றும் 1.42 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது. மின்னணுவியல் துறையில், இந்தியாவின் உறுதிப்பாடான செயல்பாடுகள், உயர் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் 5,532 கோடி ரூபாய் மதிப்பிலான 7 திட்டங்களுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 36,559 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்திக்கும் 5,100 நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வகை செய்கிறது.
- இதற்கான உற்பத்தி அலகுகள் தமிழ்நாட்டில் 5 இடங்களிலும், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
22-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு 2025 :
- கோலாலம்பூரில் 22வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு அக்டோபர் 26, 2025 அன்று நடைபெற்றது. பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இந்த உச்சிமாநாட்டில் மெய்நிகர் முறையில் பங்கேற்றார்.
- பிரதமரும் ஆசியான் தலைவர்களும் இணைந்து ஆசியான்-இந்தியா உறவுகளில் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, விரிவான மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளைப் பற்றி விவாதித்தனர்.
- இது இந்தியா-ஆசியான் உச்சிமாநாட்டில் பிரதமரின் 12வது பங்கேற்பு.
கூகுள் நிறுவனத்தின் சார்பில் குவாண்டம் எக்கோஸ் என்ற குவாண்டம் அல்காரிதத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது:
- கூகுள் நிறுவனத்தின் சார்பில் குவாண்டம் எக்கோஸ் என்ற குவாண்டம் அல்காரிதத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது கிளாசிக்கல் சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13000 மடங்கு விஞ்சும் என்றும் கூறப்படுகிறது.
- கிளாசிக் சூப்பர் கம்ப்யூட்டர்களின் செயல்திறனை மிஞ்சுவதாகவும் இது இருக்கும். மிகவும் மேம்பட்ட சூப்பர் கம்ப்யூட்டரை விட இந்த வழிமுறை 13000 மடங்கு வேகமாக இயங்குவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
புதுதில்லியில் பாரத் சர்வதேச அரிசி மாநாடு :
- வர்த்தக மேம்பாடு மற்றும் முடிவெடுத்தலில் பங்கேற்பதை உறுதிசெய்ய மத்திய அரசு, அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் வழக்கமாக விவாதிக்கிறது. இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியில் அரிசி முன்னணி வகிக்கிறது.
- 2024-25-ம் ஆண்டில் சுமார் 12.95 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மேலும் இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்துறை மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள், பாரத் சர்வதேச அரிசி மாநாடு 2025-க்கு நிதி சாராத ஆதரவை வழங்குகின்றன.
- பாரத் சர்வதேச அரிசி மாநாடு 2025, அக்டோபர் 30-31, 2025 ஆகிய நாட்களில், புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது அரிசித் துறையில் உள்ள ஒரு தனியார் வர்த்தக அமைப்பான இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரிசித் துறையின் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அதுசார்ந்த துறையில் ஈடுபட்டுள்ள பிற பங்குதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர்கள் மற்றும் தலைவரை நியமிப்பதில் வர்த்தகத் துறைக்கு எந்தப் பங்களிப்பும் கிடையாது.
- அரிசித் துறையின் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தவிர, இந்தியாவின் பிற முக்கிய அரிசி ஏற்றுமதியாளர் சங்கங்களான (பாஸ்மதி அல்லாத அரிசி), சட்டீஸ்கர் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம், காக்கிநாடா அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவையும் இந்த நிகழ்வில் இணைந்து செயல்படவுள்ளன.
‘தி நெக்ஸ்ட் லெவல்’ திட்டம் :
- சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடரின் பிளாட்டினம் ஸ்பான்சராக பஜாஜ் குழுமம் இணைந்துள்ளது. மேலும் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரங்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் ‘தி நெக்ஸ்ட் லெவல்’ என்ற திட்டத்தை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.
- இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ், பஜாஜ் ஃபின்செர்வ்– ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் பஜாஜ், பிரபல டென்னிஸ் வீராங்கனைகளான குரோஷியாவின் டோனா வெகிக், ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பிர்ரெல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தி நெக்ஸ்ட் லெவல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தேர்வு செய்யும் 10 வீரர், வீராங்கனைகளுக்கு பஜாஜ் குழுமம், பயிற்சி, வழிகாட்டல் மற்றும் தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஆகியவற்றை உருவாக்கி கொடுக்கும். பயிற்சி முகாம்கள், டென்னிஸ் உபகரணங்கள் மற்றும் பயண செலவுகள் ஆகிய அனைத்துக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஸ்பான்சர்ஷிப் முழுமையாக நிதி உதவியை வழங்கும்.
பிளாஸ்டிக் கழிவை கொடுத்து உணவு பெறும் திட்டம்:
- அமல்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ள முன்முயற்சிக்கு மன்கி பாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதுமையான முயற்சியை சத்தீஸ்கர் அரசு எடுத்துள்ளது. அதற்காக ‘‘குப்பை கஃபே’’ வை அமைத்துள்ளது. அங்கு குடிமக்கள் உணவுக்காக பிளாஸ்டிக் கழிவுகளை பரிமாறிக் கொள்ளலாம்.
8-வது ஊதியக் குழுவின் பரிந்துரை விதிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
- மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை (28.10.2025) ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பிற சலுகைகளில் மாற்றங்களை ஆராய்ந்து பரிந்துரைக்க இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்தக் குழு நியமன தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஐஐஎம் (பெங்களூர்) பேராசிரியர் புலக் கோஷ் பகுதிநேர உறுப்பினராகவும், பெட்ரோலியத் துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ரஷ்யா அணுசக்தி மூலம் இயக்கப்படும் '9M730 புரேவெஸ்ட்னிக்' ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது:
- அணு சக்தியால் இயங்கும் புரேவெஸ்ட்னிக் என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. இதை எந்த வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என கூறப்படுகிறது.
- ரஷ்யா ‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவுகணையை கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.
- சக்திவாய்ந்த ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுடவேண்டாம் என்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளியேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்தப்பட்டன. அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டங்களும் விரிவுபடுத்தப்பட்டன.
- இதையடுத்து 9எம்730 புரேவெஸ்ட்னிக் என்று அணு சக்தி ஏவுகணையை ரஷ்யா அறிமுகம் செய்தது.
- இதை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டத்துக்கான ரஷ்யாவின் பதிலடி நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புதின் கூறினார். இந்த ஏவுகணையை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செலுத்த முடியும். இது பறந்து செல்லும் பாதையையும் கணிக்க முடியாது என கூறப்படுகிறது.
- இந்நிலையில் இந்த ஏவுகணையை ரஷ்யா கடந்த 21-ம் தேதி பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வானில் சுமார் 15 மணி நேரம் பறந்து 14,000 கி.மீ தூரம் சென்றதாக ரஷ்ய ராணுவத் தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ் கூறினார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!
current-affairs-in-tamil-27th-28th-october-2025


