TNPSC Current Affairs in Tamil: February 20 to 22, 2026 | PDF Download & Key Notes

TNPSC PAYILAGAM
By -
0

TNPSC Current Affairs in Tamil: February 20 to 22, 2026 | PDF Download & Key Notes



TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய குறிப்புகள்: TNPSC Current Affairs in Tamil: February 20 to 22, 2026| (PDF) : (Key Takeaways for Exam):

வணக்கம் Tnpsc Aspirants! பிப்ரவரி 20 முதல் 22, 2026 வரையிலான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வர்களுக்கான முக்கிய நடப்பு நிகழ்வுகள் மற்றும் முக்கியக் GK குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 


இந்தியா தயாரித்த 'டிடி' (Td) தடுப்பூசி அறிமுகம்

  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, இமாச்சலப் பிரதேசத்தின் கசோலியில் உள்ள மத்திய ஆராய்ச்சி நிலையத்தில் (CRI) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டெட்டனஸ் மற்றும் பெரியவர்களுக்கான டிப்தீரியா (Td) தடுப்பூசியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

முக்கிய அம்சங்கள்:

  • தற்சார்பு இந்தியா: இந்த தடுப்பூசி 'தற்சார்பு பாரதம்' (Atmanirbhar Bharat) இலக்கை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
  • பழைய தடுப்பூசிக்கு மாற்றாக: உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைப்படி, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 'டிடி' (TT - Tetanus Toxoid) தடுப்பூசிக்கு மாற்றாக, இப்போது டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்த புதிய 'டிடி' (Td) தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • விநியோகம்: இந்த தடுப்பூசி நாட்டின் 'உலகளாவிய நோய் தடுப்பு திட்டத்தின்' (Universal Immunization Programme) கீழ் விநியோகிக்கப்படும். வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 55 லட்சம் டோஸ்களை வழங்க மத்திய ஆராய்ச்சி நிலையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • முக்கியத்துவம்: முந்தைய காலங்களில் தடுப்பூசி தயாரிக்கப் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்தியா குறுகிய காலத்தில் தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்.
  • பயனாளிகள்: கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த தடுப்பூசி மூலம் நோய்த்தொற்று பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' (Pax Silica) கூட்டமைப்பில் இந்தியா முறைப்படி இணைந்தது :

  • புதுடெல்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா ஏஐ (AI) தாக்க உச்சி மாநாட்டில்', அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' கூட்டமைப்பில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
முக்கியத் தகவல்கள்:

  • ஒப்பந்தத்தின் நோக்கம்: செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் அதற்குத் தேவையான முக்கிய தாதுக்களின் (Critical Minerals) விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதே இந்தக் கூட்டணியின் முதன்மை நோக்கமாகும்.
  • கையெழுத்திட்டவர்கள்: இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் மற்றும் அமெரிக்க இணை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • முக்கியத்துவம்: சீனாவிற்கு மாற்றாக ஒரு வலுவான தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியை உருவாக்கவும், பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 'செமிகண்டக்டர் மிஷன்' மற்றும் 'AI மிஷன்' திட்டங்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும்.
  • உறுப்பு நாடுகள்: இக்கூட்டணியில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளன.
  • அமைச்சர் பேச்சு: "நாம் வெறும் உச்சி மாநாட்டை நடத்தவில்லை, வருங்காலத்தை கட்டமைக்கிறோம்" என்று குறிப்பிட்ட அஸ்வினி வைஷ்ணவ், இதன் மூலம் இந்திய இளைஞர்களுக்கு செமிகண்டக்டர் துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:

  • உச்சநீதிமன்றத் தீர்ப்பு: பிப்ரவரி 20, 2026 அன்று, அமெரிக்க உச்சநீதிமன்றம் (6-3 என்ற கணக்கில்) அதிபர் ட்ரம்பின் முந்தைய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் அவசரகால அதிகாரத்தைப் பயன்படுத்தி விதிக்கப்பட்ட வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது.
  • நீதிமன்றத் தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே, ட்ரம்ப் முதலில் 10% வரியை விதிப்பதாகக் கூறினார். இருப்பினும், பிப்ரவரி 21, 2026 அன்று, அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்துவதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முக்கியத் தகவல்கள்:

  • வரி உயர்வு: அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10% அடிப்படைச் சுங்கவரியை, உடனடியாக 15 சதவீதமாக உயர்த்தி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
  • நீதிமன்றத் தீர்ப்பு: அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி (IEEPA சட்டம்) ட்ரம்ப் விதித்திருந்த வரிகள் செல்லாது என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை "அபத்தமானது" மற்றும் "அமெரிக்காவிற்கு எதிரானது" என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
  • புதிய சட்டப் பிரிவு: உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தனது 'பேக்அப் பிளான்' படி 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் (Section 122) கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த 15% வரி உயர்வை அவர் அமல்படுத்தியுள்ளார்.
  • காலக்கெடு: இந்தப் புதிய வரி விதிப்பு தற்காலிகமானது மற்றும் 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு மேல் நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை.
  • இந்தியா மீதான தாக்கம்: * இந்த வரி உயர்வால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் (IT), மருந்துகள் (Pharma) மற்றும் ஜவுளித் துறைகள் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
  • இருப்பினும், இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 18% வரி ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது, இந்த 15% உலகளாவிய வரி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிகமாகச் சற்றுச் சாதகமாக இருக்கலாம் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
  • ட்ரம்ப்பின் கருத்து: பல நாடுகளும் பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வருவதாகவும், இந்த வரி உயர்வு அமெரிக்கப் பொருளாதாரத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


LIST OF IMPORTANT DAYS FEBRUARY 2026 IN TAMIL :


பிப்ரவரி 20, 2026

உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice): 
  • உலக சமூக நீதி தினம் (World Day of Social Justice) ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 20 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது
  • சமூகத்தில் வறுமை, வேலையின்மை மற்றும் பாகுபாடுகளை ஒழித்து, அனைவருக்கும் சமத்துவத்தை நிலைநாட்ட ஐ.நா. சபையால் இந்த நாள் உலக சமூக நீதி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2007-ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. 2009-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் அதிகாரப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • 2026-ஆம் ஆண்டு உலக சமூக நீதி தினத்தின் மையக்கருத்து, "சமூக மேம்பாடு மற்றும் சமூக நீதிக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு" (Renewed Commitment to Social Development and Social Justice) என்பதாகும்.

பிப்ரவரி 21, 2026:

சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day): 
  • உலகம் முழுவதும் மொழியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், பன்மொழி கல்வியை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 
  • வங்க மொழி இயக்கம் (1952): 1952-ல் அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) உருது மொழிக்கு பதிலாகத் தங்கள் தாய்மொழியான வங்க மொழியை (Bangla) அங்கீகரிக்கக் கோரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் நினைவாக இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • யுனெஸ்கோ அங்கீகாரம்: இந்த தினத்தை 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அறிவித்தது. 2000-ம் ஆண்டு முதல் இது உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
  • மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல, அது நம் பண்பாட்டின் அடையாளம். உலகெங்கிலும் உள்ள தாய்மொழிகளைப் பாதுகாக்கவும், பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 
  • 2026-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "பன்மொழி கல்வியில் இளைஞர்களின் குரல்" (Youth Voices on Multilingual Education) என்பதாகும். இது மொழியியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதிலும், உள்ளடக்கிய கல்விச் சூழலை உருவாக்குவதிலும் இளைஞர்களின் பங்களிப்பை வலியுறுத்துகிறது

பிப்ரவரி 22, 2026 :

உலக சிந்தனை தினம் (World Thinking Day): 
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 22 அன்று உலக சிந்தனை தினம் (World Thinking Day) கொண்டாடப்படுகிறது. 
  • தேர்வு செய்யப்பட்ட காரணம்: சாரணர் இயக்கத்தின் நிறுவனர் லார்ட் பேடன் பவல் மற்றும் அவரது மனைவி லேடி ஓலவ் பேடன் பவல் ஆகிய இருவரின் பிறந்தநாளும் பிப்ரவரி 22 என்பதால் இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • வரலாறு: இந்தத் தினம் முதன்முதலில் 1926-ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 4-வது சர்வதேச மாநாட்டில் உருவானது.
  • 2026-ஆம் ஆண்டின் மையக்கருத்து (Theme): "எமது நட்பு" (Our Friendship) என்பது 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும். இது உலக சிந்தனை தினத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டமாகும்.
  • உலகெங்கிலும் உள்ள சாரணர் மற்றும் சாரணியர் (Scouts and Guides) அமைப்புகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய பிரச்சினைகள் குறித்து சிந்திக்கவும், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.



TNPSC Current Affairs Quiz: February - (20.02.2026 TO 22.02.2026) :

  • படித்தது போதும்! உங்கள் அறிவை சோதிக்க இந்த வினாடி வினாவை முயற்சிக்கவும்: 
  • Test your knowledge: TNPSC CURRENT AFFAIRS QUIZ: February (20.02.2026 TO 22.02.2026)   (TAMIL & ENGLISH) 


DOWNLOAD PDF : TNPSC CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026 :

TNPSC Current Affairs in Tamil: February 2026 (1st WEEK ) | PDF Download & Key Notes 

மேலும் படிக்க:  DAILY CURRENT AFFAIRS IN TAMIL FEBRUARY 2026





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!


Download Daily TNPSC current affairs PDF in Tamil for February 20 to 22, 2026 for TNPSC Group 1, 2, & 4 exams.

tnpsc-current-affairs-in-tamil-february-20-22-2026 


Post a Comment

0Comments

Post a Comment (0)