Welcome to our blog post on TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026-PDF, specifically tailored for competitive exams. This post is designed to help aspirants of various competitive exams like Banking, SSC, Railways, Insurance, UPSC, TNPSC and State Exams stay updated with the latest happenings around the world.
JUNE 2026 (WEEK 3) CURRENT AFFAIRS IN TAMIL: TNPSC SHORT NOTES & ONE-LINERS
(ஜூன் 2026 3-வது வார நடப்பு நிகழ்வுகள்: போட்டித் தேர்வுக்கான முக்கியக் குறிப்புகள்)
‘கீர்த்தி சக்ரா’ விருது:
- வீர தீரச் செயலுக்காக இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரத்தை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். தமிழக அரசு சார்பில் அவருக்கு ரூ.48 லட்சத்துக்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.
- தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம், இந்திய ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 2024 டிச.19-ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற அதிரடி தாக்குதலின்போது, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இவரது முகம், தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும், தனது உயிருக்கு ஏற்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல், கடமை உணர்வுடன் தொடர்ந்து களத்தில் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தினார்.
- அவரது வீர தீரச் செயலைப் பாராட்டி, இந்தியாவின் 2-வது உயரிய அமைதிக்கால வீர விருதான ‘கீர்த்தி சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஜூன் 8-ம் தேதி நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
ஆல்ப்ஸ் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டனில் ரித்விக் சாம்பியன்:
- பிரான்ஸ் நாட்டின் வாலன்ஸ் நகரில் வாலன்ஸ் ஆல்ப்ஸ் இன்டர்நேஷனல் சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டி நடைபெற்றது.
- இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி 17-21, 23-21, 21-16 என்ற செட் கணக்கில் குரோஷியாவைச் சேர்ந்த அரியா தினாட்டாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தங்கப் பதக்கம் வென்ற ஹட்சன் பாட்மிண்டன் மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.
கேரளாவில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
- கேரளத்தில் ஜூன் 15 முதல் மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திட்டம் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது.
- இந்நிலையில், இன்று (15-06-26) கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தை அம்மாநில முதல்வர் வி.டி.சதீசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- தற்போதைக்கு அரசு நகரப் பேருந்துகளில் மட்டும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், வருங்காலங்களில் இந்த திட்டம் விரைவு பேருந்து உள்ளிட்ட மற்ற பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று முன்னதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்த திட்டத்தின் மூலமாகப் பெண்கள் மற்றும் திருநங்கைகள் அரசு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல், மே காலகட்டத்தில் நாட்டின் ஏற்றுமதி 14.66% வளர்ச்சி
- நாட்டின் ஏற்றுமதி 2026-27-ம் நிதியாண்டின் ஏப்ரல், மே காலகட்டத்தில் 14.66% அதிகரித்துள்ளது.
- 2025-26 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 141.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஒட்டுமொத்த ஏற்றுமதியுடன் (சரக்குகள், சேவைகள்) ஒப்பிடுகையில் 2026-27 ஏப்ரல்-மே காலகட்டத்தில் 162.69 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது 14.66% வளர்ச்சி என மதிப்பிடப்பட்டுள்ளது.
- ஏப்ரல்-மே 2025-26 காலகட்டத்தில் 76.59 பில்லியன் டாலராக இருந்த சரக்கு ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு, ஏப்ரல்-மே 2026-27 காலகட்டத்தில் 88.91 பில்லியன் டாலராக உயர்ந்து, 16.09% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
- மே 2026-ல் சரக்கு ஏற்றுமதி வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக, பொறியியல் பொருட்கள், கரிம - கனிம வேதிப்பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ரத்தினக்கற்கள், ஆபரணங்கள் ஆகியவை இருந்தன.
- பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மே 2025-ல் 9.89 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 12.31 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.
- மே 2025-ல் 4.57 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து மே 2026-ல் 5.10 பில்லியன் அமெரிக்க டாலராக, மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 11.62% அதிகரித்துள்ளது.
உலகக்கோப்பை வில்வித்தை போட்டி 2026
- இந்தியாவின் நட்சத்திர வீரரான 24 வயது தீரஜ் பொம்மதேவரா ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
- உலகக்கோப்பை வில்வித்தையின் ஒற்றையர் பிரிவில் அவர் தங்கப்பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தென் கொரியாவின் ஒலிம்பிக் பதக்க வீரரான லீ வூ சீக்கை தீரஜ் எதிர்கொண்டார்.
- ஆட்டம் தொடங்கியதில் இருந்தே அம்பு எய்வதில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய அவர் 7-3 என்ற கணக்கில் கொரிய வீரரை முழுமையாக வீழ்த்தினார்.
- இந்த இமாலய வெற்றிக்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அவர் இந்தியாவின் மற்றொரு இளம் வீராங்கனையான கும் கும் மொஹோடுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026:
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026-PDF (01 TO 04 JUNE 2026)
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026-PDF (05 TO 09 JUNE 2026)
TNPSC தேர்வர்களுக்கான ஜூன் மாத 2026 மிக முக்கிய நடப்பு நிகழ்வுகள்:
- இந்தியப் புத்தொழில் மாநாடு 2026: பாரத் இன்னோவேட்ஸ் 2026 (Bharat Innovates)
- புதிய ராணுவத் தலைமைத் தளபதி: லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத்
- DRDO-வின் ஏவுகணைச் சோதனை வெற்றி : மிஷன் சுதர்சன் சக்ரா
- குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் 2026: முக்கியக் குறிப்புகள்
- நிதி ஆயோக் 11-வது கவுன்சில் கூட்டம்: முக்கியக் குறிப்புகள்
- இந்தியாவில் தயாரான சி-295 (C-295) விமான சோதனை வெற்றி:
- சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை -புதிய திட்டம் (Singappen Special Task Force)
- பிரிக்ஸ் வேளாண் அமைச்சர்கள் மாநாடு 2026: முக்கியக் குறிப்புகள்
- இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030 முக்கியக் குறிப்புகள்
- உலகளாவிய காற்று நாள் (Global Wind Day 2026)
- தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை 2026
- இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிகக் கட்டுப்பாடு / தடை
- பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது
மேலும் படிக்க:
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!

.jpg)
