| தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் |
இருமொழிக் கொள்கை, சமூக நீதி சர்வே, ₹75,000 விவசாயக் கடன் தள்ளுபடி: தமிழக ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தின் 17-வது சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர். வி. அர்லேகர் அவர்களின் உரையுடன் முறைப்படி தொடங்கியது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இந்த முதல் கூட்டத்தொடரில், மாநிலத்தின் நிதி மேலாண்மை, கல்வி, சமூக நீதி மற்றும் விவசாய நலன் சார்ந்த பல முக்கிய கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் பாரபட்சத்தை எதிர்க்க சட்டவல்லுநர் குழு!
- ஒன்றிய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நியாயமான நிதிப்பகிர்வைப் பெற புதிய அரசு சட்டவல்லுநர் குழு ஒன்றை அமைக்கவுள்ளது. தமிழகத்திற்கான ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறைகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியிடப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை ₹10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் உரையின் முதன்மைப் பிரகடனங்கள்:
- மாநில சுயாட்சி மற்றும் நிதிப் பகிர்வு: ஒன்றிய அரசின் பாரபட்சமான அணுகுமுறையை எதிர்கொள்ளவும், தமிழகத்துக்கான நிதிப் பகிர்வை முறையாகப் பெறவும் சட்டவல்லுநர் குழு அமைக்கப்படும். தமிழகத்திற்கு வரவேண்டிய வருவாய் ஆவணப்படுத்தப்பட்டு, பாரபட்சமான அணுகுமுறை குறித்த அறிக்கை வெளியிடப்படும்.
- கடன் மற்றும் நிதி நிலைமை: கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் இரு மடங்காக உயர்ந்து ₹10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இருப்பினும், அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
- கல்விக் கொள்கை மற்றும் மொழி: தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே (தமிழ் மற்றும் ஆங்கிலம்) தொடர்ந்து பின்பற்றப்படும். புதிய கல்விக் கொள்கை (NEP) கடுமையாக எதிர்க்கப்படும். மேலும், கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து (Concurrent List) மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு (State List) மாற்ற வலியுறுத்தப்படும்.
- சமூக நீதி மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வேண்டும். அது முடிந்தவுடன், தமிழக அரசு விரிவான 'சமூக நீதி சர்வே' (Social Justice Survey) நடத்தும். 69% இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும்.
- சட்ட ஒழுங்கு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு: போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 'சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை' (Special Drug Prevention Force) அமைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுக்காப்பான சூழலை உருவாக்குவதே இந்த அரசின் நோக்கம் ஆகும். தவறு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- வழிபாட்டு தலங்கள், பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகளை இந்த அரசு மூடியுள்ளது.
- விவசாய நலன்: சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவுக் வங்கிகளில் பெற்ற ₹75,000 வரையிலான கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- நீர்வளப் பாதுகாப்பு: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப் போராட்டங்கள் தொடரும். முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாகக் கேரளா அணை கட்டுவது தடுத்து நிறுத்தப்படும்.
- கனிமவளத்துறையில் நடக்கும் ஊழல் மூலம், அந்த துறையின் வருவாய் குறைந்துள்ளது. இயற்கை வளக் கொள்ளையை தடுத்து அரசின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- லஞ்ச, ஊழல் இல்லாத நேர்மையான நிர்வாகத்தை கொண்டு வருவதே இந்த அரசின் நோக்கம்.
- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக மாற்ற அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026-மாதிரி வினாக்கள்:
1: தமிழக சட்டப்பேரவையில் வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையின்படி, தமிழகத்துக்கான நிதிப்பகிர்வினைப் பெற எந்தக் குழு அமைக்கப்படவுள்ளது?
- பதில்: சட்டவல்லுநர் குழு
2: ஆளுநர் உரையின்படி, சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அதிகபட்சமாக எவ்வளவு தொகை வரையிலான கடன் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது?
- பதில்: ₹75,000
3: மத்திய அரசின் கணக்கெடுப்பு முடிந்தவுடன், சமூக நீதியை நிலைநாட்டும் பொருட்டு தமிழக அரசு நடத்தவிருக்கும் ஆய்வின் பெயர் என்ன?
- பதில்: சமூக நீதி சர்வே
4:தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்க மாவட்ட அளவில் உருவாக்கப்பட உள்ள புதிய படை எது?
- பதில்: சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை
Tags / Keywords : Tamil Nadu Governor address 2026, TN Assembly session key highlights, Union government financial devolution TN, Social Justice Survey Tamil Nadu, Two language policy Tamil Nadu assembly, Agriculture loan waiver Tamil Nadu 75000, Special Drug Prevention Force TN, TNPSC Current Affairs 2026, Tamil Nadu Polity TNPSC Notes, தமிழக ஆளுநர் உரை முக்கிய அம்சங்கள், சட்டமன்ற கூட்டத்தொடர் 2026
TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026:
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026-PDF (01 TO 04 JUNE 2026)
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026-PDF (05 TO 09 JUNE 2026)
- TNPSC CURRENT AFFAIRS IN TAMIL JUNE 2026 : TNPSC SHORT NOTES & ONE-LINERS-(ஜூன் 2026 3-வது வார நடப்பு நிகழ்வுகள்
TNPSC தேர்வர்களுக்கான ஜூன் மாத 2026 மிக முக்கிய நடப்பு நிகழ்வுகள்:
மேலும் படிக்க:
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSC PAYILAGAM and happy learning!

