CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (06.05.2025-07.05.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MAY 2025 (06.05.2025-07.05.2025)


ஆபரேஷன் சிந்தூர் : 

  • பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
  • ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.


உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடு (GLEX) 2025 :

  • உலகளாவிய விண்வெளி ஆய்வுக்கான மாநாடு (GLEX) புதுடெல்லியில் 07.05.2025 தொடங்கியது. 
  • இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஞ்ஞானிகள், விண்வெளி வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விண்வெளி ஆராய்ச்சியில் நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, தொழில்நுட்பம் மற்றும் கொள்கைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, சவால்கள், தீர்வுகள், கற்றுக்கொண்ட பாடங்கள், முன்னோக்கிச் செல்லும் பாதைகள் குறித்து ஊக்குவிக்கும் நோக்கில் இந்த 3 நாள் மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மாநாட்டில் காணொலி காட்சி வாயிலாக தொடக்க உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி : நமது முதல் மனித விண்வெளி-பயணப் பணியான 'ககன்யான்', நமது நாட்டின் எதிர்பார்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது. வரும் வாரங்களில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான இஸ்ரோ-நாசா கூட்டுப் பயணத்தின் ஒரு பகுதியாக ஒரு இந்திய விண்வெளி வீரர் விண்வெளிக்குச் செல்வார். 2035-ம் ஆண்டுக்குள், பாரதிய அந்தரிக்ஷா நிலையமானது ஆராய்ச்சி மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றில் புதிய எல்லைகளைத் திறக்கும். 2040-ம் ஆண்டுக்குள், ஒரு இந்தியரின் கால்தடங்கள் சந்திரனில் இருக்கும். செவ்வாய் மற்றும் வெள்ளியும் நமது ஆய்வுப் பணிகளின் வரிசையில் உள்ளன.


ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் :

  • ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் வரும் 28-ம் தேதி இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. 
  • ரஷ்ய கடற்படையில் அட்மிரல் கிரிகோரோவிச் போர்க்கப்பல்கள் பயன்பாட்டில் உள்ளன. இதே ரகத்தை சேர்ந்த 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்தது. இதுதொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு போர்க்கப்பல்களின் விலை ரூ.8,000 கோடி ஆகும்.
  • இதன்படி கடந்த ஆண்டு டிசம்பரில் முதல் போர்க்கப்பலை இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைத்தது. இந்த போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
  • இதைத் தொடர்ந்து இரண்டாவது போர்க்கப்பலை வரும் 28-05-2025ம் தேதி இந்தியாவிடம் ரஷ்யா ஒப்படைக்க உள்ளது. புதிய போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் தமால் என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.
  • கர்நாடகாவின் கர்வார் கடற்படைத் தளத்தை மையமாகக் ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் செயல்படும். இது 3,900 டன் எடை, 125 மீட்டர் நீளம், 15.2 மீட்டர் அகலம் கொண்டதாகும். இதை ரேடாரில் கண்டுபிடிப்பது கடினம்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்:

  • இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. 
  • இதனை பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் பிஸ்டார்மரும் ஒருமித்து வரவேற்றனர். 
  • இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வளர்க்கும்; புதுமை கண்டுபிடிப்பு மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிப்புக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் புதிய அதிபரானார் பிரெட்ரிக் மெர்ஸ்:

  • ஐரோப்பாவின் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியில் பிப்ரவரியில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் பார்லிமென்டில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அதன்படி பார்லியில் வாக்கெடுப்பு 07.05.2025 நடத்தப்பட்டது.
  • ரகசிய வாக்கெடுப்பில் 630 வாக்குகளில் அவருக்கு 316 என்ற எண்ணிக்கையில் அவருக்கு பெரும்பான்மை தேவைப்பட்டது. முதல் சுற்றில் அவரால் 310 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
  • அதனை தொடர்ந்து பிற்பகல் நடந்த இரண்டாவது வாக்கெடுப்பில் மெர்ஸ் 325 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அவரது அதிபர் பதவி உறுதி செய்யப்பட்டது.
  • ஜெர்மனி அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. ஃபிரெடெரிக் மெர்ஸுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


திரவியரத்னாகர நிகண்டு, திரவியநாமகாரா நிகண்டு:

  • பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியாவின் வளமான மரபைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக் குழுமம், இரண்டு அரிய மற்றும் குறிப்பிடத்தக்க ஆயுர்வேத கையெழுத்துப் பிரதிகளான  திரவியரத்னாகர நிகண்டு, திரவியநாமகாரா நிகண்டு(Dravyaratnākara Nighaṇṭu and Dravyanamākara Nighaṇṭu) ஆகியவற்றை உயிர்ப்பித்துள்ளது.
  • இவை மும்பையில் உள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டன. 
  • இந்த கையெழுத்துப் பிரதிகளை புகழ்பெற்ற கையெழுத்துப் பிரதி வல்லுநரும் மூத்த ஆயுர்வேத நிபுணருமான மும்பையைச் சேர்ந்த டாக்டர் சதானந்த் டி. காமத் திருத்தி மொழிபெயர்த்துள்ளார்.

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (இம்டெக்ஸ் ஆசியா) 2025:

  • சிங்கப்பூரில் சாங்கி கண்காட்சி மையத்தில் நடைபெறும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சி (இம்டெக்ஸ் ஆசியா) 2025-ல்  பங்கேற்க இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் கில்டன் சிங்கப்பூர் வந்தடைந்தது.
  • இந்தியக் கடற்படையின் செயல்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. இது இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான கடல்சார் ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகிறது.
  • சிங்கப்பூரில் பயணம் மேற்கொள்ளும் காலத்தில், கப்பல் குழுவினர் தொடர்ச்சியான இருதரப்பு, பன்முக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். இதில் சிங்கப்பூர் கடற்படையும் இம்டெக்ஸ் ஆசியா கண்காட்சியில் பங்கேற்கும் பிற நாட்டு கடற்படைகளும், தொழில்முறை பரிமாற்றங்களில் பங்கேற்கும்.
  • இந்த செயல்பாடுகள் கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயல்பாட்டுத்தன்மையை மேம்படுத்துதல், கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர புரிதலை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளன.


ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல்:

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஐஐடி திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), ஐஐடி பாலக்காடு (கேரளா), ஐஐடி பிலாய் (சத்தீஸ்கர்), ஐஐடி ஜம்மு (ஜம்மு – காஷ்மீர்), ஐஐடி தார்வாட் (கர்நாடகா) ஆகிய புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதற்கான மொத்த செலவு 2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு 11,828.79 கோடி ரூபாய் ஆகும்.
  • இந்த ஐஐடிகளில் 130 ஆசிரியப் பணியிடங்களை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

  • தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இணைப்பை வலுப்படுத்த ஐந்து புதிய அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.
  • புதிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், இந்த ஐந்து ஐஐடிகளிலும் தற்போதைய மாணவர் எண்ணிக்கையான 7,111 என்பது 13,687 ஆக அதிகரிக்கும். அதாவது 6,576 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN MAY 2025 IN TAMIL : (06.05.2025-07.05.2025)

உலக ஆஸ்துமா தினம் (World Asthma Day)  2025 :

  • (ஆண்டுதோறும் மே மாதத்தின் முதலாவது செவ்வாய்க்கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது)  
  • இந்த ஆண்டு 2025 உலக ஆஸ்துமா தினம் மே 6 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அனுசரிக்கப்படுகிறது
  • இந்த ஆண்டின் கருப்பொருள்: Make Inhaled Treatments Accessible for ALL”


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)