இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது:
- மாதம்தோறும் பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களுடன் வானொலி வழியாக உரையாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 123-வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை கண் நோயான டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நமது சுகாதார ஊழியர்களின் வெற்றி. 'ஜல் ஜீவன்' மிஷன் இதற்கு பங்களித்துள்ளது.
- ஜெனீவாவில் நடந்த 78-வது உலக சுகாதார மாநாட்டில், உலக சுகாதார அமைப்பால் (WHO) பொது சுகாதாரப் பிரச்சினையாக டிராக்கோமாவை நீக்குவதற்கான சான்றிதழ் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில், இந்திய அரசு டிராக்கோமாவை பொது சுகாதாரப் பிரச்சினையாக நீக்கியதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
- தென்கிழக்கு ஆசியாவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது நாடாகவும் இந்தியா உருவாகியுள்ளது. டிராக்கோமாவை ஒழிப்பதற்காக பார்வையிழப்பு மற்றும் பார்வைக் குறைபாட்டை (NPCBVI) கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ் நமது அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என்றார்.
- டிராக்கோமா என்பது கிளமிடியா டிராக்கோமாடிஸால் ஏற்படும் ஒரு பாக்டீரியா கண் தொற்று ஆகும். இது மிகவும் தொற்றக்கூடியது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் கண்கள், மூக்கு அல்லது தொண்டையுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீளமுடியாத குருட்டுத்தன்மைக்கு இந்த நோய் ஒரு காரணமாக அறியப்படுகிறது.
டைம்ஸ் உலக தரவரிசை 2025 மற்றும் க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை 2026:
- உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் புகழ்பெற்ற டைம்ஸ் (TIMES) உயர் கல்வி (THE) தரவரிசை, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) அடிப்படையில், பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து, அதன் 2025 தரவரிசைகளை (World Impact Rankings 2025 & Qs World University Rankings 2026)சமீபத்தில் வெளியிட்டது.
- இதில், இந்தியாவிலிருந்து 135 பல்கலைக்கழகங்ககள்; உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2526 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன. புதுவை பல்கலைக்கழகம் தொடக்கத்திலிருந்தே இந்த தரவரிசை கட்டமைப்பில் தீவிரமாக ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க உலகளாவிய செல்வாக்கை அடைந்துள்ளது.
- புதுவைப் பல்கலைக்கழகம் சமீபத்திய தரவரிசையில் கடந்த ஆண்டின் 64.5 - 69.8 மதிப்பெண் வரம்பை விட முன்னேறி, இந்த ஆண்டு 65.6 - 70.2 மதிப்பெண் அளவில் 601-800 தரவரிசை வரம்பில் உயர்வடைந்துள்ளது. பல்கலைக்கழகம் முக்கியமான தொலைநோக்குச் செயல்களில் (SDGs) குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக, நிலத்தில் உயிர்கள் பாதுகாப்பு (Life on Land) குறிக்கோளில் 101-200, வறுமையின்மை (No Poverty) குறிக்கோளில் 301-400 மற்றும் பெண்கள் சமத்துவம் (Gender Equality) குறிக்கோளில் 401-600 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
- புதுவைப் பல்கலைக்கழகம், க்யூஎஸ் (QS) உலகப் பல்கலைக்கழக தரவரிசை 2026-ல் உலகளவில் 1201-1400க்கு இடையில் இடம் பெற்றுள்ளது. இதில் 106 நாடுகளைச் சேர்ந்த 8467 நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவிலிருந்து க்யூஎஸ் உலக தரவரிசை 2026-ல் இடம் பெற்ற 54 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் புதுவை பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தப்படாத குழந்தைகள் விகிதம் :
- நோய்த் தடுப்பிலும் ஆரோக்கிய பராமரிப்பிலும் தடுப்பூசி மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாக உள்ளது. நோய்த்தடுப்புக்கு இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அதன் அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டம் (UIP) மூலம் தெளிவாகிறது.
- இது ஆண்டுதோறும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் 2.6 கோடி குழந்தைகளுக்கும் (1 வயது வரை உள்ள குழந்தைகள்) இலவச தடுப்பூசி சேவைகளை வழங்குகிறது. நாட்டின் சுகாதாரப் பணியாளர்கள் 1.3 கோடிக்கும் மேற்பட்ட நோய்த்தடுப்பு முகாம்களை நடத்துகிறார்கள்.
- நாடு முழுவதும் தொடர்ச்சியான, முயற்சிகள், தடுப்பூசி இயக்கங்கள், இந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியதன் விளைவாக, மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளின் சதவீதம் வெகுவாகக் குறைந்துள்ளது. 2023-ல் 0.11 சதவீதத்திலிருந்து 2024-ல் 0.06 சதவீதமாக இது குறைந்துள்ளது.
தடுப்பூசிகள் செலுத்துவதை அதிகரிக்க எடுக்கப்பட்ட சில முக்கிய நடவடிக்கைகள்:
- பூஜ்ஜிய டோஸ் அமலாக்கத் திட்டம் 2024(Zero Dose Implementation Plan 2024) :தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் அதிகம் உள்ள 11 மாநிலங்களில் உள்ள 143 மாவட்டங்களில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- இந்திரதனுஷ் திட்டம் : மாநில அரசுகளுடன் இணைந்து இத்திட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 5.46 கோடி குழந்தைகளுக்கும், முன்னர் தடுப்பூசி போடப்படாத அல்லது முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்ட 1.32 கோடி கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
- பல்ஸ் போலியோ இயக்கங்கள் (Pulse Polio Campaigns:): இந்தியா 2014 முதல் போலியோ இல்லாத நிலையைப் பராமரித்து வருகிறது.
- கிராம சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து(Village Health and Nutrition Days (VHNDs)): சமூக மட்டத்தில் நோய்த்தடுப்பு மற்றும் வெளிநடவடிக்கைகளுக்காக தொடர்ந்து ஒழுங்கமைக்கப்படுகிறது.
- பல அடுக்கு பணிக்குழுக்கள்(Multi-tiered Task Forces): மாநில, மாவட்டம், மற்றும் பகுதி அளவிலான பணிக்குழுக்கள் ஒருங்கிணைந்த தடுப்பூசிப் பணிகளை இந்தக் குழுக்கள் உறுதி செய்கின்றன.
- வழக்கமான தகவல், கல்வி, மக்கள் தொடர்பு இயக்கங்கள்(Regular IEC (Information, Education, Communication) Campaigns): விழிப்புணர்வை அதிகரிக்கவும் தடுப்பூசிகள் மீதான தயக்கத்தை ஒழிக்கவும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் உதவுகின்றன.
பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம்:
- பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
- பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிகா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். இதற்கான பயணத்தில் ஜூலை 2 முதல் 9 வரை பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
- பிரேசில் நாட்டில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு செல்லும் வழியில் ஜூலை 2 முதல் 5 வரை கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
- திரும்பும் வழியில் அவர் நமீபியா செல்கிறார். கானா, டிரினிடாட் & டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
ரா உளவு அமைப்பின் புதிய தலைவர்:
- இந்தியாவின் “ரா” எனப்படும் உளவு அமைப்பின் தலைவராக பதவி வகித்து வரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
- இந்நிலையில், ரா உளவு அமைப்பின் புதிய தலைவராக பராக் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஜூலை 1ஆம் தேதி RAW ஏஜென்சி தலைவராக பதவியேற்கும் பராக் ஜெயின் 2 ஆண்டுகளுக்கு அந்த பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- 1989 ஆண்டு IPS அதிகாரியாக பணியில் சேர்ந்த பராக் ஜெயின், ரா உளவு அமைப்பில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா எரிசக்தி தொகுப்பு (IES-India Energy Stack):
- இந்திய எரிசக்தித் துறைக்கு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான, டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியாக இந்தியா எரிசக்தி தொகுப்பு (IES) என்ற கட்டமைப்பை உருவாக்க ஒரு பணிக்குழுவை அமைப்பதாக மின்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் செல்கிறது. நிகர பூஜ்ஜிய உமிழ்வு உறுதிமொழிகளை நோக்கி இந்தியா முன்னேறும்போது, மின் துறை பெரிய வாய்ப்புகளையும் சிக்கலான சவால்களையும் எதிர்கொள்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், எரிசக்தி சந்தைகளில் நுகர்வோர் பங்கேற்பு ஆகியவற்றில் விரைவான வளர்ச்சி இந்தத் துறையை மாற்றி வருகிறது. ஆனால் துண்டு துண்டான அமைப்புகள் இருப்பதும், தடையற்ற டிஜிட்டல் ஒருங்கிணைப்பு இல்லாததும் முக்கிய தடைகளாகவே உள்ளன.
- இவற்றை நிவர்த்தி செய்வதற்காக, மின்சார அமைச்சகம், மின் மதிப்புச் சங்கிலி முழுவதையும் நிர்வகிக்க, ஒரு தரப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான தளமாக, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI) எனப்படும் இந்தியா எனர்ஜி ஸ்டேக் (IES -ஐஇஎஸ்) என்ற இந்திய எரிசக்தித் தொகுப்பு மூலம் இத்துறையின் டிஜிட்டல் அடித்தளத்தை வலுப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா எனர்ஜி ஸ்டேக் மூலமான நன்மைகள்:
- நுகர்வோர், சொத்துக்கள் மற்றும் பரிவர்த்தனைகளுக்குத் தனித்துவமான அடையாளங்கள்
- உடனடி, ஒப்புதல் அடிப்படையிலான தரவு பகிர்வு
- தடையற்ற ஒருங்கிணைப்புக்கான திறந்த நடைமுறை
- நுகர்வோர் அதிகாரமளித்தல், சந்தை அணுகல் மற்றும் புதுமைக்கான அம்சங்கள்
ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு:
- அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்டு சயின்சஸ்' என்று அழைக்கப்படும் ஆஸ்கர் அகாடமி இந்த விருதை வழங்குகிறது.
- ஆண்டுதோறும் விருதுக்காக தேர்வு செய்யப்படும் குழுவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பதை ஆஸ்கர் அகாடமி வழக்கமாக வைத்துஉள்ளது. அந்த வகையில், அடுத்தாண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்ய புதிய உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஆஸ்கர் அகாதெமி குழு இந்தமுறை ஆஸ்கர் விருது தேர்வில் வாக்களிக்க நடிகர் கமல் ஹாசன் உள்பட ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா, பாயல் கபாடியா, அமெரிக்க நடிகை அரியானா கிராண்டி என 534 பேருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
4 ஆண்டுகளில் மட்டும் ஊரக வளர்ச்சி துறையில் ரூ.19,000 கோடி திட்டங்கள்: தமிழக அரசு :
- ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- கனவு இல்லம் திட்டம்: குடிசையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு நிதியாண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு 72 ஆயிரத்து 81 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025:
- உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற உஸ்செஸ் மாஸ்டர்ஸ் கோப்பை 2025-ல், தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்த வெற்றியின் மூலம் 2778.3 புள்ளிகளுடன் உலக செஸ் நேரடி தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறினார். ஏற்கெனவே இந்தியாவைச் சேர்ந்த உலக சாம்பியன் டி. குகேஷ் 2776.6 புள்ளிகளுடன் தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ளார்.
- தற்போது பிரக்ஞானந்தா 4வது இடத்திற்கு முன்னேறியதன் மூலம் வரலாற்றில் முதன்முறையாக டாப் 5 இடத்திற்குள் இரண்டு தமிழர்கள் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
முதலாவது ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை 2025:
- இந்த போட்டி கென்யாவின் நைரோபி நகரில் கடந்த 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியா, கென்யா, இலங்கை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் அணிகள் இதில் பங்கேற்றன.
- இறுதிப் போட்டியில் இந்தியாவும், கென்யாவும் மோதின. இதில் இந்திய அணி 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் கென்ய அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
- இந்திய அணியில் தமிழகத்தின் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏ.ஒய்.அக்ஷயா நந்தினி இடம்பெற்றிருந்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 2025:
- கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் (ஜூன் 30, 2025) தொடங்கவுள்ளது. ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.35 கோடி பரிசு வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
- ஆண்டுதோறும் 4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனும், 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியாக பிரெஞ்சு ஓபனும், 3-வது போட்டியாக விம்பிள்டனும், நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியாக அமெரிக்க ஓபனும் நடைபெறும். அதன்படி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இன்று முதல் (ஜூன் 30) ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடைபெறவுள்ளது.
புள்ளியியல் தினம் (Statistics Day)2025:
- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (ஜூன் 29, 2025) அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 19-வது புள்ளியியல் தினத்தைக் கொண்டாடுகிறது.
- புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளாதார திட்டமிடல் துறையில் முன்னோடியான பேராசிரியர் பிரசாந்த சந்திர மஹலனோபிஸின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் (ஜூன் 29) ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
- சமூக-பொருளாதார திட்டமிடல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான கொள்கை வகுப்பில் புள்ளிவிவரங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் ஒரு கருப்பொருளுடன் புள்ளியியல் தினம் கொண்டாடப்படுகிறது.
- 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "தேசிய மாதிரி ஆய்வின் 75 ஆண்டுகள்"(75 Years of National Sample Survey) என்பதாகும். இந்தியாவில் ஆதார அடிப்படையிலான முடிவெடுத்தல் மற்றும் நிர்வாகத்துக்கு உதவும் நம்பகமான மற்றும் சரியான தரவுகளை வழங்கும் தேசிய மாதிரி ஆய்வின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு கருப்பொருள் அமைந்துள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!